இந்த வலைப்பதிவில் தேடு

புதன், பிப்ரவரி 29

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் த‌மிழ‌றிஞ‌ருக்கு வ‌ர‌வேற்பு.

துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் த‌மிழ‌றிஞ‌ருக்கு 28.02.2012 செவ்வாய்க்கிழ‌மை மாலை வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் தாய‌க‌த்திலிருந்து வ‌ருகை புரிந்த‌ கும்ப‌கோண‌ம் அர‌சு க‌லைக்க‌ல்லூரியின் ஓய்வு பெற்ற‌ த‌மிழ்த்துறை பேராசிரிய‌ரும், ப‌ட்டிம‌ன்ற‌ பேச்சாள‌ருமான‌ பொன். முத்தைய‌னுக்கு வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.

த‌மிழ‌க‌த்தின் புரதான‌ச்சின்ன‌ங்க‌ள், ச‌மூக‌ ந‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு விஷ‌ய‌ங்க‌ள் குறித்து விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌மூக‌ ந‌ல்லிண‌க்கத்தின் அவசிய‌ம் குறித்தும், இன்றைய‌ சூழ‌லில் அனைவ‌ரும் இணைந்து செய‌ல்ப‌ட‌ வேண்டிய‌து உள்ளிட்ட‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து. மேலும் அமீர‌க‌த்தில் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் மேற்கொண்டு வ‌ரும் ப‌ணிக‌ள் குறித்து பொன்.முத்தைய‌ன் பாராட்டு தெரிவித்தார்.

நிக‌ழ்வில் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ நிறுவ‌ன‌ புர‌வ‌ல‌ர்க‌ள் ஏ. லியாக்க‌த் அலி, ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ப‌த்திரிகையாள‌ர் முதுவை ஹிதாய‌த் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

திங்கள், பிப்ரவரி 27

வளைகுடா நாடுகளில் வசிக்கும் சகோதர சகோதரிகளின் கவனத்திற்கு!

வளைகுடா நாடுகளில் வசிக்கும் சகோதர சகோதரிகளின் கவனத்திற்கு !!!!!!
 
UAE – ல் வசிக்கும் NRI இந்தியரா நீங்கள் கண்டிப்பாக இந்தhttp://uaeindians.org/registration.aspx வலைத்தளத்திற்கு சென்று உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பெயர்களை பதிந்துகொள்ளவும். இதனால் எதிர்காலத்தில் நீங்கள் வசிக்கும் நாட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டால் எளிதாக இந்திய தூதரகத்தை உங்களால் அணுக முடியும். இதை UAE -ல் உள்ள இந்திய தூதரகம் இந்த வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இப்போது அநேக நாடுகளில் புரட்சிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. அந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரங்கள் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருகின்றன. அதனால் இந்த தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் எளிதாக தூதரகத்தை அணுக இயலும்.

இது உங்களுக்கு அல்லது உங்கள் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நினைத்தால் இந்த பதிவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தவும் நன்றி.

UAE – ல் வசிக்கும் இந்திய தொழிலாளர்களுக்கான தமிழ் வழிகாட்டிக்கு இங்கே செல்லவும்.
http://uaeindians.org/TamilFAQ_index.aspx

சனி, பிப்ரவரி 25

கிராமங்களில் 4 மணிநேரம், புறநகரில் 2 மணி நேரம் பவர் கட் - தொழிற்சாலைகளுக்கு 1 நாள் மின் விடுமுறை!

சென்னை: வரும் திங்கள்கிழமை (பிப்ரவரி 27 ) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 2 மணிநேரம் மின்தடை அமலுக்கு வருகிறது.
ஊரகப் பகுதிகளில் இது 4 மணி நேரமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான மின்தட்டுப்பாடு காரணமாக சென்னை தவிர மாநிலத்தின் பிறபகுதிகளில் கடந்த ஆண்டின் துவகத்திலிருந்தே மின்தடை நிலவி வருகிறது. மாநிலம் முழுக்க மின் தேவை 12500 மெவா ஆகவும், கிடைப்பது 8500 மெவா ஆகவும் உள்ளது.

இதனால் ஆரம்பத்தில் 4 மணி நேரமாக இருந்த மின்தடை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 8 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மழைக்காலங்களிலும் கடுமையாக மின்வெட்டு நிலவியது அநேகமாக இந்த ஆண்டாகத்தான் இருக்கும்.

கோவை, திருப்பூரில் 12 மணி நேரம் வரை மின்சாரமில்லாத நிலை நிலவுகிறது.

கிராமப்புறங்களின் இத்தகைய மின்தடை நேரத்தை குறைக்க, சென்னையிலும் மின்தடை அமலுக்கு வருவதாக கடந்த வாரம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பிப். 27 முதல் தினமும் 2 மணி நேரம் மின் தடையும், மார்ச் 1 முதல் தொழிற்சாலைகளுக்கு வாரத்துக்கு ஒருநாள் மின் விடுமுறையும் அமலுக்கு வருகின்றன. இதனால் சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பிப். 27 முதல் மின்தடை நேரம் ஓரளவு குறையலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த அறிவிப்பு கிராமப்புறங்களில் எந்த மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை. வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஏற்கெனவே 10 மணி நேரங்களுக்கு மேல் நிலவும் மின்வெட்டு, எந்த அளவு குறையும் என்று கணிக்க முடியாத நிலையே உள்ளது.

தூங்கும் போது கொர்… கொர்… ஆ ! உடனே கவனிங்க !!

உடல் பருமன் காரணமாக தற்போது குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கை அதகரித்து வருவது அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. குறட்டையால் தூக்கத்தை தொலைப்பதோடு பல்வேறு நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இரவு நேரங்களில் படுக்கையறையில் கேட்கும் கொர் கொர் ஓசை பெரும்பாலான மக்களை அச்சுறுத்தி வருகிறது. குறட்டை ஒலி இரவு நேரத்தில் படுக்கையறையின் நான்கு சுவருக்குள்ளே அடங்கிப்போவதால், விடிந்ததும் அதைப்பற்றி பலரும் நினைத்துப்பார்ப்பதில்லை. ஆனால், அலட்சியப்படுத்தப்படும் இந்த குறட்டைக்கு சரியான சிகிச்சை பெறா விட்டால் அது ஆபத்தை உருவாக்கிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

தற்போதைய ஆய்வு விவரங்கள்படி குறட்டை விடும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டி ருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். குண்டான பெண்களில் ஏராள மானவர்கள் குறட்டையால் தூக்கத்தை தொலைத்து, நோய்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இளம் தலைமுறையினர்

இன்றைக்கு சிறுவர் சிறுமியர்கள் பலரும் மைதானங்களுக்கு சென்று விளையாடுவ தில்லை. பள்ளி சென்று வந்த உடன் வீட்டிலே அடைந்து கிடப்பது. ஒரே இடத்தில் அமர்ந்து டி.வி. பார்ப்பது, கம்ப்யூட்டரில் விளையாடுவது- வறுத்த, பொரித்த உணவுகளை உண்பது போன்றவைகளால் இளைய தலைமுறையினரும் உடல் பருமனாகி வருகின்றனர். எதிர்காலத்தில் அவர்களும் குறட்டையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகிறது.

உயிருக்கு ஆபத்து

ஆரோக்கியமான மனிதர் ஒருவர் 8 மணி நேரம் தூங்குகிறார் என்றால், அவருக்கு பத்து வினாடிகள் வரை மூச்சு விடுவதில் லேசான தடை ஏற்படும். அப்போது அவரது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும். அவர் ஆரோக்கியமான மனிதராக இருந்தால், உடனே உடலில் இருக்கும் இயற்கையான விழிப்புணர்வு மெக்கானிசம், அதை சரிக்கட்டும் விதத்தில் அவருக்கு விழிப்பை கொடுத்து, சுவாசத்தை சரிசெய்துவிடும். இது இயற்கையான நிகழ்வு. ஆனால் குறட்டை விடுபவர்களுக்கு இந்த இயற்கை விழிப்புணர்வு மெக்கானிசம் சரியாக செயல்படாது. அப்படியிருக்க, அவர்கள் குடித்துவிட்டு தூங்கினாலோ, அதிக அளவில் தூக்க மாத்திரைகளை பயன்படுத்தி தூங்கினாலோ இயற்கை மெக்கானிசத்தின் விழிப்பு நிலை மிகவும் குறைந்துவிடும். அப்போது அவர்களுக்கு குறட்டையால் தூக்கத்தில் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால், விழிப்பு ஏற்படாமல் தூக்கத்திலே உயிர் பிரியும் சூழல் ஏற்படலாம்.

தூக்கம் பாதிப்பு

தூங்கும்போது சுவாசப்பாதையில் அடைப்பு ஏற்பட்டு, மூச்சுவிடுவதில் ஏற்படும் சிரமம்தான் குறட்டை சத்தமாக வெளிவருகிறது. மூக்கின் பின்புறம் `அடினாய்ட்’ தசையும், தொண்டைக்குள் `டான்சிலும்` இருக்கிறது. பல்வேறு காரணங்களால் இவை பெரிதாகும் போது, நாம் சுவாசிக்கும் காற்று எளிதாக உள்ளே போய் வெளியே வர முடியாத நெருக்கடி ஏற்படும். அந்த நெருக்கடியால் அழுத்தம் கொடுத்து மூச்சு இழுக்கும்போது காற்று பக்கத்து தசைகளிலும் அதிர்வை ஏற்படுத்தும். அந்த அதிர்வே குறட்டை சத்தமாக வெளிவருகிறது.

குறட்டைவிடுபவர்கள் இரவில் தூங்கும்போது 30 முதல் 40 தடவை மூச்சுவிட திணறுவார்கள். அதனால் அவர்கள் தூக்கம் அவ்வப்போது தடைபட்டு அவர்கள் தூங்கும் நேரம் குறையும். மறுநாள் சோர்வுடன் இருப்பார்கள்.

இரவில் தூக்கம் இல்லாமல் பகலில் தூங்குவது, தலைவலியோடு விழிப்பது ஆகியவை களால் `ஸ்லீப் அப்னீயா சின்ட்ரோம்` என்ற பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு வந்துவிட்டால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். கார்பன்டை ஆக்சைடு அளவு அதிகரிக்கும். அதனால் மூளை மட்டுமின்றி, இதயம், சிறுநீரகம் ஆகியவற்றின் செயல் பாடுகளும் பாதிக்கும். ஞாபக மறதி, ரத்த அழுத்த நோய்கள், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சினைகளும் தோன்றக்கூடும் என்கின்றனர் மருத்துவர்கள்.

உடல் பருமன்

சிலர் குறட்டையின் பாதிப்பிற்கு சிகிச்சை பெற முடியாத அளவிற்கு உடல் பருமன், வயது முதிர்வு, குள்ளமான கழுத்து, மூக்கு- வாய் பகுதியில் தசை வளர்ச்சி போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மூச்சு திணறல் இல்லாமல் இரவில் தூங்குவதற்காக `சி.பி.ஏ.பி’ என்ற கருவி உள்ளது. இதனை பொருத்திக்கொண்டு தூங்கினால் மூச்சு திணறலோ, குறட்டை தொந்தரவோ ஏற்படாது. குறட்டைக்கு சிகிச்சை மட்டும் போதாது. அவர்கள் உடல் பருமனை கட்டுக்குள்கொண்டு வர வேண்டும். அதற்காக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடு போன்றவைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

உறங்கும் முறை

குறட்டை பாதிப்பு உள்ளவர்கள் தலையணையை சற்று உயரமாக வைத்து அவர்கள் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து அவர்கள் தூங்கவேண்டும். நாம் மூக்கின் வழியாகத்தான் சுவாசித்து உயிர்வாழ்கிறோம். எனவே மூக்கில் ஏற்படும் நோய்களையும், குறட்டையையும் அலட்சியம் செய்யாமல் அவ்வப்போது அதற்குரிய சிகிச்சைகளை பெற்றால் மட்டுமே நோய் வரும் முன்பு உடலை பாதுகாக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

புதன், பிப்ரவரி 22

வேலைவாய்ப்பு பதிவு விவரங்கள் இணையதளத்தில் சரிபார்க்கலாம்.

சென்னை : வேலைவாய்ப்பு பதிவு விவரங்களை, இணையதளத்தில் சரிபார்த்து கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் மேற்கொள்ளப்படும் புதிய பதிவு, புதுப்பித்தல், கூடுதல் கல்வித் தகுதி பதிவு செய்தல் போன்ற பணிகள் அனைத்தும், தற்போது இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான இணையதள முகவரி 
http://tnvelaivaai ppu.gov.in ஆகும். 
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் முன்பே பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ளவர் கள், புதுப்பித்தல் மற்றும் கூடுதல் கல்வித் தகுதியைப் பதிவு செய்வதுடன் மட்டுமல்லாமல், தங்களின் பதிவு விவரங்களையும் இணையதளம் வாயிலாக சரிபார்த்துக் கொள்ளலாம்.பதிவுதாரர்கள் தங்களின் பதிவு விவரங்களில் ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டியிருந்தால், அதைச் சரி செய்து கொள்ள உரிய சான்றுகளுடன் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தை அணுகி, பதிவு விவரங்களை சரிசெய்து கொள்ளலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சனி, பிப்ரவரி 18

அபுதாபியில் உலகின் மிகப் பிரம்மாண்டமான பிஎம்டபிள்யூவின் கார் ஷோரூம்.

அரண்மனையா என்று வியக்கும் அளவுக்கு அபுதாபியில் உலகின் மிகப் பிரம்மாண்டமான கார் ஷோரூமை பிஎம்டபிள்யூ திறந்துள்ளது.
BMW Car Show Room 
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் உலக அளவில் சொகுசு கார் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. மேலும், எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் சொகுசு கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அங்கு சொகுசு கார் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி அதிகம்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில், அபுதாபியில் உலகின் பிரம்மாண்ட கார் ஷோரூமை பிஎம்டபிள்யூ திறந்துள்ளது. 35,000 சதுர மீட்டரில் திறக்கப்பட்டுள்ள இந்த கார் ஷோரூமில் ஒரே நேரத்தில் 120 கார்களை பார்வைக்கு நிறுத்த முடியும்.
மேலும், ஒரே நேரத்தில் 80 கார்களை சர்வீஸ் செய்யும் வசதி கொண்ட சர்வீஸ் ஸ்டேஷனும் இருக்கிறது. தவிர, இந்த கார் ஷோரூமில் 180 கார்களை பார்க்கிங் செய்யும் வசதியும் இருக்கிறது.

மேலும், ஷோரூமுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சகலவிதமான கவனிப்பும் வழங்கப்படும். பிஎம்டபிள்யூவின் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளரான அபுதாபி மோட்டார்ஸ் இந்த அரண்மனை கார் ஷோரூமை ரூ.405 கோடி செலவில் கட்டடியுள்ளது.

இந்த கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார்கள் தவிர, அந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மினி பிராண்டு கார்களும் பார்வைக்கு வைக்கப்பட இருப்பதாக அபுதாபி மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலியோ சொட்டு மருந்து அளிக்க 240 மையங்கள்- தெற்கு ரயில்வே ஏற்பாடு.

சென்னை: போலியோ சொட்டு மருத்து அளிக்க தமிழகம் முழுவதும் 240 மையங்களை தெற்கு ரயில்வே அமைத்துள்ளது.
Polio Drops
போலியோ நோயை தடுக்க ஆண்டுத்தோறும் போலியோ சொட்டு மருத்து நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகின்றது. இதற்காக பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், மருத்துவமனைகள், கடைத் தெருக்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மையங்கள் அமைக்கப்படுகின்றது.

மருத்துவ பணியாளர்கள், தனியார் தொழிற்சாலை பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவர்கள் தொண்டு நிறுவன உறுப்பினர்கள் உட்பட பலத் தரப்பு மக்கள் சொட்டு மருத்து அளிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நாளை(19.2.2012) போலியோ சொட்டு மருத்து அளிக்கப்படுகின்றது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றது. ரயில் நிலையங்களில் வருவோரின் குழந்தைகளுக்கு இச்சேவை கிடைக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் தமிழகம் முழுவதும் 240 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக ரயில்வே ஊழியர்கள் அடங்கிய குழுவை தலைமை மருத்துவ இயக்குனர் டாக்டர் விஜயகுமார் நியமித்துள்ளார்.

முக்கிய ரயில் நிலையங்கள், ரயில்வே காலனிகள், ரயில்வே மருத்துவமனைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்காக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.

சனி, பிப்ரவரி 11

அரசு வேலைவாய்பு! - இணையம் வழியாக பதிவு செய்வது எப்படி?


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட 64 லட்சம் பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு நேரில் சென்றுதான் கல்வித் தகுதியைப் பதிவு செய்ய முடியும் என்ற நிலை இருந்து வந்தது. தற்போது வேலைவாய்ப்புக்காக பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்ற அனைத்துப் பணிகளையும் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் செய்து கொள்ள முடியும்.

இதற்காக வேலைவாய்ப்புத்துறை தனி இணையதளத்தை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள், இந்த இணைய தளத்தில் தங்களது பதிவு எண்ணை உள்ளிட்டு தங்களது கல்வி விவரங்களை சரிபார்த்துக் கொள்ள முடியும்.

புதிதாக பதிவு செய்து கொள்ள விரும்புவோர் தங்களது கல்வித் தகுதி, பிறப்பு, ஜாதிச் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து இந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

இணையதள முகவரி : www.tnvelaivaaippu.gov.in

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் குறியிடு : TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்

ஆன்லைனில் பதிவு செய்யும் முறை :

1. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி ?

இணையதளத்திலுள்ள படிவத்தில் விவரங்களை நிரப்பி சான்றிதழ்களை ஸ்கேன் செய்து படிவத்தில் விண்ணப்பித்தவுடன் ஒரு தற்காலிக பயனாளி அடையாளம் மற்றும் ஏற்புச்சொல் வரும். தங்கள் விண்ணப்பத்தின் விவரங்கள் சரியானவை எனில் 7 நாட்களுக்குள் விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஏற்கப்படும். பதிவு அடையாள அட்டையே தாங்களே உருவாக்கி, தாங்களே அச்சிட்டு வெளியே எடுத்துக் கொள்ளலாம்.

2. கூடுதல் பதிவு செய்வது எப்படி ?

ஆன்லைன் கூடுதல் தகுதிகள் பகுதியை கிளிக் செய்ய வேண்டும். தங்கள் கோரிக்கையை வேலைவாய்ப்பு அலுவலகம் ஏற்றபின் புதிய அடையாள அட்டையை எடுக்கலாம்.

3. ஆன்லைனில் புதுப்பிக்க இயலுமா ?

ஆம். ஆன்லைனில் புதுப்பிக்கலாம். மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை பதிவான மாதத்திலும் தொடர்ந்து வரும் இரு மாதங்களுக்குள்ளும் புதுப்பிக்கலாம். வரையறுக்கப்பட்டுள்ள காலத்தே புதுப்பிக்காதவர்கள் 18 மாதச் சலுகையில் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம்.

4. விண்ணப்பம் ஏற்கப்பட்டதா, மறுக்கப்பட்டதா ? என்பதை எப்படி அறிவது ?

தற்காலிகப் பதிவு எண்ணை "பயன்படுத்துவோர் அடையாளமாகவும்" (username), பிறந்த தேதியை, எற்புச் சொல்லாகவும் (password) பயன்படுத்தி, பதிவின் நிலையை அறியலாம்

5. ஆன்லைனில் முகவரி மாற்ற முடியுமா ?

ஆம். பதிவு செய்தவர்கள் தாங்களே முகவரியை மாற்றிக் கொள்ளலாம்

6. ஆன்லைனில் முன்னுரிமைச் சான்றினை (priority certificate) பதிய இயலுமா ?

முன்னுரிமைச் சான்றுகள், எடுத்துக்காட்டாக, நில எடுப்பு பாதிப்புச்சான்று (land acquisition) போன்றவற்றில் மெய்த்தன்மை உறுதி செய்யப்படவேண்டும். எனவே, எவ்வகை முன்னுரிமைச் சான்றுகளையும் ஆன்லைனில் பதிய இயலாது. சான்றின் நகல்களை விண்ணப்பத்துடன் அஞ்சலில்/நேரில் வேலைவாய்ப்பகத்திற்கு அனுப்ப வேண்டும்.

7. இத்தளத்தில் பதிவு செய்ய தகுதியானவர் யார் ?

இத்தளத்தில் தமிழ்நாட்டில் வசித்து வருபவர் பதியலாம்.

8. இத்தளம் மூலம் பணி நாடுவோர்களுக்கு உள்ள வசதிகள் யாவை ?

நேரில் பதிவு, நேரில் பதிவு புதுப்பித்தல், தகுதிகள் அதிகப்படுத்தல், அனுப்பப்பட்ட பதிவுக்கான பதிவட்டை எடுத்தல், வேலைவாய்ப்பு விவரங்கள், பல்வேறு தகுதிகளுக்கான பரிந்துரை வரம்புகள் அளித்தல் ஆகியவை உள்ளன.

மாணவர்கள் தோல்வியை கண்டு துவளக்கூடாது:திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேச்சு.

கும்பகோணத்தை அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்லூரியின் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி செயலாளர் ஹீமா யூன் வரவேற்றார். சினிமா நடிகர் சூரி வாழ்த்துரை வழங்கினார்.விழாவில் கல்லூரி தாளாளர் அப்துல் கபூர், தலைவர் அன்வர்கபீர், முதல்வர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் கலந்து கொண்டு திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேசியதாவது:-
 மாணவர்கள் தோல்வியை கண்டு துவளக்கூடாது:திரைப்பட இயக்குனர் சசிக்குமார் பேச்சு
அன்னை கல்லூரிக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக தொடர்பு உள்ளது. இருந்தாலும் கடந்த 4 ஆண்டுகளாக இந்த கல்லூரியின் விழாவில் நான் பங்கேற்று வருகிறேன்.காரணம் இந்த கல்லூரியில் பேராசிரியர்கள், மாணவர்கள், நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு ஒரு அற்புதமான திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர்.

அதாவது ஏழ்மையில் நன்றாக படிக்க முடிந்தும், நிதி வசதி இல்லாத மாணவர்களை சக மாணவர்கள் நிதி உதவி வழங்கி அவர்களுக்கு தேர்வு கட்டணம் உள்பட கல்வி உதவியை வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில் எந்த கல்லூரியிலும் இது போன்ற ஒரு திட்டம் இல்லை. ஆனால் கும்பகோணம் அன்னையின் புரட்சி என்ற பெயரில் மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் இந்த விழாவில் அதிகம் பேசப்போவதில்லை. அதற்கு பதில் செயல்பாட்டில் இறங்க போகிறேன். மாணவர்கள் உண்மை பேச வேண்டும். உண்மையை பேசினால் உழைப்பு தன்னால் வந்து விடும்.

மாணவ பருவத்தினர் தோல்வியை கண்டு துவளக்கூடாது. வெற்றியையும், தோல்வியையும் ஒன்றாக கருதும் மனப்பக்குவம் பெற வேண்டும். இனிமேல் என்னை விழாவிற்கு அழைக்கும் எந்த கல்லூரியாக இருந்தாலும் மாணவர்கள் மறுமலர்ச்சி திட்டத்தை செயல்படுத்தும் கல்லூரிக்கு மட்டுமே நான் செல்வேன். அந்த திட்டத்தை இனி மேல் அனைத்து கல்லூரிகளும் செயல்படுத்த வேண்டும். அதற்கு அன்னை கல்லூரி ஒரு முன்மாதிரியாக செயல்படுவது பாராட்டுக்குரியது.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் மாணவர்கள் மறு மலர்ச்சி திட்டத்தில் அவர் தன்னையும் இணைத்து கொண்டு அதற்காக ரூ.15 ஆயிரம் நிதி உதவியை வழங்கி, விழாவில் கலந்து கொண்ட மாணவர்களிடமும், பொது மக்களிடமும் நிதி வசூலித்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கலைநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் பேராசியர் ரமேஷ், செய்தி தொடர்பாளர் திவான் ஆகியோர் செய்திருந்தனர்.

வியாழன், பிப்ரவரி 2

அதிக எண்ணிக்கையில் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை.

சட்டசபையில் இன்று துரைக்கண்ணு (அ.தி.மு.க.) கேட்ட கேள்விக்கு அமைச்சர் முகம்மதுஜான் அளித்த பதில் வருமாறு:-
அதிக எண்ணிக்கையில் ஹஜ் பயணம் செல்ல நடவடிக்கை 
ஹஜ் பயணம் செல்ல அதிக இடம் ஒதுக்க வேண்டும் என்றால் சவூதி அரேபியா அரசு கூடுதல் இடம் தந்து, மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும். முன்பு தமிழ்நாட்டில் இருந்து 2,612 பேர்தான் ஹஜ் பயணம் சென்றனர். தற்போது முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிரதமரை கேட்டுக் கொண்டதால், கூடுதலாக 1,472 பேர் ஹஜ் பயணம் செல்ல அனுமதி கிடைத்தது.

அடுத்து கேள்வி எழுப்பிய ஜவஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி), மராட்டியம், கேரள மாநிலங்களில் ஹஜ் பயணிகள் செல்வதற்கு முன்பு, அவர்கள் தங்குவதற்கு அரசு ஹவுஸ் உள்ளது. ஆனால் சென்னையில் தனியார் இடங்களில்தான் தங்க வேண்டியிருக்கிறது. எனவே தமிழ்நாட்டிலும் அரசு ஹவுஸ் கட்டப்படுமா? என்றார். அதற்கு பதில் அளித்த அமைச்சர், 'அது குறித்து பரிசீலனை செய்யப்படும்' என்று கூறினார்.