சென்னை : நடப்பு 2012ம் ஆண்டில் குடும்ப அட்டைகளை புதுப்பிக்கும் காலம், வரும் 28ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நலன் கருதி, ஜன., 22, 29, பிப்ரவரி 5, 12 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில், குடும்ப அட்டை புதுப்பித்தல் மற்றும் பொருட்கள் வழங்கும் பணியை மேற்கொள்ள அனுமதித்தும், அதற்கு பதிலாக ஜன., 23, 30, பிப்ரவரி 6, 13ம் தேதிகளில், ரேஷன் கடைகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்று, கார்டுதாரர்கள் இல்லாத பட்சத்தில், அவர்களுக்கு பொருள் வினியோகத்தை நிறுத்தி வைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் என்ற செய்தி தவறானது. எந்த காரணத்தைக் கொண்டும், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்கள் நிறுத்தப்பட மாட்டாது. இவ்வாறு உணவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக