இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், பிப்ரவரி 24

'வாட்ஸ்அப்' கண்டுபிடிப்பாளரின் போராட்டம் நிறைந்த வாழ்க்கை.

சான்பிரான்சிஸ்கோ: பிரபல, 'வாட்ஸ்அப்' தொழில்நுட்பத்தால், 1,200 கோடி ரூபாய்க்கு அதிபதியான, ஜான் கூமின், கடந்த கால வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது.
WhatsApp Messenger for Symbian
உலகம் முழுவதும், மொபைல் போன் பயன்பாட்டாளர்களிடையே, 'வாட்ஸ்அப்' மென்பொருள் புகழ் பெற்று விளங்குகிறது. தங்கள் கையில் உள்ள, மொபைல் போன் மூலம், உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ளவர்களுடன், குறுஞ்செய்திகள் மற்றும் படங்களை எளிதாக, குறைந்த கட்டணத்தில் அனுப்பி வருகின்றனர். கடந்த வாரம், இந்த மென்பொருளை, 'பேஸ்புக்' சமூக வலைதளம், 1.15 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியதுடன், ஜான் கூமை, தன்னுடைய இயக்குனர்கள் குழுவில் ஒருவராக நியமித்தது. ஆனால், ஜான் கூம், இந்த நிலையை அடைய, பெரும் போராட்டம் நடத்தியுள்ளார். சோவியத் யூனியன் உடைந்த பிறகு, உக்ரைனில், யூதர்களுக்கு எதிரான போலீசாரின் அடக்குமுறையில் இருந்து தப்பித்து, தாயுடன், அமெரிக்காவிற்கு குடியேறிய கூம், பழைய நோட்டுப் புத்தகங்களுடன், ஒரு வேளை உணவுக்காக வரிசையில் காத்திருக்க நேரிட்டது. பின்னர், ஒரு மளிகைக் கடையில், தரையை சுத்தம் செய்யும் பணியை செய்தவாறு, கல்லூரி படிப்பை முடித்தார். அவருடைய தாய்க்கு புற்றுநோய் தாக்கியிருப்பதை அறிந்த அமெரிக்க அரசு, மருத்துவத்திற்காக நிதியுதவி அளித்தது. கல்லூரி படிப்பை முடித்த பிறகு, சிலிகான் வேலியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் பாதுகாப்பு நிறுவனப் பணியில் சேர்ந்தார். அங்கு, கலிபோர்னியாவைச் சேர்ந்த, பிரையன் ஆக்டன் நண்பரானார். கூமின் தாய் இறந்த பின், அவருக்கு ஆக்டன் ஆதரவளித்தார்; இருவரும் இணைந்து யாகூவில் பணியாற்றியவாறு, தங்களுடைய கண்டுபிடிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2007ல், யாகூவை விட்டு வெளியேறிய பின், மொபைல் போன்களில் பயன்படுத்தும், 'வாட்ஸ்அப்' அப்ளிகேஷனை வெற்றிகரமாக தயாரித்து செயல்படுத்தினர்.

இன்று, பேஸ்புக், டுவிட்டரை விட, அதிகளவில், இந்த அப்ளிகேஷனை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எந்த இடத்தில், ஒரு வேளை உணவுக்காக, தன் தாயுடன் வரிசையில் நின்றாரோ, அதே சிலிகான் வேலி பகுதியில் அமைந்துள்ள, பேஸ்புக் நிறுவனத்தின் அலுவலகத்தில், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். பதினாறு வயதில் இருந்து போராடத் துவங்கிய கூம், தன்னுடைய, 38வது வயதில் கோடீஸ்வரராகி சாதித்துள்ளார்.

Courtesy  : http://www.dinamalar.com/news_detail.asp?id=922171

ஞாயிறு, பிப்ரவரி 23

சென்னையில் இனி சில்லரைக்கு தட்டுப்பாடு இல்லை : 30 இடங்களில் நாணயம் வழங்கும் இயந்திரம்.

சென்னை: இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், சென்னையில், 30 இடங்களில், தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா, நேற்று, அடையாறில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகத்தில் நடந்தது. சில்லரை தட்டுப்பாட்டை போக்க, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து, சென்னை நகரில், 30 இடங்களில், தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளன.

இதன் திறப்பு விழா, அடையாறு இந்தியன் வங்கி கிளையில், நேற்று நடந்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் மண்டலத் தலைவர், சதாகதுல்லா, தானியங்கி இயந்திரத்தை, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த இயந்திரத்தில், 10 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை சில்லரை மாற்றலாம். தேவைக்கு ஏற்ப, 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும், 5 ரூபாய் நாணயமாக, சில்லரையை பெற்றுக் கொள்ளலாம்.

""இந்த இயந்திரங்களை, பஸ் நிலையம், கோவில் மற்றும் ரயில் நிலையங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது,'' என, இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர், பாசின் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் நரேந்திரா, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் மகேஷ்குமார் ஜெயின் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏ.டி.எம்., பாதுகாப்பு : ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதாகத்துல்லா கூறியதாவது: ஏ.டி.எம்., மையங்களை பொறுத்தவரை, பெங்களுரூ போல், தமிழகத்தில் இதுவரை அசம்பாவிதம் ஏற்படவில்லை. அனைத்து, ஏ.டி.எம்., மையங்களிலும், கண்காணிப்பு கேமரா பொரு த்துவது அவசியமாக்கப்பட்டுள்ளது.மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் செயல்படும், ஏ.டி.எம்., மையங்கள், இரவில் பூட்டப்பட்டு, பகலில் மட்டுமே செயல்படுகின்றன. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வேறு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஏ.டி.எம்., மையம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


Courtesy  : http://business.dinamalar.com/news_details.asp?News_id=29397&cat=1

செவ்வாய், பிப்ரவரி 18

பொது அறிவில் அசத்திய 2–ம் வகுப்பு மாணவி: 6 நிமிடத்தில் உலக நாடுகளை பட்டியலிட்டு சாதனை.


மதுரை, பிப். 15–

மதுரை வண்டியூரை சேர்ந்தவர் முகம்மது இஸ்மத்துல்லா. இவரது மகள் ஆஷிமா பர்ஜிஸ் (வயது 7). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் 2–ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே பொது அறிவில் மாணவி ஆஷிமா சாதனை படைத்து பலரையும் கவர்ந்து வருகிறார்.
நாட்டின் அனைத்து பொது தகவல்களையும் உடனுக்குடன் தெரிவித்து அசத்தி வருகிறார். இவரது திறமையை வெளிப்படுத்தும் வகையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் ரோட்டரி கிளப் சார்பில் இன்று சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட மாணவி ஆஷிமா 196 நாடுகள், அதன் தலைநகரங்கள், இந்தியாவின் 26 மாநிலங்கள், அதன் தலைநகரங்கள் போன்றவற்றை நொடிப் பொழுதில் தெரிவித்து அசத்தினார்.

இதேபோல் 1947–ம் ஆண்டு முதல் இந்தியாவில் பதவி வகித்த ஜனாதிபதிகள், பிரதமர்கள், மாநில கவர்னர்கள், முதல்வர்கள் ஆகியோரையும் அவர் 6 நிமிடத்தில் பட்டியலிட்டு சாதனை படைத்தார்.

பொது அறிவு தொடர்பாக பலர் கேட்ட கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதிலளித்து வியப்பில் ஆழ்த்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் சால்வை அணிவித்து மாணவி ஆஷிமாவை பாராட்டினார். தொடர்ந்து ரோட்டரி கிளப் சார்பில் மாணவி ஆஷிமாவுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

Courtesy :www.imandubai.com 

ஞாயிறு, பிப்ரவரி 16

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் வைத்திருந்தால் சுங்கத்துறையிடம் தெரிவிக்க வேண்டும்: புதிய திட்டம்.

புதுடெல்லி, பிப்.16-
வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியா வரும் விமானப் பயணிகள் தங்களிடத்தில் இந்தியப் பணம் 10,000க்கு மேல் வைத்திருந்தால் அதனை
அறிவிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை கடந்த 10-ஆம் தேதியன்று இந்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி அவர்கள் கொண்டுவரும் கைப்பைகள் உட்பட அனைத்து சாமான்களின் எண்ணிக்கையையும் இந்தியாவிற்குள் வரும்போது அவர்கள் குறிப்பிட வேண்டியிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் புதிய விதிமுறைகளின்படி, இந்தியப் பயணி ஒருவர் வெளிநாடு செல்லும்போது மட்டுமே குடியேற்ற படிவத்தை நிரப்பவேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியப் பிரஜைகளுக்கு இத்தகைய படிவங்கள் அளிக்கப்படமாட்டாது.

இருப்பினும், இந்தியா வரும் பயணிகள் தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள், தங்க நகைகள் (இலவச அனுமதிக்கு மேற்பட்டது), 10,000-க்கு மேற்பட்ட இந்தியப் பணம் போன்றவற்றின் விபரங்களை இந்திய சுங்கப் பிரகடன படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

இந்த விபரங்கள் சோதனையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளுக்கு உபயோகமாக இருக்கும். இதுமட்டுமின்றி, இந்த பயணிகள் கடந்த ஆறு நாட்களின் பயண விபரங்களையும், தங்களுடைய பாஸ்போர்ட் எண்ணையும் புதிய படிவத்தில் குறிப்பிட்டாக வேண்டும். உடைமைகள் குறித்த புதிய நிரலுடன் முன்னதாகவே நடைமுறையில் இருக்கும்

சாட்டிலைட் தொலைபேசி உள்ளிட்ட அனைத்து பிற விபரங்களும் இந்தப் புதிய படிவத்தில் நிரப்பப்படவேண்டும் என்று நிதித்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 19 சர்வதேச விமான நிலையங்களிலும் இந்த விதிமுறைகள் வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நன்றி : மாலைமலர்

வரலாற்றில் இன்று...

  • 1568 - நெதர்லாந்தின் அனைத்து மக்களுக்கும் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையினரால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
  • 1796 - ஆங்கிலேயர் கொழும்பை டச்சுக்களிடம் இருந்து கைப்பற்றினர்.
  • 1934 - ஆஸ்திரியாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1937 - வொலஸ் கரோத்தேர்ஸ் நைலோனுக்கான காப்புரிமம் பெற்றார்.
  • 1945 - முதல் தடவையாக அமெரிக்கப் போர் விமானம் டோக்கியோவைத் தாக்கியது.
  • 1945 - அமெரிக்கப் படைகள் பிலிப்பீன்சின் பட்டான் குடாவை மீளக் கைப்பற்றினர்.
  • 1947 - 80 ஆண்டுகளாக பிரித்தானியர்களாக இருந்த கனேடியர்கள் முதற்தடவையாக கனேடிய குடியுரிமையைப் பெற்றனர். பிரதமர் வில்லியம் லியோன் மக்கென்சி முதலாவது குடியுரிமையைப் பெற்றார்.
  • 1956 - மரண தண்டனையை ஒழிக்கும் சட்டத்தைப் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் நிறைவேற்றியது.
  • 1959 - ஜனவரி 1 இல் புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.
  • 1980 - இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான வானியல் நிகழ்வுகளுள் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது.
  • 1980 - உலகிலேயே மிகப் பெரிய போக்குவரத்து நெரிசல் பிரான்சில் ஏற்பட்டது. Lyon நகரிலிருந்து வடக்கில் பாரிசை நோக்கி 175 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் வாகனங்கள் நின்று விட்டன.
  • 1988 - சிங்களத் திரைப்பட நடிகர், அரசியல்வாதி விஜய குமாரதுங்க கொழும்பில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
  • 2005 - கியோட்டோ உடன்பாடு நடைமுறைக்கு வந்தது.
  • 2007 - தர்மபுரி பேருந்து தீவைப்பு நிகழ்வில் மூன்று மாணவிகளை உயிருடன் எரித்துக் கொலை செய்த அ.தி.மு.க.வினர் மூவருக்கு தூக்குத்தண்டனயும் மேலும் 25 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது.

புதன், பிப்ரவரி 12

TNPSC GROUP 2-A - 2,269 காலியிடங்கள்

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 2,269 உதவியாளர், நேர்முக எழுத்தர் பணியிடங்களை நிரப்ப மே மாதம் 18-ம் தேதி குரூப்-2-ஏ தேர்வு நடத்தப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. (TNPSC) அறிவித்துள்ளது.



நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர்,
இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட தமிழக அரசின் சார்நிலைப் பணிகளில் நேர்காணல் உள்ள பணியிடங்களை நிரப்ப குரூப்-2 தேர்வும் நேர்காணல் இல்லாத பணியிடங்களை (உதவி யாளர்) நிரப்புவதற்கு குரூப்-2-ஏ தேர்வும் தனித்தனியாக நடத்தப்படுகிறது.

அந்த வகை யில், பத்திரப் பதிவுத்துறை, போக்குவரத்துத்துறை, காவல் மற்றும் சிறைத்துறை, பள்ளிக் கல்வித் துறை உள்பட பல்வேறு துறைகளில் உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் பதவிகளில் " 2,269 காலியிடங்களை" நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்வெழுத விரும்புவோர் டி.என்.பி.எஸ்.சி. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5-ம் தேதி ஆகும். விண்ணப்பிக்கும்முறை, தேர்வுக்கட்டணம், பாடத் திட்டம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

http://www.tnpsc.gov.in/notifications/1_2014_not_eng_ccse_II_non_ot_Grp_II_A.pdf

Special Thanks to :Mr.Mohamed Faizur Rahman.

வெள்ளி, பிப்ரவரி 7

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்.

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை த...மிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

....மருத்துவக் குறிப்புகள்....

கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்.

கிரீன் டீயின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் தான். இதனை தமிழில் நோய் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறோம்.

பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து, தேவையற்ற கொழுப்பை குறைத்தது, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்று நோய் வராமல் தடுக்கிறது.

9. புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

நன்றி - Tamilcnn
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக சத்து இதில் உள்ளது.

சுருக்கமாக சொன்னால் ஒரு கப் கிரீன் டீ 10 கப் ஆப்பிள் ஜுஸ்க்கு சமம். கிரீன் டியின் உயர்தர ஆன்டி ஆக்சிடென்ட்கள் அபாயகரமான பிரீ ரேடி செல்களை சமன்படுத்தி, நம் உடலில் ஒவ்வொரு செல்லையும் புதுப்பித்து வாழ்நாட்களை நீடிக்க செய்கின்றன.

எனவே தான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கிரீன் டீயின் நன்மைகள்

1. ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

2. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

3. உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து, தேவையற்ற கொழுப்பை குறைத்தது, உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

4. ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

5. இதய நோய் வராமல் தடுக்கிறது.

6. ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

7. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

8. புற்று நோய் வராமல் தடுக்கிறது.

9. புற்று நோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது.

10. எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

11. பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

12. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

13. ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

14. சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

15. பருக்கள் வராமல் தடுக்கிறது.

15. நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

16. மூட்டு வலியை தடுக்க உதவுகிறது.

17. உடலில் ஏற்படும் புண்கள் காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.

நன்றி - Tamilcnn

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

 நமது ஊர் ரஹ்மத் தெரு மர்ஹூம் ஜனாப்.அப்துல் வஹாப் அவர்களின் மகன் ஜனாப்.லியாகத் அலி நேற்று இரவு சவுதி அரேபியாவில் வ‌ஃபாத்தானார்..

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

சனி, பிப்ரவரி 1

புனித ஹஜ் பயணம் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்பு.

بسم الله الرحمن الرحيم

கருணை மிக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்...

ஹஜ் புனித பயணம் செல்ல விண்ணப்பங்கள் வரவேற்பு: தமிழக அரசு அறிவிப்பு:-
haji wallpaper
இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து ஹஜ் புனிதப் பயணம் செல்ல விரும்புவோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கடைசி தேதி மார்ச் 15

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஹஜ் 2014–ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் வரையறைகளுக்குட்பட்டு, மும்பை இந்திய ஹஜ் குழு சார்பில் ஹஜ் விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது. சென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்திலுள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2014–ற்கான விண்ணப்பப் படிவங்களை பிப்ரவரி 1–ந் தேதியில் (நாளை) இருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 ஆகும்.

வங்கியில் கட்டணம்

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது. மார்ச் 15–ந் தேதியன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 31.3.15 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும். ஐ.எப்.எஸ். குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2014 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2014–ற்கான வழிமுறைகளைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் மேற்கூறப்பட்ட இணையதளத்தை அணுக வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு 300 ரூபாயை திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் கணக்கு எண். 33564923057–ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு மார்ச் 15–ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Courtesy  :  Imandubai.com & mudukulathur.com