இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், ஜூலை 26

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் பரகத் தெரு ஜனாப்.ரசாக் மற்றும் முஜிப்  அவர்களின் தகப்பனார்  ஜனாப்.அப்துல் கபூர்  சவுதி அரேபியாவில் இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

புதன், ஜூலை 25

2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை.

சென்னை, ஜுலை.25-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடந்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. 


இச்சலுகையை பெற விரும்பும் மனுதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 18.10.2012-க்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

1.01.2008-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேற்குறித்த காலக்கட்டத்தில் தங்களது பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக 18.10.2012-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இணையதளம் மூலம் பதிவினை புதுப்பிக்க இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

சனி, ஜூலை 21

ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 3,800 டன் அரிசி-ஜெ. உத்தரவு.

சென்னை: ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 3,800 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க தனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று உத்தரவிட்டார். அதன்படி பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை கனிவுடன் ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

ஆவணங்களை உரிய முறையில் ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைவதுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், ஜூலை 19

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து...

ர‌ம‌லான் வ‌ருகிற‌து !
ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிறது !


ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மான‌ம் செய்ய
திருநோன்பு வ‌ருகிறது


அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வ‌ருகிறது !
திரும‌றை வ‌ந்த‌
தேன்மாத‌ம் வ‌ருகிறது !


த‌க்வாவை கொஞ்சம்
த‌ட்டிடவே வ‌ருகிறது !
ஹக்கன‌வ‌ன் க‌னிவையும்
அறிவிக்க வ‌ருகிறது !


அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த‌ நல் அம‌லை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வ‌ருகிற‌து !


பத்திய மாத‌மென்று
பறைசாற்றி வ‌ருகிற‌து !
உத்த‌ம ஸஹாபாக்கள்
உவ‌ந்த‌ மாத‌ம் வ‌ருகிற‌து !


ப‌சியின் ருசியறிய
பாங்கோடு வ‌ருகிற‌து ! க‌ல்பில்
க‌சியும் ஈர‌த்தைக்
காட்டிட‌வும் வ‌ருகிற‌து !


கஸ்தூரி வாச‌ம்
க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ருகிற‌து !
கைக‌ளை ஈகையால்
அல‌ங்கரிக்க‌ வ‌ருகிற‌து !

ஏழை வீதிக‌ளும்
புன்ன‌கைக்க‌ வ‌ருகிற‌து
எல்லோர் ம‌ன‌ங்க‌ளுக்கும்
சுக‌ம் சேர்க்க‌ வ‌ருகிற‌து !


க‌லிமாவில் நாவெல்லாம்
க‌லந்திட‌ வ‌ருகிற‌து !
தொழுகை த‌வ‌றாதேயென‌
தூது சொல்லி வ‌ருகிற‌து !


லைல‌த்துல் க‌த்ரென்னும்
ர‌ம்மிய‌ இர‌வுத‌னை
தொழுகையால் அல‌ங்க‌ரிக்க‌
சோப‌ன‌மாய் வ‌ருகிற‌து !


அன்று ப‌த்ருப் போரில்
அண்ண‌லார்க்கு வெற்றியினை
த‌ந்து ப‌ரிச‌ளித்த‌
த‌னிமாத‌ம் வ‌ருகிற‌து !


நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாத‌ம் வ‌ருகிற‌து !
மாண்பில் நாம் ம‌கிழ‌ இபாத‌த்
ம‌ண‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !


ர‌மலான் வ‌ருகிற‌து
ந‌ல‌ம் கொண்டு வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிற‌து !


பொற்கிழி க‌விஞ‌ர் மு.ச‌ண்முக‌மாக இருந்த போது எழுதியவர்


இன்று

பொற்கிழிக் கவிஞர்



மு. ஹிதாயத்துல்லா


இளையான்குடி


நர்கிஸ்
செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
வெளியான கவிதை.

திங்கள், ஜூலை 16

108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு.

சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு சுகாதார திட்டம் மற்றும் ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனங்கள் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 470 ஆம்புலன்ஸ்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பு முகாம் சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய், சேய் நல மருத்துவமனையில் உள்ள 108 ன் தலைமையிடத்தில் நேற்று தொடங்கியது. 


முகாமை ஜி.வி.கே இஎம்ஆர்ஐ நிறுவன மண்டல மேலாளர் பிரபுதாஸ் தொடங்கி வைத்தார். நேற்று டிரைவர் பணியிடத்துக்கு மொத்தம் 40 பேர் நேர்முகத்தேர்வுக்கு வந்தனர். இவர்களில் தகுதியான 4 பேருக்கு உடனடி பணியாணை வழங்கப்பட்டது. மருத்துவ உத வியாளர் பணியிடத்துக்கு பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் வந்தனர். அவர்கள் அனைவருமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முறையான பயிற்சியும், அதை தொடர்ந்து 108 ல் பணியும் வழங்கப்படும்.
 
மொத்தம் 500 காலியிடங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. ஆனால் மழையால் நேற்றைய முகாமில் குறைந்த அளவு நபர்களே வந்து கலந்து கொண்டனர். எனவே முகாம் வரும் சில நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, ஜூலை 14

1,870 VAO பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாகவுள்ள 1,870 கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் அவ்வப்போது காலியாகி வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், காலியாக உள்ள மேலும் 1,870 இடங்களுக்கு எழுத்துத் தேர்வின் மூலமாக ஆள்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:

எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாணையத்தின் இணையதளத்தை (http://tnpsc.gov.in/) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே நிரந்தரப் பதிவு எண் வைத்திருப்பவர்கள் அதையே பயன்படுத்தி வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்புவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 10 ஆகும்.
வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசி நாளாகும்.
செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்புனர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 40 வயது வரை தேர்வு எழுதலாம்.
பாடத் திட்டம்:

பொது அறிவுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 
பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும்.
தேர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும்.
தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும்.விவரங்களுக்கு...:

விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் விவரங்கள் தேவையெனில் தேர்வாணைய அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (044-2829 7591 மற்றும் 2829 7584), கட்டணமில்லாத சேவை எண்ணிலோ (1800 425 1002) தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், ஜூலை 12

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்...


நமது ஊர் பரகத் தெரு ஜனாப்.நபீல் அவர்களின் தகப்பனார் மற்றும் சிராஜுதீன்அவர்களின் தம்பி ஜனாப்.அப்துல் முத்தலீப்(சேட்) இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

ஞாயிறு, ஜூலை 8

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் ரஹ்மத் தெரு ஜனாப்.ஷாஜஹான் மற்றும் அன்சாரி அவர்களின் தகப்பனார்  ஜனாப்.இஷாக் இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

வியாழன், ஜூலை 5

நமது ஊர் ஜனாப் (K.S.V)M.J.பஷீர் அவர்களின் இல்ல நிக்காஹ் அழைப்பிதழ்..

நமது ஊர் ஜனாப் (K.S.V)M.J.பஷீர் அவர்களின் இல்ல நிக்காஹ் அழைப்பிதழ்..




மணமக்களை வாழ்த்தும் துவா.

திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய - U.A.E யின்  மணமக்களுக்கு எங்களின் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்..



புதன், ஜூலை 4

எளிய மருத்துவ குறிப்புகள்.

எளிய மருத்துவ குறிப்புகள்

• முட்டைக்கோஸ், முள்ளங்கி, கோவைக்காய், பாகற்காய், வல்லாரைக்கீரை, காரட், எலுமிச்சை பழம் முதலியன ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

• கருவாடு, அதிக உப்பு ஊறுகாய, அப்பளம் போன்றவற்றை எல்லா வயதுகாரர்களும் தவிர்ப்பது நல்லது.

• காலையிலும், இரவிலும் அத்திப்பழத்துடன் பேரீச்சை சேர்த்து உண்டால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைக்க அத்திப்பழம் உதவுகிறது. உடம்பில் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.

• முளை நரம்புகளை வலுப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது வால்நட்

• ரத்த உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் 'கிரீன் டீ' ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வாய்துர்நாற்றத்தைப் போக்குகிறது. பருக்கள் வராமலும் காக்கும். ஞாபக சக்தியைப் பெருக்கும்.

• சாத்துக்குடி ஆரஞ்சு தோல் நோயையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.

• துளசி, தோல் நீக்கிய இஞ்சி சாப்பிட்டால் சளித்தொல்லை சரியாகும்.

• வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

• ஆப்பிள் நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.

• தக்காளி ரத்தத்தை விருத்தியாக்கும்.

நன்றி: மாலை மலர்...