இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஆகஸ்ட் 19

அதிக உணவு எடுப்பதை தவிர்ப்பது எப்படி?

நான் எப்போதும் அதிக உணவு எடுத்துக்கொள்கிறேன்... இதை எப்படித் தவிர்ப்பது?

டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் :

அதிகமாகச் சாப்பிடுகிறவரின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே கவலைப்பட வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டு உரிய உடல் உழைப்பு செய்யாவிட்டால் ரிஸ்க்தான். சிலர் சந்தோஷமாக இருக்கும்போதோ, துக்கமாகவோ நிறைய சாப்பிடுவார்கள். இதுவும் ஒரு வகையில் கெட்ட பழக்கமே. எப்போதுமே தேவையான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகம் சாப்பிடும் பழக்கத்திலிருந்து விடுபடுவது மிக எளிது. அதற்கு மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் போதும். 


சாப்பிடும் எண்ணம் வரும் போது கவனத்தை திசை திருப்ப வேண்டும். மனதுக்குப் பிடித்த வேறு வேலைகளில் ஈடுபடலாம். வீட்டில் இருக்கும் பெண்மணிகள்தான் இந்தப் பழக்கத்துக்கு அதிகம் ஆளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வாக்கிங் போல, ஒரு நடை வெளியே போய்விட்டு வந்து வீட்டு வேலைகளை கவனிக்கலாம். சாப்பிடும் எண்ணம் மறந்து போய்விடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக