இந்த வலைப்பதிவில் தேடு

சனி, செப்டம்பர் 21

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது (செப்.21, 2004)

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 


2684 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 160 மாடிகள் அமைந்துள்ளன. இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இக்கட்டிடத்தின் உரிமை ‘இமார்’ என்ற சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சார்ந்தது. இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பட்டது. அப்போது, துபை வேர்ல்டன் கடன் சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல் அவுட் செய்ததன் நன்றிக்கடனாக ‘புர்ஜ் கலிஃபா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நன்றி : மாலைமலர் 
http://www.maalaimalar.com/2013/09/20211033/dubai-burj-khalifa-constructio.html

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் மதீனா  தெரு ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் சகோதரி 

ஜெமிலா பீவி அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில். வ‌ஃபாத்தானார்..

ஜனாஸா திருலோக்கில் காலை 11.00 மணியளவில் அடக்கம் செய்யப்படும். 

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

ஞாயிறு, செப்டம்பர் 8

7வது அத்தியாயத்தின் முதல் கோடீஸ்வரர் தாஜ் முகம்மது ரங்ரீஸ்!

மும்பை: அமிதாப் பச்சன் நடத்தி வரும் 7வது கோன் பனேகா குரோர்பதி
 நிகழ்ச்சியின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை உதய்ப்பூரைச் 
சேர்ந்த வரலாற்று ஆசிரியர் தாஜ் முகம்மது ரங்ரீஸ் பெற்றுள்ளார். 2013 
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக வெற்றி பெற்று ரூ. 1 
கோடிப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். பரிசை வென்ற பின்னர் அவர் சொன்ன வார்த்தை - என்னால் நம்பவே முடியவில்லை என்பதே. ஒரு கோடியை வென்று தரும் கேள்வியை அமிதாப் பச்சன் கேட்டபோது அரங்கமே படு நிசப்தமாக காணப்பட்டது. ஆனால் ரங்ரீஸ் சூப்பராக பதிலை சரியாக சொல்லி அத்தனை பேரையும் உற்சாகக் கடலில் ஆழ்த்தினார்.

கோன் பனேகா குரோர்பதி -7வது அத்தியாயத்தின் முதல் கோடீஸ்வரர் தாஜ் முகம்மது ரங்ரீஸ்!

உதய்ப்பூரில் உள்ள லேக்ஸ் பதேகர் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருக்கிறார் ரங்ரீஸ். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். 
இவருக்கு பாதிப் பார்வை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் வென்றுள்ள பணத்தை வைத்து தனது மகளுக்கு மீண்டும் பார்வை முழுமையாக திரும்புதவற்கான சிகிச்சைகளை செய்யப் போவதாக கூறியுள்ளார் ரங்ரீஸ். 
மேலும் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். வசதியில்லாத 3 பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவி செய்யப் போகிறேன். இரண்டு ஆதரவற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ம் தேதி ரங்ரீஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சி சோனி டிவியில் 
ஒளிபரப்பாகவுள்ளது.