இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூலை 16

108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு.

சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு சுகாதார திட்டம் மற்றும் ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனங்கள் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 470 ஆம்புலன்ஸ்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பு முகாம் சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய், சேய் நல மருத்துவமனையில் உள்ள 108 ன் தலைமையிடத்தில் நேற்று தொடங்கியது. 


முகாமை ஜி.வி.கே இஎம்ஆர்ஐ நிறுவன மண்டல மேலாளர் பிரபுதாஸ் தொடங்கி வைத்தார். நேற்று டிரைவர் பணியிடத்துக்கு மொத்தம் 40 பேர் நேர்முகத்தேர்வுக்கு வந்தனர். இவர்களில் தகுதியான 4 பேருக்கு உடனடி பணியாணை வழங்கப்பட்டது. மருத்துவ உத வியாளர் பணியிடத்துக்கு பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் வந்தனர். அவர்கள் அனைவருமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முறையான பயிற்சியும், அதை தொடர்ந்து 108 ல் பணியும் வழங்கப்படும்.
 
மொத்தம் 500 காலியிடங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. ஆனால் மழையால் நேற்றைய முகாமில் குறைந்த அளவு நபர்களே வந்து கலந்து கொண்டனர். எனவே முகாம் வரும் சில நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக