துபாய் ஈமான் அமைப்பின் உதவியுடன் தமிழக இளைஞர் பாஸ்கரன் உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை காலை ஜெபல் அலி மயானத்தில் நடைபெற்றது.
துபாயில் உள்ள அக்குரோ ஸ்பெஷலிஸ்ட் நிறுவனத்தில் தொழிலாளராக பணிபுரிய குடவாசல் வட்டம் பெருந்தரக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் கடந்த ஆண்டு அங்கு சென்றார். சில மாதங்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு பின்னர் அந்நிறுவனத்திற்கு தெரியாமல் வெளியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 29.04.2014 அன்று எதிர்பாராத வகையில் மரணமடைந்து விட்டார். இத்தகவல் அவரது மனைவி ஜெயபிரதாவுக்கு அக்குரோ நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் சபீர் மூலம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 02.06.2010 ஆம் ஆண்டு பாஸ்கரனுக்கும், ஜெயபிரதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.

இதனையடுத்து துபாய் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் ஆகியோர் இறுதிச் சடங்கினை துபாயிலேயே ஏற்பாடு செய்ய பாஸ்கரன் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து பாஸ்கரன் பணிபுரிந்து வந்த நிறுவனம் அவர் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் மனிதாபிமான அடிப்படையில் அந்நிறுவனத்தின் சபீர் உள்ளிட்ட ஊழியர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்று அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர். இறுதிச் சடங்கு இந்து முறைப்படி நடைபெற்றது. துபாய் இந்திய துணைத் தூதரகம் இதற்கான அனைத்து உதவிகளையும் செய்திருந்தது.
Read more at: http://tamil.oneindia.in/news/international/dubai-iman-sponsured-money-tamilian-s-funeral-204438.html

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக