இந்த வலைப்பதிவில் தேடு

புதன், நவம்பர் 28

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பர்தா அணிந்து உரையாற்றிய முதல் பெண் உறுப்பினர்.

இங்கிலாந்தில் இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் இளைஞர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 11 வயது முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவற்றை இங்கிலாந்து எம்.பி.க்கள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள்.


அந்த வகையில், மேற்கு லண்டனில் உள்ள வோக்கிங்காம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமையா கரிம் என்ற 16 வயத மாணவி, இங்கிலாந்து இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்றியது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது. காரணம், தலை மற்றும் கழுத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப்பை (பர்தா) அவர் அணிந்திருந்ததுதான்.

இதன்மூலம் பிரிட்டன் எம்.பி.க்கள் முன்னிலையில், ஹிஜாப் அணிந்து இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் நபர் என்ற பெருமையை கரிம் பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. ஹிஜாப் அணிந்து வந்தது தனது சொந்த தேர்வு என்று கரிம் கூறுகிறார்.

சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் !!

உலகிலேயே மிக நீளமான, உயரமான தொங்கு பாலம் சீனாவில் தான் உள்ளது சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.


மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத
் தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள்முற்றிலும் முடிவடைந்து விட்டதால், போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் தான் உலகி‌லேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் ஆகும்.

78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்க தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கு 50 கி.மீ வேகத்தில் தான் இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

திங்கள், நவம்பர் 26

உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலை கட்டும் துபாய்.

துபாய்: உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலையும், லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட பெரிய பூங்காவையும் கட்டப்போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.


ஏற்கனவே எக்கச்சக்க மால்கள் உள்ள துபாயில் விரைவில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டப்படும் என்று மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார். துபாய் நகரில் முகமது பின் ராஷித் சிட்டியை உருவாக்கவிருக்கின்றனர். மேலும் புதிய குடியிருப்புகளும் கட்டப்படவிருக்கின்றன.

இது தவிர லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட 30 சதவீதம் பெரிய பூங்காவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் மாலுக்கு ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள துபாய் மால் உள்ளிட்ட மால்கள், ஹோட்டல்களுக்கு இந்த ஆண்டு 62 மில்லியன் மக்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் சுற்றுலாத்துறை ஆண்டுக்கு 13 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு அங்குள்ள ஹோட்டல்களின் வருவாய் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. துபாயின் வளர்ச்சிக்கு புதிய வசதிகள் ஏற்படுத்துவது அவசியம் என்று மன்னர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, நவம்பர் 25

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்.

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்படுகிறது. தற்போது உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சீனா சாங்ஷா நகரில் இதை 
விட மிக உயரமான கட்டிடத்தை கட்டுகிறது. இது 838 மீட்டர் உயரம் அதாவது 2,749 அடி உயரம் கொண்டதாக இருக்கும். 

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்
220 அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடம் முழுவதும் ஏர்கண்டிசன் (குளு குளு வசதி) செய்யப்பட உள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்ட 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் இக்கட்டிடம் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் கட்ட தொடங்கி மார்ச் மாதம் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 அடுக்கு மாடிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனமே இதை கட்டி தனது சாதனையை முறியடிக்கிறது.

இதில், அதே கட்டுமான கலைஞர்களும், என்ஜினீயர்களும் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே உலகில் உள்ள மிக உயரமான 20கட்டிடங்களில் 9 கட்டிடங்கள் சீனாவில் உள்ளன.

வரலாற்றில் இன்று !

1758 - பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.
1795 - சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 - அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
1884 - Evaporated Milk செய்வதற்கான காப்புரிமத்தைப் பெற்றார் அமெரிக்கரான மெயின் பெர்க்


Indian Flag

1905 - டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.
1936 - ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1948 - இளையர்களுக்கான NCC எனப்படும் தேசிய மாணவர் படை தொடங்கப்பட்டது.
1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.
1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 - ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
1990 - போலந்தில் முதன் முதலாக அதிபர் தேர்தல் நடந்தது
1992 - செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.

வியாழன், நவம்பர் 22

பரசூட்டில் அலுவலகம் செல்லும் வினோத மனிதன்!

வீதிகளில் வகை வகையான வாகனங்கள் செல்கையில் பொது போக்குவரத்து பஸ்களும் வீதிகளில் பயணிக்கையில் சீனாவை சேரந்த ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்து நெறிசலை தவிர்த்துக்கொள்ளவும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்காகவும் சீனர் ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றார்.



சீனரான செங் டெக்ஸியா என்பவரே இத்தகைய விபரீத போக்குவரத்தை மார்க்கத்தை கடைபிடித்து வருகிறார். போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர் அலுவலகத்திற்கு செல்வதற்காக தினமும் 3 மணித்தியாலங்களை வீதியிலேயே செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நேரம் அநியாயமாக செலவாவதை தடுப்பதற்கும் அலுவலகத்திற்கு இலகுவில் செல்வதற்கான வழிமுறையாக பரசூட் மார்க்கத்தை கடைப்பிடித்துள்ளதுடன் பரசூட்டில் பறப்பதற்கான பயிற்சியையும் எடுத்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, தொழில்புரியும் நான் நகரின் பல்வேறு முனைகளுக்கும் பயணிக்கின்றேன். இதனால், பல மணித்தியாலங்களை போக்குவரத்து நெறிசலின்போது வீணாக செலவிட நேரிடுகின்றது. வாகன நெறிசல் மிக்க சாலையின் மேலே என்னால் இப்போது இலகுவாக பயணிக்க முடிகின்றது. பரசூட் மூலம் அலுவலகம் செல்வதற்கு சில நிமிடங்களே எடுக்கின்றன. இங்கு போக்குவரத்து நெறிசல் அதிகமாக காணபடுகின்றமையினால் என்னைப் போல பலரும்; இந்த போக்குவரத்து மார்க்கத்தையே கடைபிடித்து வருகின்றனர் என்றார்.

செவ்வாய், நவம்பர் 20

உஷார்... இண்டர்நெட்வாசிகளின் விவரங்களை கோருவதில் இந்தியாவுக்கு 2-வது இடமாம்!

சென்னை: இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 
இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது.


அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. நடப்பாண்டில் இதுபோல் 596தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!

ஞாயிறு, நவம்பர் 18

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு !

சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம், சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது.



டிசம்பர் 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும்.

இக்காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களும் வசிப்பிட, குடியேற்ற துறையுடன் தொடர்புக்கொண்டு சட்டப்பூர்வமான ஆவணங்களை பெறவோ அல்லது அவுட் பாஸைப் பெற்று சொந்த நாடுகளுக்கு திரும்பவோ செய்யலாம். இத்தகவலை அஸிஸ்டெண்ட் அண்டர் செகரட்டரி மேஜர் ஜெனரல் நாஸர் அல் அவாதி மின்ஹலி தெரிவித்துள்ளார்.

சனி, நவம்பர் 17

இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க..

சென்னை: இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதை எப்படி பத்திரமாக வைப்பது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில் பணம் எடுக்க, வேறு கணக்கிற்கு அனுப்ப வங்கிக்கு போக பலருக்கு நேரமில்லை. அதனால் அருகில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கிறார்கள், இன்டர்நெட் பேங்கிங் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறார்கள். தற்போது பலர் போன் பேங்கிங் செய்கின்றனர். அதாவது இன்டர்நெட் வசிதியுள்ள செல்போனில் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.

இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

1. யாராவது உங்களுக்கு போன் செய்து நாங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று கூறினால் உடனே அவர்கள் கேட்கும் தகவலைக் கொடுத்துவிடாதீர்கள். மாறாக நீங்களே வங்கிக்கு போன் செய்யுங்கள்

2. ஒன்றுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தால் அனைத்திற்கும் ஒரே பின் நம்பரை வைக்காதீர்கள்.

3. உங்கள் வங்கிக் கணக்கு பாஸ்வேர்டை கம்ப்யூட்டரில் சேவ் பண்ண வேண்டாம்.

4. போன் பேங்கிங் செய்பவர்கள் போனுக்கு செக்யூரிட்டி லாக் போடுங்கள்.

5. வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் பேசும்போது அதை பிறர் கேட்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

6. தேதி அல்லது எண்களை பின் நம்பராக வைக்க வேண்டாம்.

7. இன்டர்நெட் சென்டருக்கு சென்று ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்தால் அதை யாராவது பார்க்கிறார்களா என்று கவனிக்கவும். பரிவர்த்தனை முடிந்த பிறகு வங்கிக் கணக்கை லாக் அவுட் செய்ய மறக்க வேண்டாம்.

8. கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் ஆன்ட்டி வைரஸை அப்டேட் செய்யவும்.

செவ்வாய், நவம்பர் 13

சல்மான் குர்ஷித்துக்கு ஐக்கிய அரபு மந்திரி அழைப்பு.

புதுடெல்லி, நவ.13-

இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக கடந்த வாரம் பதவியேற்ற சல்மான் குர்ஷித்துக்கு, ஐக்கிய அரபு வெளியுறவுத்துறை மந்திரி, ஷேக் அப்துல்லா பின் ஸயெத், நேற்று தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.


இந்த உரையாடலின் போது, இந்தியா-ஐக்கிய அரபு இடையே ஏற்கெனவே வலிமையாக உள்ள உறவுகளை, மேலும் பலப்படுத்த இரு நாட்டு மந்திரிகளும் ஒப்புக் கொண்டனர்.

தங்கள் நாட்டுக்கு வருகை தரும்படி சல்மான் குர்ஷித்துக்கு,ஷேக் அப்துல்லா பின் ஸயெத் அழைப்பும் விடுத்தார்.

ஞாயிறு, நவம்பர் 11

உங்கள் விழிப்புணர்வுக்காக!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.


அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

உங்கள் விழிப்புணர்வுக்காக!

புதன், நவம்பர் 7

உங்களால் இந்த சிறுவனிடம் சவால்விட முடியுமா?

உக்ரைனைச் சேர்ந்த Andriy Kostash என்ற 7 வயதுச் சிறுவன் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக விளங்கும் புஸ்-அப் (Push-Ups)- பினை சுமார் 4,000 தடவைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு அசத்தியுள்ளார்.

இந்தச் சிறுவன் இத்தகைய உடற்பயிற்சியினை நிறைவேற்ற 2 மணி 29 நிமிடங்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை பார்த்தவுடன் நிற்காமல் பறக்கும் அரசு பஸ்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை பார்த்தவுடன் அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதுதவிர மேலும் சில அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் செஞ்சி அகரம், பனப்பாக்கம், பேரண்டூர், பாலவாக்கம், சூளைமேனி மற்றும் பல பகுதிகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். மாணவர்களுக்கு தமிழக அரசு, இலவச பஸ் பாஸ் வழங்கி உள்ளது. 



இந்த மாணவர்களை பார்த்தவுடன் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ்சை நிறுத்துவது கிடையாது. இதனால் மாணவர்கள் தங்கள் பகுதி வழியாக செல்லும் தனியார் பால் வேன், டிராக்டர் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் தொங்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்று படித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இன்று காலை பால் வேனில் சென்ற மாணவர்கள் கூறுகையில், ‘‘தாராட்சியில் இருந்து படிக்க செல்கிறோம். எங்கள் ஊருக்கு வரும் அரசு பஸ்கள் எங்களை ஏற்றாமல் வந்துவிட்டது. காசு கொடுத்தால்தான் ஆட்டோவில் ஏற்றி வருவார்கள். இதனால் பால்வேனில் வந்தோம்’’ என்றனர்.

செவ்வாய், நவம்பர் 6

ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா..

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
                ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2012
வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 41 ஆவது தேசிய தினத்தன்று ஷார்ஜா ரயான் ஸ்டார் இண்டர்னேஷன் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது.
 

முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

28.11.2012 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கஇருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.00 மணிக்கு புறப்படும்.
விழா சிறப்புடன் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன் ப‌திவு செய்யும் இட‌ங்க‌ள்

துபாய் :

தேரா / தமிழ் பஜார் : வி. க‌ள‌த்தூர் சாகுல் ஹ‌மீது : 050 883 48 49

டி பிளாக் : காய‌ல் ஈஸா : 055 40 63 711

அல் கூஸ் : திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் : 050 355 08 78 / 055 800 79 09


சோனாப்பூர் : சென்னை தமீம் அன்சாரி 050 2841 878
 

அஜ்மான் : ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் : 050 77 52 737
 

ம‌ற்றும்
 

முதுவை ஹிதாய‌த் : 056 684 71 20 / 050 51 96 433
கீழை ஹ‌மீது யாசின் : 050 475 30 52..

 விவரங்களை தெரிந்து கொள்ள www.imandubai.com யை பார்க்கவும்...

ஞாயிறு, நவம்பர் 4

ஐந்து வயது சிறுவனின் அபரீத திறமை..


தைரியம் என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாததொன்று. அந்த வகையில் ஐந்து வயது சிறுவன் பலரின் புருவங்களை உயரச் செய்துள்ளான். இன்றும் நாம் வளர்ந்து விட்டோம் அதில் எத்தனை பேர் துணிவாக வாகனத்தை ஓட முயற்சிகிறோம்.

ஆனால் சீனாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் front-end loader என்ற வாகனதை எவ்வளவு லாபகமாக கையாள்கிறான் என பாருங்கள். இது ஒட்டுமொத்த சிறுவர்களும் தைரியத்தையும், நம்பிக்கையையும் தரும் என்ற நம்பிக்கையில் இந்த காணொளியை இணைந்துள்ளோம்.

சனி, நவம்பர் 3

டிசம்பர் 1 முதல் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய முடியாது!!

சென்னை: டிசம்பர் 1ம் தேதி முதல் ரயிலின் அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்ய அடையாள அட்டை அவசியம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


ரயிலில் பயணம் செய்ய ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டுகள் தவறாக 
விற்பனை செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இந்த முறைகேட்டை தடுக்கும் வகையில் தட்கல் டிக்கெட் மூலம் பயணம் செய்பவர்களும், குளிர்சாதன வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்களும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 1ம் தேதி முதல் 2ம் வகுப்பு தூங்கும் வசதி, 2ம் வகுப்பு உட்காரும் வசதி, முதல் வகுப்பு, 3 அடுக்கு நடுத்தர வகுப்பு ஆகிய பிரிவினரும் முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். அந்த அடையாள அட்டையின் ஒரிஜினலை பயணத்தின் போது காட்ட வேண்டும்.

முன்பதிவு செய்திருந்தாலும் இனி அடையாள அட்டை இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அடையாள அட்டை அனைத்து பிரிவுகளுக்கும் 
கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.