இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 25

அரசு விடுமுறை நாளில் பொதுத் தேர்வு-10ம் வகுப்பு மாணவர்கள் குழப்பம்!

திருநெல்வேலி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் ஏப்ரல் 4ந் தேதி, அரசு விடுமுறை என குறிப்பிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். 
4-ந் தேதி பொதுவிடுமுறை

பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஏப்ரல் 4ந் தேதி துவங்கி 23ந் தேதி வரை நடைபெறுகிறது. 4ந் தேதி தமிழ் முதல் நாள் என அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் 9ந் தேதி தமிழ் இரண்டாம் தாளுக்கான தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்வு தொடங்கும் ஏப்ரல் 4ந் தேதி மஹாவீர் ஜெயந்தி என அறிவித்து அரசு விடுமுறை என கலாண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை அன்று பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள், ஆசிரியர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது..

இதுகுறித்து உயர் கல்வி அதிகாரிகளிடம் கேட்டால் தேர்வுத்துறையில் இருந்து வந்த அட்டவணை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் ஏப்ரல் 4ந் தேதி 10ம் வகுப்பு பொது தேர்வு தொடங்குமா, என சந்தேகம் எழுந்துள்ளது.

இதுகுறித்து கல்வி துறை வட்டாரங்கள் கூறுகையில், பத்தாம் வகுப்பு பொது தேர்வு கால அட்டவணையில் ஏப்ரல் 5ந் தேதி மகாவீர் ஜெயந்தி என அன்றைய தினம் தேர்வுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் 6ந் தேதி புனித வெள்ளிக்கு விடுமுறையும், சனி, மற்றும் ஞாயிற்று கிழமையான 6, 7 தேதிகளில் விடுமுறை அளித்து 9ந் தேதி தமிழ் 2ம் தாள் நடைபெறுகிற என்கின்றனர்.

இதனால் மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 4ந்தேதியா, 5ந் தேதியா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இந்த குழப்பத்திற்கு அரசு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கை.

திங்கள், மார்ச் 19

எண்கள் பொறிக்கப்பட்டுள்ள குடிநீர் பாட்டில்கள்.

நம்மில் பெரும்பாலோனோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும்போது குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம் .Aquafina,Kinley,Bislery மேலும் இது போல பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துகிறோம் .

இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதுண்டு ஆனால் இந்த பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

அனைத்து குடி நீர் பாட்டில்களின் அடி பாகத்திலும் 1 முதல் 7 வரையிலானஎண்களில் ஏதாவது ஒரு எண் பொறிக்கப்பட்டிருக்கும்.இந்த எண்கள் அந்த பாட்டில் எந்த வேதிப்பொருளை கொண்டு தயாரிக்கப் பட்டது என்பதை உணர்த்தும்.

கீழ் கண்ட படத்தில் எண்களும் அதற்கான வேதிப்பொருளின் பெயரும் இடம் பெற்றுள்ளது .



இந்த வேதிபொருட்கள் அனைத்துமே மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது .இந்த பாட்டில்களிலுள்ள நீரை அருந்திவிட்டு எக்காரணம் கொண்டும் அதில் மீண்டும் வீட்டிலுள்ள நீரை நிரப்பி பயன்படுத்தக்கூடாது .
அவ்வாறு பயன்படுத்தினால் உடலுக்கு பெரும் தீங்குகள் ஏற்பட வாய்ப்புள்ளது .
குறிப்பிடும்படியாக கிராமங்களில் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதுபோன்ற பாட்டில்களில் குடி நீரை நிரப்பி பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள் .இதை முற்றிலும் தவிர்க்கவேண்டும் .

மேலும் புதிதாக வாங்கிய குடிநீர் பாட்டில்களையும் வெயில் படும் இடங்களில் வைக்கக்கூடாது .அப்படி வைத்தால் நீரில் வேதிப்பொருட்கள் எளிதில் கலந்துவிடும் .

இவற்றில் 1,3,6 ஆகிய எண்கள் பொறிக்கப்பட்டுள்ள பாட்டில்கள் மிகவும் தீங்கு விளைவிக்க கூடியவை . ஆகவே இனிமேல் தண்ணீர் பாட்டில் வாங்கும்போது கம்பெனி பெயரை பார்த்து அடியிலுள்ள எண்களையும் கவனித்து வாங்குங்கள் .தண்ணீர் காலியானதும் சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அதை அப்புறப்படுத்துங்கள்

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறப்பு: மத்திய அமைச்சர் நாராயணசாமி.

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்வரும் 15 நாட்களில் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக, கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினருக்கு அந்த பகுதியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால் போராட்ட குழுவினருக்கு பொது மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது.
 
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 15 நாட்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை திறக்கப்படும். அதன்பின் 2 மாதங்களில் 2-வது அணு உலை செயல்பட தொடங்கும்.

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாமல் இருந்ததில் எந்த வித உள்நோக்கமும் இல்லை. மு.க.அழகிரி மற்றும் பழனி மாணிக்கம் ஆகிய இரு அமைச்சர்களுமே சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக பிரதமரிடம் அனுமதி பெற்று இருந்தனர்.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி விவகாரம், திரிணாமுல் காங்கிரசின் உள்கட்சி விவகாரம். இந்த பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்படும்.

'தடம் புரண்டது' தினேஷ் திரிவேதியின் பதவி-ராஜினாமா செய்தார்!

டெல்லி: ஒரு வழியாக தான் நினைத்ததை சாதித்த விட்டார் மமதா பானர்ஜி. அவரது விருப்பத்திற்கு மாறாக செயல்பட்ட ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி விலகியே ஆக வேண்டும் என்று அவர் முரண்டு பிடித்ததைத் தொடர்ந்து தற்போது திரிவேதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Dinesh Trivedi 
கொல்கத்தாவிலிருந்து நேற்று மாலை டெல்லி கிளம்பிய மமதா இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தினேஷ் திரிவேதி என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார், கட்சியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு ராஜிநாமா கடிதம் அளிப்பதாக அவர் உறுதியளித்தார் என்றார் மமதா.

முன்னதாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய திரிவேதியும் தனது ராஜினாமா முடிவை உறுதிப்படுத்தினார். கட்சித் தலைவர் மம்தாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளேன். அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யும்படி மம்தா கேட்டுக் கொண்டார். கட்சித் தலைமை உத்தரவுக்குக் கட்டுப்படுவேன் என்றார் அவர்.

ரயில்வே பட்ஜெட்டில் அனைத்து பயணிகள் கட்டணத்தையும் ஏற்றி விட்டார் திரிவேதி. இதனால் மமதா கடும் அதிருப்தி அடைந்தார். இதையடுத்து திரிவேதியை தூக்கி விட்டு, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சராக உள்ள முகுல் ராயை ரயில்வே அமைச்சராக்குமாறு அவர் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

இதையடுத்து திரிவேதி ராஜினாமா கடிதம் அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை திரிவேதியும், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் மறுத்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது திரிவேதி விலகியுள்ளார். இதன் மூலம் கடந்த 5 நாட்களாக நி்லவி வந்த பெரும் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளார்.

இந்திய அரசியல் வரலாற்றில் பட்ஜெட் தாக்கல் செய்த சில நாட்களிலேயே ஒரு அமைச்சர் பதவி விலகுவது என்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. அவரது பதவி விலகலுக்கு பட்ஜெட்டே காரணம் என்பதும் இந்திய அரசியலில் புதிது.

புதன், மார்ச் 7

ரேஷன் கார்டு புதுப்பிக்கலயா...

ரேஷன் கார்டு புதுப்பிக்கலயா...கவலைப்படாதீங்க... ஆன்லைனில் அசத்துங்கஉங்கள் ரேஷன் கார்டை புதுப்பிக்க தவறிவிட்டீர்களா... கவலைப்படாதீங்க... மீண்டும் ஒருவாய்ப்பை அரசு வழங்கியுள்ளது. இந்த முறை உங்கள் நேரத்தை செலவிட்டு ரேஷன் கடைக்கு வரவேண்டாம். ஆன்லைனில் உங்கள் கார்டை புதுப்பித்துக் கொள்ளலாம். 
இது உண்மைதாங்க.தமிழகத்தில் நடைமுறையில் இருந்து வந்த ரேஷன் கார்டுகள் கடந்த ஆண்டுடன் காலாவதி ஆகிவிட்டது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் வகையில், 2012ம் ஆண்டு முதல் குடும்ப தலைவரின் கைவிரல் ரேகை, கண் கருவிழி அடையாளம் ஆகிவற்றுடன் ‘பயோமெட்ரிக்’ முறையில் புதிய ரேஷன் கார்டுகள் அச்சடித்து வழங்கப்பட்ட இருந்தது. ஆனால், அதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்பதால், இந்த ஒருவருடத்திற்கு மட்டும் தற்போதுள்ள ரேஷன் கார்டுகளையே நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஜனவரி 2 முதல் பிப்ரவரி 29ம் தேதி வரை ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டுகளை பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்தது.

அதோடு, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அவர்கள் வசதிக்காக ஞாயிற்றுக்கிழமையும் கார்டு புதுப்பிக்கும் பணி நடைபெற்றது.ஆனாலும், பலரால் வெளியூர் சென்றதாலும், பணி காரணமாகவும் ரேஷன் கார்டை புதுப்பிக்க முடியாததால், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்றுக் கொண்ட அரசு, இம்மாதம் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்த காலத்திற்குள் தங்களது ரேஷன் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளது.இந்த முறை கார்டை புதுப்பிக்க ரேஷன் கடைகளுக்கு செல்ல வேண்டாம். மாறாக, ஆன்&லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

அதாவது, http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இதில், ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012ம் ஆண்டிற்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும் மற்றொரு நகலை உரிய ரேஷன் கடையில் கொடுத்து பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்பவர்கள் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே பயன்படுத்துவோர் ஒருநகலை அவர்கள் ரேஷன் கார்டில் ஒட்டிக் கொண்டாலே போதுமானது.இந்த வாய்ப்பை தவறவிடாதீங்க...

ஞாயிறு, மார்ச் 4

2012 - புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

சென்னை, மார்ச். 3-

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை WWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.
 
பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்