இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஏப்ரல் 7

பிரமாண்ட நீர்நிலை பொழுதுப்போக்கு பூங்காவில் பெண்களுக்கு மட்டும் தனி அனுமதி நேரம்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பார்க்' என்ற பெயரில் பிரமாண்டமான நீர்சார்ந்த பொழுதுப் போக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலகோடி டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுப் போக்கு பூங்காவிற்குள் கண்ணைக் கவரும் நீச்சல் குளங்கள், வணிக வளாகம், வீடியோ கேம்ஸ், உணவகம் என நவீன வசதிகள் அனைத்தும் சுற்றுலா வருபவர்களின் சிந்தையை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுடன் ஆண்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் இங்கு உல்லாசமாக பொழுதை கழித்து வருகின்றனர். இருப்பினும், இஸ்லாமிய மத கோட்பாடுகளின் படி, ஆண்கள் குளிக்கும் இடத்தில் தாங்களும் சேர்ந்து 
குளிப்பதை அபுதாபியில் வாழும் முஸ்லிம் பெண்கள் விரும்பவில்லை. 


பெண்கள் மட்டும் பொழுதை உல்லாசமாக கழிக்கும் வகையில் இந்த பொழுதுப் போக்கு பூங்காவில் தனிநேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகளை பரிசீலத்த பொழுதுப் போக்கு பூங்காவின் நிர்வாகிகள், ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து, வியாழன் தோறும் இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு வரை பெண்கள் மட்டும் இங்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அவ்வேளைகளில், ஆண்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்படும். 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மட்டும் வயதுக்கான சான்றிதழை காண்பித்து, உறவினர்களுடன் கேளிக்கையில் பங்கேற்கலாம் என 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பூங்கா'வின் பொது மேலாளர் மைக் ஓஸ்வால்ட் தெரிவித்துள்ளார்.

நன்றி : மாலை மலர் 

வரலாற்றில் இன்று.

உலக நலவாழ்வு நாள்

1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.
1541 - பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.
1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.
1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
1906 - வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.
1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
1933- ஜெர்மனியிலிருந்து அரசுப் பணிச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி ஹிட்லர் அனைத்து யூதர்களையும் அரசு பணிகளிலிருந்து நீக்கினார்.
1939 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.
1943 - யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
1947 - மோட்டார் வாகன உலகின் மன்னன் என்று போற்றப்படும் Henry Ford மரணம் அடைந்தார்.
1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.

1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.
1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.
1964 - ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.
1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
1978 - நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.
1983 - ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
1992 - ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.
1994 - ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.
2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.