இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, நவம்பர் 22

இந்தியாவில் செல்போன் மணி ஆர்டர் முறை அமல்!

தபால் நிலையங்களில் மணி ஆர்டர் அனுப்பினால் 2 நிமிடங்களில் பணத்தை பெற்றுக்கொள்ளும் முறை தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.
 


தபால் நிலையங்களில் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பினால் அதனை பெற்றுக்கொள்ள ஒரிரு நாட்கள் ஆகிவிடும் என்ற நிலை இருந்தது. இதனால் மணி ஆர்டர் மூலம் பணம் அனுப்பும் பழக்கம் குறைந்து கொண்டே வந்தது....

இதையடுத்து இந்திய தபால்துறை செல்போன் மணி ஆர்டர் முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, பணம் யார் பெயருக்கு அனுப்பப்படுகிறதோ, அவருக்கு தபால் நிலையத்தில் இருந்து எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

சம்பந்தப்பட்ட நபர், தமது ஊரில் உள்ள தபால் நிலையத்தில் அந்த எஸ்.எம்.எஸ்-ஐ காட்டி பணத்தை பெற்று கொள்ள முடியும். ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை செல்போன் மணி ஆர்டரில் பணம் அனுப்பலாம்.
 
 

புதன், நவம்பர் 20

தட்ஸ்தமிழில் செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் துபாயில் இறந்த தமிழக இளைஞரின் அடையாளம் தெரிந்தது.

துபாய்: தட்ஸ் தமிழ் மற்றும் துபாய் ஈமான் அமைப்பின் உதவியால் துபாய் மருத்துவமனையில் இறந்த தமிழக இளைஞரின் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தட்ஸ்தமிழில் செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் துபாயில் இறந்த தமிழக இளைஞரின் அடையாளம் தெரிந்தது
துபாயில் பணிபுரிந்து வந்த தமிழக இளைஞர் சேகர் தங்கராஜ் (வயது சுமார் 30). உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மார்ச் மாதம் துபாய் ராஷித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி உயிர் இழந்தார்.

துபாய் ஈமான் அமைப்பு இந்திய கன்சுலேட் கேட்டுக்கொண்டதன் பேரில் இறந்த தமிழக இளைஞர் குறித்த விபரங்களை அறிய தட்ஸ் தமிழ் மூலம் புகைப்படத்தை வெளியிட்டது.

செய்தி வெளியிட்ட 24 மணி நேரத்தில் புகைப்படத்தைக் கண்ட அவரது உறவினர்கள் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோரை தொடர்பு கொண்டு விபரம் தெரிவித்தனர்.

இதன் விபரமாவது சேகர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் விநாயகனேந்தலைச் சேர்ந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் வந்துள்ளார். அதன் பின் குடும்பத்தினருடனான தொடர்பு முழுமையாக இல்லை. இதனிடையே அவரது தந்தை இறந்து விட்டார். தற்பொழுது ஊரில் அவரது அம்மா மற்றும் 2 தம்பிகள் உள்ளனர்.

அவரது அம்மாவின் விருப்பப்படி அவரின் உடல் இந்திய கன்சுலேட்டின் உதவியுடன் தாயகம் அனுப்ப துபாய் ஈமான் அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.

 
For More details : http://tamil.oneindia.in/news/international/youth-died-dubai-hospital-identity-found-after-article-published-187777.html
 
Courtesy : http://tamil.oneindia.in/ 

திங்கள், நவம்பர் 18

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் அல் ஜாமியா தெரு ஜனாப். இக்பால் அவர்களின்  தாயாரும் ,ராஜிக்
 
அவர்களின் பாட்டி  இன்று காலை வ‌ஃபாத்தானார்..
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.