இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, பிப்ரவரி 16

இந்தியா வரும் விமான பயணிகள் ரூ. 10 ஆயிரத்துக்கு மேல் வைத்திருந்தால் சுங்கத்துறையிடம் தெரிவிக்க வேண்டும்: புதிய திட்டம்.

புதுடெல்லி, பிப்.16-
வரும் மார்ச் மாதம் ஒன்றாம் தேதி முதல் இந்தியா வரும் விமானப் பயணிகள் தங்களிடத்தில் இந்தியப் பணம் 10,000க்கு மேல் வைத்திருந்தால் அதனை
அறிவிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறைகளை கடந்த 10-ஆம் தேதியன்று இந்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 


அதுமட்டுமின்றி அவர்கள் கொண்டுவரும் கைப்பைகள் உட்பட அனைத்து சாமான்களின் எண்ணிக்கையையும் இந்தியாவிற்குள் வரும்போது அவர்கள் குறிப்பிட வேண்டியிருக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டின் புதிய விதிமுறைகளின்படி, இந்தியப் பயணி ஒருவர் வெளிநாடு செல்லும்போது மட்டுமே குடியேற்ற படிவத்தை நிரப்பவேண்டும். வெளிநாட்டிலிருந்து வரும் இந்தியப் பிரஜைகளுக்கு இத்தகைய படிவங்கள் அளிக்கப்படமாட்டாது.

இருப்பினும், இந்தியா வரும் பயணிகள் தங்களிடமுள்ள தடை செய்யப்பட்ட பொருட்கள், தங்க நகைகள் (இலவச அனுமதிக்கு மேற்பட்டது), 10,000-க்கு மேற்பட்ட இந்தியப் பணம் போன்றவற்றின் விபரங்களை இந்திய சுங்கப் பிரகடன படிவத்தில் குறிப்பிட வேண்டும்.

இந்த விபரங்கள் சோதனையில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளுக்கு உபயோகமாக இருக்கும். இதுமட்டுமின்றி, இந்த பயணிகள் கடந்த ஆறு நாட்களின் பயண விபரங்களையும், தங்களுடைய பாஸ்போர்ட் எண்ணையும் புதிய படிவத்தில் குறிப்பிட்டாக வேண்டும். உடைமைகள் குறித்த புதிய நிரலுடன் முன்னதாகவே நடைமுறையில் இருக்கும்

சாட்டிலைட் தொலைபேசி உள்ளிட்ட அனைத்து பிற விபரங்களும் இந்தப் புதிய படிவத்தில் நிரப்பப்படவேண்டும் என்று நிதித்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 19 சர்வதேச விமான நிலையங்களிலும் இந்த விதிமுறைகள் வரும் மார்ச் மாதம் முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நன்றி : மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக