இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, பிப்ரவரி 23

சென்னையில் இனி சில்லரைக்கு தட்டுப்பாடு இல்லை : 30 இடங்களில் நாணயம் வழங்கும் இயந்திரம்.

சென்னை: இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில், சென்னையில், 30 இடங்களில், தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் துவக்க விழா, நேற்று, அடையாறில் உள்ள இந்தியன் வங்கி கிளை அலுவலகத்தில் நடந்தது. சில்லரை தட்டுப்பாட்டை போக்க, இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இணைந்து, சென்னை நகரில், 30 இடங்களில், தானியங்கி நாணயம் வழங்கும் இயந்திரங்களை நிறுவியுள்ளன.

இதன் திறப்பு விழா, அடையாறு இந்தியன் வங்கி கிளையில், நேற்று நடந்தது. மத்திய ரிசர்வ் வங்கியின் மண்டலத் தலைவர், சதாகதுல்லா, தானியங்கி இயந்திரத்தை, குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். இந்த இயந்திரத்தில், 10 ரூபாய் முதல், 50 ரூபாய் வரை சில்லரை மாற்றலாம். தேவைக்கு ஏற்ப, 1 ரூபாய், 2 ரூபாய் மற்றும், 5 ரூபாய் நாணயமாக, சில்லரையை பெற்றுக் கொள்ளலாம்.

""இந்த இயந்திரங்களை, பஸ் நிலையம், கோவில் மற்றும் ரயில் நிலையங்களில் நிறுவ திட்டமிட்டுள்ளது,'' என, இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் இயக்குனர், பாசின் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைவர் நரேந்திரா, இந்தியன் வங்கி நிர்வாக இயக்குநர் மகேஷ்குமார் ஜெயின் மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஏ.டி.எம்., பாதுகாப்பு : ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனர் சதாகத்துல்லா கூறியதாவது: ஏ.டி.எம்., மையங்களை பொறுத்தவரை, பெங்களுரூ போல், தமிழகத்தில் இதுவரை அசம்பாவிதம் ஏற்படவில்லை. அனைத்து, ஏ.டி.எம்., மையங்களிலும், கண்காணிப்பு கேமரா பொரு த்துவது அவசியமாக்கப்பட்டுள்ளது.மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் செயல்படும், ஏ.டி.எம்., மையங்கள், இரவில் பூட்டப்பட்டு, பகலில் மட்டுமே செயல்படுகின்றன. முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வேறு பணிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், ஏ.டி.எம்., மையம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.


Courtesy  : http://business.dinamalar.com/news_details.asp?News_id=29397&cat=1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக