இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மார்ச் 19

கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறப்பு: மத்திய அமைச்சர் நாராயணசாமி.

சென்னை: கூடங்குளம் அணுமின் நிலையம் எதிர்வரும் 15 நாட்களில் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டு காரணமாக, கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினருக்கு அந்த பகுதியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதனால் போராட்ட குழுவினருக்கு பொது மக்கள் ஆதரவு குறைந்து வருகிறது.
 
தமிழக அரசின் ஒத்துழைப்புடன் 15 நாட்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் உலை திறக்கப்படும். அதன்பின் 2 மாதங்களில் 2-வது அணு உலை செயல்பட தொடங்கும்.

நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது தி.மு.க.வைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இல்லாமல் இருந்ததில் எந்த வித உள்நோக்கமும் இல்லை. மு.க.அழகிரி மற்றும் பழனி மாணிக்கம் ஆகிய இரு அமைச்சர்களுமே சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரசாரம் காரணமாக நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்காக பிரதமரிடம் அனுமதி பெற்று இருந்தனர்.தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.க்கள் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ரயில்வே அமைச்சர் தினேஷ் திரிவேதி விவகாரம், திரிணாமுல் காங்கிரசின் உள்கட்சி விவகாரம். இந்த பிரச்சினை சுமுகமாக தீர்த்து வைக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக