இந்த வலைப்பதிவில் தேடு

சனி, பிப்ரவரி 18

அபுதாபியில் உலகின் மிகப் பிரம்மாண்டமான பிஎம்டபிள்யூவின் கார் ஷோரூம்.

அரண்மனையா என்று வியக்கும் அளவுக்கு அபுதாபியில் உலகின் மிகப் பிரம்மாண்டமான கார் ஷோரூமை பிஎம்டபிள்யூ திறந்துள்ளது.
BMW Car Show Room 
ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் உலக அளவில் சொகுசு கார் விற்பனையில் முன்னிலை வகிக்கிறது. மேலும், எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா நாடுகளில் சொகுசு கார்களுக்கு அதிக வரவேற்பு இருப்பதால், அங்கு சொகுசு கார் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி அதிகம்.

இந்த நிலையில், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் வகையில், அபுதாபியில் உலகின் பிரம்மாண்ட கார் ஷோரூமை பிஎம்டபிள்யூ திறந்துள்ளது. 35,000 சதுர மீட்டரில் திறக்கப்பட்டுள்ள இந்த கார் ஷோரூமில் ஒரே நேரத்தில் 120 கார்களை பார்வைக்கு நிறுத்த முடியும்.
மேலும், ஒரே நேரத்தில் 80 கார்களை சர்வீஸ் செய்யும் வசதி கொண்ட சர்வீஸ் ஸ்டேஷனும் இருக்கிறது. தவிர, இந்த கார் ஷோரூமில் 180 கார்களை பார்க்கிங் செய்யும் வசதியும் இருக்கிறது.

மேலும், ஷோரூமுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு சகலவிதமான கவனிப்பும் வழங்கப்படும். பிஎம்டபிள்யூவின் அங்கீகரிக்கப்பட்ட இறக்குமதியாளரான அபுதாபி மோட்டார்ஸ் இந்த அரண்மனை கார் ஷோரூமை ரூ.405 கோடி செலவில் கட்டடியுள்ளது.

இந்த கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார்கள் தவிர, அந்த நிறுவனத்தின் கீழ் இயங்கும் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் மினி பிராண்டு கார்களும் பார்வைக்கு வைக்கப்பட இருப்பதாக அபுதாபி மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக