இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், ஜூலை 20

துபாய் ஈத் பெருநாள் - நமது ஊர் நண்பர்கள்

துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் மக்கள் திரண்டனர்...





துபையில் ஈத் பெருநாள் திருப்பனந்தாள் மக்கள்  கோலாகல கொண்டாட்டம்...




நிகழ்வில் TPLJI - UAE வின் தலைவர்,ஊடகத்துறை செயலாளர், ஷார்ஜாஹ்,அஜ்மான்,அபுதாபி,AL AIN  நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  நிகழ்வில் கலந்துகொண்டனர் .

ஞாயிறு, ஆகஸ்ட் 31

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் இக்பால்  தெரு  ஜனாப்.அப்துல் காதர் அவர்களின் மகன் மற்றும்  பண்டாரி ஜனாப்.ஹாஜா அவர்களின் சகோதரர் ஜனாப் அரிப் அவர்கள் வஃபாத்தானார்..

ஜனாப்.அப்துல் காதர் அவர்கள் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் முன்னால் மோதினார் (பிலால்) என்பது குறிப்பிடத்தக்கது.

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வியாழன், ஆகஸ்ட் 21

துபாய் மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் தமிழருக்கு ஜெ. அரசு உதவி: புதுவைக்கு கொண்டு வரப்படுகிறார்.

துபாய்: துபாய் மருத்துவமனையில் கடந்த 12 மாதங்களாக கோமாவில் உள்ள தமிழக தொழிலாளி ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அதிமுக அரசின் உதவியோடு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். 
துபாய் மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் தமிழருக்கு ஜெ. அரசு உதவி: புதுவைக்கு கொண்டு வரப்படுகிறார்
துபாய் மருத்துவமனையில் கடந்த 2013ம் ஆண்டு ஜுன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் (41) தற்பொழுது கோமாவில் உள்ளார். அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்துவிட்டார். மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமாவில் இருந்து திரும்பவே இல்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகம் அனுப்பி வைக்குமாறு அவரது கம்பெனிக்கு அறிவுறுத்தியுள்ளது. 

அந்த கம்பெனி துபாயில் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகியது. அவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவிட துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. 
துபாய் மருத்துவமனையில் கோமாவில் இருக்கும் தமிழருக்கு ஜெ. அரசு உதவி: புதுவைக்கு கொண்டு வரப்படுகிறார்
இதனையடுத்து தமிழக அரசு மறுவாழ்வுத்துறை கமிஷனர் அலுவலக கடிதம் எண் E1 / 3703 /2014 dt. 02.05.2014 துபாய் இந்திய துணைத் தூதரகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. இப்பணிகளுக்கு மறுவாழ்வுத்துறை இயக்குநரகத்தின் கமிஷனர் ஆனந்த் ( 044-28515288 ), துணை ரிஜிஸ்டர் மோகன்ராஜ் ( 044-28525648 ) மற்றும் அவரது அலுவலக நலத்துறை அலுவலர் உள்ளிட்டோர் மனிதாபிமான அடிப்படையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க அனுமதி பெற்றுள்ளனர். நடராஜனின் குடும்பத்தினர் புதுச்சேரியில் இருப்பதால் அவரை ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கின்றனர். இதனையடுத்து நடராஜன் இன்று இரவு ஏர் இந்தியா விமானம் ஏஐ 906 மூலம் புறப்பட்டு நாலை காலை 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தை அடைகிறார். 

அதன் பின்னர் தமிழக அரசின் 108 அவசர ஊர்தி சேவை மூலம் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவார். அவருடன் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ முஹம்மது தாஹா, மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், பவர் குரூப் அலுவலர் கோவை தேவராஜ், துபாய் மருத்துவமனையின் செவிலியர் உள்ளிட்டோர் வருகின்றனர். ஜிப்மர் மருத்துவமனைக்கு காலை 10 மணியளவில் சேரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/international/tn-government-helps-coma-patient-209209.html

புதன், ஆகஸ்ட் 20

வளைகுடா நாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரிப்பு: சர்வேயில் தகவல்.

துபாய்: வளைகுடா நாடுகளில் உள்ள நிறுவனங்களில் மூன்றில் இரண்டு நிறுவனங்கள் வரும் 3 மாதங்களில் வேலைக்கு புதிய ஆட்களை தேர்வு செய்யும் என்று வேலை வாய்ப்பு இணையதளமான பைத்.காம் செய்த சர்வே மூலமாக தெரிய வந்துள்ளது. 67% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை தேர்வு செய்யலாம் அதில் 64% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு புதிய வேலைக்கு தேர்வு செய்ய உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சர்வேயில் கலந்து கொண்ட 218 அமீரக நிறுவனங்களில் 75% நிறுவனங்கள் வரும் 3 மாதம் முதல் ஒரு வருடத்திற்குள் புதிய வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும் இதில் 21% நிறுவனங்கள் 6லிருந்து 10பேரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்யலாம். இதில் 36% பேர் ஜூனியர் எக்ஸிகியூடிவ் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

உடனடியாக தேர்ந்தெடுக்கப்படும் வேலைகளில் 19% சேல்ஸ் மேனேஜர் வேலைக்கும், 15% கஸ்டமர் சர்வீஸ் பிரதிநிதிகளுக்கும்,14% மனித வள மேம்பாட்டு வல்லுநர் வேலைக்கும்., 14% ப்ராஜெக்ட் மேனேஜர் வேலைக்கும் 14% எக்ஸிகியூடிவ் அஸிஸ்டென்ட் வேலைக்கும் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா நிறுவனங்களில் 62% நிறுவனங்கள் நிச்சயமாக அல்லது அனேகமாக புதிய ஆட்களை வரும் 3 மாதங்களுக்குள் தேர்வு செய்யலாம். 41% பன்னாட்டு நிறுவனங்கள் நிச்சயமாக வேலைக்கு ஆட்கள் என்று தெரிவித்துள்ளன.

பொதுவாக வளைகுடா நாடுகளில் வரும் 3 மாதத்திலிருந்து 1 வருடத்திற்குள் வேலை வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக வேலை வாய்ப்பு இணையத்தின் துணைத் தலைவர் சுஹைல் தெரிவித்துள்ளார். இது இந்த நாட்டிலுள்ள வல்லுனர்களுக்கு உலகின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களில் கால் பதிக்கும் வாய்ப்பாக அமையலாம் என்று கருதப்படுகிறது. 37% பொதுத்துறை நிறுவனங்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் வேலைக்கு ஆட்கள் எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளன. பெருபாலான நிறுவனங்கள் ஜூனியர் அல்லது மிடில் லெவல் எக்ஸிகியூடிவ் வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும். இந்த சர்வேயில் கலந்து கொண்ட மற்ற வளைகுடா நாடுகளிலும் வேலை வாய்ப்பு நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சர்வேயில் கலந்து கொண்ட 342 சவுதி அரேபிய நிறுவனங்களில் 40% நிறுவனங்கள் நிச்சயமாகவும் 31% நிறுவனங்கள் அனேகமாகவும் அடுத்த 3 மாதங்களில் வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக தெரிவித்துள்ளன.

Courtesy : http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=105937

செவ்வாய், ஆகஸ்ட் 19

அதிக உணவு எடுப்பதை தவிர்ப்பது எப்படி?

நான் எப்போதும் அதிக உணவு எடுத்துக்கொள்கிறேன்... இதை எப்படித் தவிர்ப்பது?

டயட்டீஷியன் தாரிணி கிருஷ்ணன் :

அதிகமாகச் சாப்பிடுகிறவரின் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டால் மட்டுமே கவலைப்பட வேண்டும். அதிகமாகச் சாப்பிட்டு உரிய உடல் உழைப்பு செய்யாவிட்டால் ரிஸ்க்தான். சிலர் சந்தோஷமாக இருக்கும்போதோ, துக்கமாகவோ நிறைய சாப்பிடுவார்கள். இதுவும் ஒரு வகையில் கெட்ட பழக்கமே. எப்போதுமே தேவையான அளவு மட்டுமே சாப்பிட வேண்டும். அதிகம் சாப்பிடும் பழக்கத்திலிருந்து விடுபடுவது மிக எளிது. அதற்கு மனதை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் போதும். 


சாப்பிடும் எண்ணம் வரும் போது கவனத்தை திசை திருப்ப வேண்டும். மனதுக்குப் பிடித்த வேறு வேலைகளில் ஈடுபடலாம். வீட்டில் இருக்கும் பெண்மணிகள்தான் இந்தப் பழக்கத்துக்கு அதிகம் ஆளாவார்கள். அப்படிப்பட்டவர்கள் அவ்வப்போது வாக்கிங் போல, ஒரு நடை வெளியே போய்விட்டு வந்து வீட்டு வேலைகளை கவனிக்கலாம். சாப்பிடும் எண்ணம் மறந்து போய்விடும்.

நாள் முழுதும் விட்டு விட்டு இருமலா...நுரையீரல் நோயின் அறிகுறியாக இருக்கும்.

பெண்கள் சமைக்கும்போது சமையல் நெடி காரணமாக இருமுவார்கள். அது இருமலல்ல. சிலர் காலையில், மதியத்தில், மாலையில் என ஒரு சில தடவை இருமுவார்கள். அது பழக்கத்தின் காரணமாக வருவது. அது இருமலல்ல. நாள் முழுவதும் விட்டு விட்டு இருமுவார்கள். அது இருமலாகும். சில நாட்கள் இருமியவர்களுக்கு அது பழக்கமாகி வழக்கமாகி விடும். சில மாதங்களாக இருமிக்கொண்டு இருப்பார்கள். அதை தொந்தரவாக கருதாமல் இயல்பாக எடுத்து கொள்வார்கள். அது ஆபத்தானது.

2 வாரத்திற்கு மேல் தொடரும் இருமல் பல்வேறு நுரையீரல் நோய்களுக்கு அறிகுறியாக இருக்கக்கூடும். அதை மருத்துவ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தி கொண்டு, அதற்குரிய சிகிச்சை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நோய் முற்றிய நிலையில் குணப்படுத்துவது கடினமாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

2 வாரத்திற்கு மேல் இருமல் இருந்தால் சிலருக்கு தும்மல், கண்ணில் நீர் வடிதல், மூக்கில் நீர் வடிதல் ஏற்படும், அது ஒவ்வாமையின் (அலர்ஜி) அறிகுறி. சிலருக்கு மூக்கடைப்பு, தலைக்கனம் இருக்கும், அது சைனஸ் நோய்க்கான அறிகுறி. சிலருக்கு மூச்சு விட முடியாமல் இளைப்பு ஏற்படும், அது ஆஸ்த்மா நோய்க்கான அறிகுறி.

இது 3 வாரத்திற்கு மேல் இருமல், இருந்தால் சிலருக்கு நெஞ்சுகரிப்பு, தொண்டை வலி, உமிழ்நீர் அதிகளவில் சுரத்தல், வாந்தி வரும். இதுவும் நுரையீரல் தொடர்பான நோய். சிலருக்கு சோர்வு, உடல் இளைப்பு, வியர்வை கொட்டுதல், மாலையில் காய்ச்சல் வருவது போல் இருந்தால் அது காசநோயின் அறிகுறி. தொடர் இருமல், சளியுடன் ரத்த துளிகள் வந்தால் அது புற்றுநோயின் அறிகுறி.

இதில் அலர்ஜி, சைனஸ், ஆஸ்த்மா ஆகியவை பெரும்பாலானோருக்கு குளிர்காலத்தில் மட்டும் வரும். மருந்து, மாத்திரை மூலம் கட்டுப்படுத்தலாம். நெஞ்சுகரிப்பு, உமிழ்நீர் அதிகளவில் சுரத்தல், வாந்தி ஆகியவற்றிற்கு மருந்து, உணவு மற்றும் பழக்க வழக்கம் மாறுதல் மூலம் குணப்படுத்தலாம். காசநோய்க்கு 9 மாதம் தொடர் சிகிச்சை பெற்று குணப்படுத்தலாம்.

இவ்வாறு சிகிச்சை மேற்கொள்ளாமல் இருமலோடு பழக்கமாகி, வழக்கமாக்கி கொண்டால் பாதிப்புகள் அதிகம். சிகிச்சை அதிகம் தேவைப்படும். குணமாக்குவதில் சிக்கல் ஏற்படும். இதை தவிர்க்க 2 வாரத்திற்கு மேல் தொடர் இருமல் இருந்தால் உடனடியாக நுரையீரல் நோய் சிகிச்சை பிரிவில் பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற வேண்டும். இதில் உள்ள நோய்களின் அறிகுறிகளுக்கேற்ப எக்ஸ்ரே, சளி டெஸ்ட், எண்டோஸ்கோபி டெஸ்ட் உள்ளிட்ட தேவையான பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.

Courtesy : http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=2749&cat=500

திங்கள், ஆகஸ்ட் 4

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

திருவாய்ப்பாடி மெயின் ரோடு  ஜனாப்.சையத் அலி ( BISMI CONSTRUCTION OWNER ) அவர்களின் தகப்பனார் ஜனாப்.அப்துல் ரஷீத்  இன்று இரவு  வஃபாத்தானார்..

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

புதன், ஜூலை 30

திருப்பனந்தாளில் ஈத் பெருநாள் தொழுகை :

திருப்பனந்தாள் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் ஈத் பெருநாள் தொழுகை மக்கள் கோலாகல கொண்டாட்டம்:







Photo's Taken By : Mr.Jafar (Chief Advisor of IYWA) & IYWA TEAM.

செவ்வாய், ஜூலை 29

துபாய் ஈத் பெருநாள் - நமது ஊர் நண்பர்கள்

துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் மக்கள் திரண்டனர்...






துபையில் ஈத் பெருநாள் திருப்பனந்தாள் மக்கள்  கோலாகல கொண்டாட்டம்...






நிகழ்வில் TPLJI - UAE வின் பொது செயலாளர்,பொருளாளர்,இணைபொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், ஷார்ஜாஹ்,அஜ்மான்,அபுதாபி,AL AIN  நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  நிகழ்வில் கலந்துகொண்டனர் .

இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

அனைவருக்கும்  இனிய  ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.


வியாழன், ஜூலை 17

ஐஸ்லாந்து நோன்பு !!

ஐரோப்பியா கண்டத்தில் உள்ள ஐஸ்லாந்து (IceLand) நாட்டில் நம் சகோதர, சகோதரிகள் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்கும் நேரம் எவ்வளவு தெரியுமா?? மொத்தம் ஒரு நாளைக்கு 22 (இருபத்திரண்டு) மணி நேரங்கள் ‪#‎சுபஹானல்லாஹ்‬...!! வெறும் இரண்டு மணி நேர இடைவெளியில் மகரிப் தொழுகை மற்றும் இஷா அதனுடன் தராவேஹ் தொழுகைகள் போக உணவு உட்கொள்ளுதல் என பொழுதை கழிக்கிறார்கள்..!!!

ஏனென்றால்
சூரிய உதயம் அதிகாலை 3:40 , சூரிய அஸ்தமனம் இரவு 11:30. அதாவது
சலாஹ் அல் பஜர் :   2:28 அதிகாலை
சலாஹ் அல் லுகர்  : 1:34 மதியம்
சலாஹ் அல் அசர் :   6:14 மாலை
சலாஹ் அல் மக்ரிப் : 11:10 இரவு
சலாஹ் அல் இஷா : 12:29 இரவு

‪#‎யா_அல்லாஹ்‬ இந்த மக்களுக்கு பரக்கத்தை அளிப்பாயாக ..!!

இதில் நாம் சிந்திக்க வேண்டிய விஷயம் மிக மிக அதிகம் இந்த கண்ணொளியை கண்ட பிறகு நேரம் நமக்கு போதவில்லை என நிச்சயம் கூறமாட்டோம்..!!!!

ஞாயிறு, ஜூன் 29

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் பள்ளிவாசல் தெரு  ஜனாப்.முஹம்மது இப்ராஹிம் அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தானார்..முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் முன்னால் மோதினார் (பிலால்) என்பது குறிப்பிடத்தக்கது.

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வியாழன், ஜூன் 26

துபாய்: ஈமான் அமைப்பின் உதவியுடன் தமிழக இளைஞர் உடலுக்கு இறுதிச் சடங்கு.

துபாய் ஈமான் அமைப்பின் உதவியுடன் தமிழக இளைஞர் பாஸ்கரன் உடலுக்கு இறுதிச் சடங்கு நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை காலை ஜெபல் அலி மயானத்தில் நடைபெற்றது.


துபாயில் உள்ள அக்குரோ ஸ்பெஷலிஸ்ட் நிறுவனத்தில் தொழிலாளராக பணிபுரிய குடவாசல் வட்டம் பெருந்தரக்குடி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் கடந்த ஆண்டு அங்கு சென்றார். சில மாதங்கள் அந்நிறுவனத்தில் பணிபுரிந்து விட்டு பின்னர் அந்நிறுவனத்திற்கு தெரியாமல் வெளியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 29.04.2014 அன்று எதிர்பாராத வகையில் மரணமடைந்து விட்டார். இத்தகவல் அவரது மனைவி ஜெயபிரதாவுக்கு அக்குரோ நிறுவன மனிதவள மேம்பாட்டுத்துறை அலுவலர் சபீர் மூலம் தெரிவிக்கப்பட்டது. கடந்த 02.06.2010 ஆம் ஆண்டு பாஸ்கரனுக்கும், ஜெயபிரதாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை.



இதனையடுத்து துபாய் ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் ஆகியோர் இறுதிச் சடங்கினை துபாயிலேயே ஏற்பாடு செய்ய பாஸ்கரன் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து பாஸ்கரன் பணிபுரிந்து வந்த நிறுவனம் அவர் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் மனிதாபிமான அடிப்படையில் அந்நிறுவனத்தின் சபீர் உள்ளிட்ட ஊழியர்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்று அதற்கான செலவுகளை ஏற்றுக்கொண்டனர். இறுதிச் சடங்கு இந்து முறைப்படி நடைபெற்றது. துபாய் இந்திய துணைத் தூதரகம் இதற்கான அனைத்து உதவிகளையும் செய்திருந்தது.

Read more at: http://tamil.oneindia.in/news/international/dubai-iman-sponsured-money-tamilian-s-funeral-204438.html

திங்கள், ஜூன் 23

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் பள்ளிவாசல் தெரு  ஜனாப்.இமாம் அலி அவர்களின் தாயார் ரம்ஜான் பீவி அவர்கள் இன்று வஃபாத்தானார்..

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.