இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, ஜனவரி 31

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

 நமது ஊர் அல் ஜாமியா தெரு ஜனாப்.முத்தலிப் இவரின்  மனைவி மற்றும் ஜனாப்.முஜிபுர்ரஹ்மான் இவரின் தாயாருமான அஸ்மா பீவி இன்று காலை வ‌ஃபாத்தானார்..

 "இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

 அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வியாழன், ஜனவரி 30

வரலாற்றில் இன்று.

1.தொழுநோய் ஒழிப்பு நாள்.
2.இந்திய தியாகிகள் நாள்.

1835 - ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆண்ட்ரூ ஜாக்சன் கொலை முயற்சியில் இருந்து தப்பித்தார்.
1930 - உலகின் முதலாவது Radiosonde சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது.

1933 - அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக (Chancellor) பதவியேற்றார்.
1943 - உக்ரேனில் லேத்திச்சிவ் என்ற இடத்தில் யூதர்கள் ஆயிரக்கணக்கில் நாசிகளால் கொல்லப்பட்டனர்.
1948 - மகாத்மா காந்தியடிகள் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டார்.
1976 - தமிழ்நாட்டில் மு. கருணாநிதியின் திமுக ஆட்சி கவிழ்க்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.
2000 - கென்யாவின் விமானம் ஒன்று அட்லாண்டிக் கடலில் ஐவரி கோஸ்ட் கரையில் வீழ்ந்ததில் 169 பேர் கொல்லப்பட்டனர்.

செவ்வாய், ஜனவரி 28

பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்பு.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவையும், மண்டபத்தையும் இணைக்கும் வகையில் ஆங்கிலேயர் காலத்தில் கடல்மேல் சுமார் 2.13 கிலோமீட்டர் தூரம் பாலம் அமைக்கப்பட்டது. பாம்பன் ரெயில் பாலத்தில் 1914–ம் ஆண்டு பிப்ரவரி 24–ந்தேதி ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டது.




100 ஆண்டுகள் ஆனதையொட்டி இதனை சிறப்பிக்கும் வகையில் இந்திய ரெயில்வே அமைச்சகம், ரெயில்வே வாரியம் நூற்றாண்டு விழாவை கொண்டாட முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளை தெற்கு ரெயில்வே நிர்வாக பொது மேலாளர் ராஜேஸ்மிஸ்ரா, கூடுதல் பொதுமேலாளர் நாராயணன், மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி ஆகியோர் செய்து வந்தனர்.
பாம்பன் பாலத்தின் நூற்றாண்டு விழா இன்று தொடக்கம்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பங்கேற்பு
பாம்பன் ரெயில் பாலத்தின் நூற்றாண்டு விழா தொடக்க விழா இன்று பாம்பன் ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. விழாவுக்கு மதுரை கோட்ட மேலாளர் ரஸ்தோகி தலைமை தாங்கினார். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.

விழாவில் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சுந்தரபாண்டியன், பாம்பன் ஊராட்சி மன்ற தலைவர் பேட்ரிக், மண்டபம் பேரூராட்சி தலைவர் தங்கமரைக்காயர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பாம்பன் ரெயில் பால நூற்றாண்டு விழாவையொட்டி அங்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலிக்கும் தூக்கு பாலத்தை ரோடு பாலத்தில் நின்றபடி ஏராளமான சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் கண்டு ரசித்தனர்.

இந்த விழாவில் கலந்து கொள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இன்று காலை மதுரையில் இருந்து குண்டு துளைக்காத காரில் ராமநாதபுரம் வந்தார்.

பின்னர் அவர் மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்துக்கு சிறப்பு ரெயிலில் சென்றார். அவருடன் ரெயில்வே அதிகாரிகள் உடன் சென்றனர். பின்னர் அப்துல்கலாம் பாம்பன் பாலத்தின் அழகை கண்டு ரசித்தார்.

நன்றி : மாலைமலர்.

திங்கள், ஜனவரி 27

இண்டர்நெட் அதிகமாக பயன்படுத்துபவர்கள் அடிமையாகும் அறிகுறிகள் காண்பிக்கின்றன.

இண்டர்நெட் அதிகமாக பயன்படுத்தும் இளம் வயதினர் அடிமையாகும் அறிகுறிகள் வெளிப்படுத்துபவராக இருப்பார் என்று இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உட்பட, விஞ்ஞானிகளும் கண்டறிந்துள்ளனர். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மிசோரி பல்கலைக்கழகம், டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையம் மற்றும் மூளை அறிவியல் டியூக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள், இண்டர்நெட் பயன்படுத்துபவர்கள் அடிமையாகும் நடவடிக்கைகளை ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளனர்.
இந்தியாவின் சென்னையில் நடந்த அட்வான்ஸ்ட் நெட்வொர்க்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் சிஸ்டம்ஸ் சர்வதேச மாநாட்டில் மின்சார மற்றும் மின்னணு பொறியியல் கல்வி நிறுவனம் (IEEE) இரண்டு மாதங்களில் 69 கல்லூரி மாணவர்கள் இன்டர்நெட் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு டிசம்பர் 18-ம் தேதி ஆராய்ச்சி வழங்கியுள்ளனர். அதில் சில வகையான இன்டர்நெட் பயன்பாடு மற்றும் ஈர்த்த நடத்தைகள் ஆகிய இரண்டுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்படுத்துதலை வெளிப்படுத்தியுள்ளது.

ஆய்வு ஆரம்பத்தில், 69 மாணவர்கள் இண்டர்நெட் தொடர்பான பிரச்சினை அளவு (IRPS) என்று அழைக்கப்படும் 20 கேள்வி கணக்கெடுப்பு நிறைவு செய்துள்ளனர். இன்ட்ரோவெர்ஷன், திரும்ப பெற, அடங்கா ஆசை, சகிப்புத்தன்மை மற்றும் எதிர்மறை வாழ்க்கை விளைவுகள் போன்ற அடிமையாகும் பண்புகளை அடையாளம் காண்பதற்காக இந்த அளவு உருவாக்கப்பட்டது.

இதில் விளையாட்டு, சாட்டிங், ஃபைல் டவுன்லோட், இமெயில், ப்ரவ்சிங் மற்றும் சமூக வலைப்பின்னல் (Facebook மற்றும் Twitter) உட்பட பல பிரிவுகளாக இண்டர்நெட் பயன்பாடு பிரிக்கப்பட்டுள்ளது. மொத்த IRPS மதிப்பெண்களில் விளையாட்டு, சாட்டிங் மற்றும் ப்ரவ்சிங் அதிகபட்ச தொடர்புகள் வைக்கப்பட்டுள்ளது, மற்றும் மின்னஞ்சல், சமூக வலைப்பின்னல் மிகக்குறைந்த தொடர்புகள் வைக்கப்பட்டுள்ளது.


நன்றி :  தினகரன்

ஞாயிறு, ஜனவரி 26

65-வது குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

டெல்லி: நாட்டின் 65-வது குடியரசுதின விழா தலைநகர் டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டை காக்க உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மன்மோகன்சிங் மரியாதை செலுத்தினார். பின்னர் அமர்ஜவானில் உள்ள பதிவேட்டில் மன்மோகன் சிங் கையெழுத்திட்டார்.
நாடு முழுவதும் இன்று குடியரசுதினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டில்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கொடியேற்றினார். முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங் அமர்ஜவான் ஜோதியில் மறைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பாதுகாப்பு புடை சூழ குதிரைப்படை வீரர்கள் ஜனாதிபதியை பாதுகாப்பாக அழைத்து வந்தனர்.
Current events
சென்னை:சென்னையில் நடந்த விழாவில் கவர்னர் ரோசைய்யா தேசிய கொடியேற்றி வைத்தார். முதல்வர் ஜெ., வீர தீர செயல்கள் புரிந்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டில்லியில் 50 ஆயிரம் போலீசாரும், 35 ஆயிரம் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ ஆபே, காங்., தலைவர் சோனியா, மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டார் பங்கேற்றனர்.

நன்றி : தினமலர் & தினகரன் 

வெள்ளி, ஜனவரி 24

56 ஆயிரம் சதுரஅடியில் உள்ள மைக்கேல் ஜாக்சனின் வீட்டை பாக்கலாம் வாங்க.

இசையால் இந்த உலகத்தையே கட்டிப்போட்ட மைக்கேல் ஜாக்சனின் வீடு ஒன்று தற்போது ஏலத்துக்கு வர இருக்குங்க.பல ஆயிரம் கோடிகள் சம்பாதித்த ஜாக்சன் தனது இறுதி நாட்களில் மிக அதிக கடன் சுமை ஏற்பட்டு போதைக்கு அடிமையாகி உயர் விட்டார் என்பது நாம் அறிந்த விஷயமே.அவர் கடன் வாங்கியுள்ள வங்கி ஒன்று தான் இந்த வீட்டை விற்பதாக அறிவித்துள்ளது அந்த பிரம்மாண்ட அரண்மனையை பார்வையிடலாமாங்க வாங்க....
1.உங்களுக்கு வேணுமா இந்த வீடு இதன் விலை ஜஸ்ட் 300 கோடிதாங்க:

 
2.கெஸ்ட் ரூம் :
 
3.டைனிங் டேபிள்:
 
4.இது ஹால் :
 
5.மைக்கேல் ஜாக்சனின் பிரம்மாண்ட வீடு மிகவும் பிரம்மாண்டம் தாங்க:
 
Courtesy : thatstamil.com 

முதல் நொடியில் இசைக்கப்பட்டது ஏ.ஆர்.ரகுமானின் இசைதான்.

இந்த வருடம்(2014) துபாயில் புத்தாண்டு பிறந்ததும் முதல் நொடியில் இசைக்கப்பட்டது .ஆர்.ரகுமானின் இசைதான்.முத்து படத்தில் 'ஒருவன் ஒருவன் முதலாளி 'என்ற பாடலுக்கு முன்பு வரும் இசைதான் இங்கு முதன்முதலில் இசைக்கப்பட்டது.இந்த ஆண்டு துபாய் புத்தாண்டு வான வேடிக்கையில் உலக சாதனை செய்திருந்தாலும் அதற்கு முன்பு முத்தாய்ப்பாய் அமைந்தது சூப்பர்ஸ்டார்,.ஆர்.ரகுமான் கூட்டணி என்று சொன்னால் அது மிகையாகாது.வீடியோவை LINK  பாருங்கள் உங்களுக்கே புரியும்!
http://www.youtube.com/watch?v=JsIH43A2vQ0#
 

 

இசை மொழியையும் கடந்தது! பிறந்தநாள் வாழ்த்துகள் .ஆர்..ரகுமான்.

செவ்வாய், ஜனவரி 21

துபாயில் இந்து பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் இஸ்லாமிய அமைப்பு.

கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் உள்ள ராஷித் மருத்துவமனையில் இந்தியாவைச்சேர்ந்த ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இவர் யார்? என்பது பற்றிய தகவல்கள் சரிவர தெரியாததால், மருத்துவமனை நிர்வாகம் இந்திய துணை தூதரகத்திடம் தெரிவித்தது.


இதையடுத்து துபாய் ‘ஈமான்’ அமைப்பானது மக்கள் தொடர்பு மற்றும் ஊடக செயலகத்துடன் இணைந்து ஊடகங்களில் இதுபற்றிய செய்தியை வெளியிட்டது. இறந்தவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் விநாயகனேந்தலைச்சேர்ந்த சேகர் தங்கராஜ்(வயது 35) என்பது தெரியவந்தது.

இந்திய துணைத் தூதரகத்தினர் கேட்டுக் கொண்டதற்கினங்க துபை ஈமான் அமைப்பின் துணைச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகச் செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் ஊடங்கங்களில் வெளியிட ஏற்பாடு செய்தனர். 24 மணி நேரத்தில் இவரைப் பற்றிய தகவல் கிடைத்து ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் இறுதிச் சடங்கினை துபையில் நடத்துவதற்கு அனுமதிக் கடிதம் குடும்பத்தினர் கொடுத்தன் பேரில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இதையடுத்து அவருடைய குடும்பத்தினரின் அனுமதியுடன் இறுதிச்சடங்கு துபாயில் இந்து சம்பிரதாயப்படி நடத்தப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்டது.

இந்திய துணை தூதரகத்தின் உதவியுடனும், எவ்வித செலவும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு சேராமலும் ‘ஈமான்’ அமைப்பு மேற்கொண்டது. மேலும் இறந்த சடலங்களுக்கு தொடர்ந்து ஈமக்காரியம் செய்யும் பணியினை சமூக சேவையாகவே இந்த அமைப்பு செய்து வருகிறது.

சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செயல்படுவதாக ‘ஈமான்’ அமைப்பிற்கு இந்திய துணைத்தூதரக கன்சல் ஜெனரல் மோகன் பாராட்டு தெரிவித்தார்.

துபாய் மற்றும் வடக்கு அமீரகங்களான ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா மற்றும் ஃபுஜைராவில் தமிழர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹாவை 050 467 43 99 எனும் அலைபேசியில் அணுகலாம்.

இமான் அமைப்பிற்கு மனம் மார்ந்த பாராட்டுகளையும் இது போன்று நற்சேவைகள் தொடர வாழ்த்துகிறது திருப்பனந்தாள் ஜமாஅத்.

நன்றி : http://www.maalaimalar.com/2014/01/21030206/Dubai-Islamic-system-of-Hindu.html
              http://mudukulathur.com/?p=23778
 

Google Chrome பயனர்களுக்கு ஓர் நற்செய்தி !


Google Chrome பயனர்களுக்கு ஓர் நற்செய்தி Google Chrome இன் Google Chrome 32 எனும் புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முன்னைய பதிப்பில் இருந்த பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் பல புதிய அம்சங்கள் இதில் உட்புகுத்தப் பட்டுள்ளது.

Malware கோப்புக்களை தானியக்கமாக கண்டறிந்து தடைசெய்யும் அம்சமும் இதில் புதியதொரு வசதியாகும்.

நீங்கள் இதனை ஏற்கனவே பயன்படுத்துபவர் எனின் குறிப்பிட்ட இணைய உலாவியின் ஊடாகவே மேம்படுத்திக் கொள்ளலாம். அன்றி தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க ..

Download Google Chrome (Windows, Linux and Mac)

Online Installer ======> http://bit.ly/Chrome32

Offline Installer ======> http://bit.ly/Chrome32OffIns


நன்றி : (http://on.fb.me/TAMILINFOTECH)

வரலாற்றில் இன்று.

  • சனவரி21 :
  • 1793 - பிரெஞ்சுப் புரட்சி உச்சக்கட்டத்தில் இருந்த போது பதினாறாவது லூயி மன்னன் சிரச்சேதம் செய்யப்பட்டார்.
  • 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜெபர்சன் டேவிஸ் ஐக்கிய அமெரிக்காவின் செனட்டில் இருந்து விலகினார்.
  • 1925 - அல்பேனியா குடியரசாக அறிவிக்கப்பட்டது.
  • 1941 - இரண்டாம் உலகப் போர்: அவுஸ்திரேலிய மற்றும் பிரித்தானியப் படைகள் லிபியாவின் டோபுருக் நகரைத் தாக்கின.
  • 1947 - முதலாவது சிங்களத் திரைப்படம் (கடவுணு பொரன்டுவ) திரையிடப்பட்டது.
  • 1954 - உலகின் முதலாவது அணுசக்தியாலான நீர்மூழ்கிக் கப்பல், USS நோட்டிலஸ், ஐக்கிய அமெரிக்காவில் வெள்ளோட்டம் விடப்பட்டது.
  • 1960 - மேர்க்குரி விண்கலத்தில் சாம் என்ற பெண் குரங்கு விண்வெளிக்குப் பயணமானது.
  • 1972 - திரிபுரா, மேகாலயா, மணிப்பூர் ஆகியன இந்தியாவின் தனி மாநிலங்களாக்கப்பட்டன.
  • 1976 - ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லக்கூடிய கன்கார்டு ரக விமானம் முதன் முதல் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அந்த விமானம் ஆங்லோ பிரெஞ்சு கூட்டணியில் உருவானது.

வெள்ளி, ஜனவரி 10

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் மெயின் ரோடு  ஜனாப்.முஹம்மது பாரூக் மற்றும் ஜனாப்.அக்பர் அலி இவர்களின் தாயார் ராபியத் பீவி இன்று காலை வ‌ஃபாத்தானார்..

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

புதன், ஜனவரி 8

வருகிறது 7 ஓவர் கிரிக்கெட்!

மும்பை: கிரிக்கெட்டில் விறுவிறுப்பை அதிகரிக்க, 7 ஓவர்கள் கொண்ட "செவன் ஸ்டார் லீக்' தொடர் விரைவில் அரங்கேற உள்ளது.

மந்தமான டெஸ்ட் போட்டிகளால் வெறுத்துப் போன ரசிகர்களுக்கு ஒருநாள் (50 ஓவர்) போட்டி உற்சாகம் தந்தது. பின் அதிரடியான "டுவென்டி–20' போட்டி பெரும் வரவேற்பை பெற்றது. 



தூதுவர் தோனி:

இந்த வரிசையில், 7 ஓவர்கள் கொண்ட புதுமையான "செவன் ஸ்டார்' லீக் தொடர் துபாயில் நடக்க உள்ளது. இதற்கு ஐ.சி.சி., இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதி அளித்துள்ளன. இதன் துாதராக இந்திய கேப்டன் தோனி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் மார்ச் மாதம் இத்தொடர் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எத்தனை அணிகள்:

ஐக்கிய அரபு .எமிரேட்சை (யு.ஏ.இ.,) சேர்ந்த அபுதாபி, சார்ஜா, துபாய், அஜ்மான், ராஸ்–அல்–கெய்மான், உம்–அல்–குய்வான், பூஜாய்ரா ஆகிய ஏழு அணிகள் இதில் பங்கேற்கும். ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் இடம் பெறுவர்.

7 நாடுகள்:

யு.ஏ.இ., இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. துபாயில் முதல் முறையாக நடத்தப்படும் இத்தொடர், எதிர்காலத்தில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும்.

இத்தொடர் வெற்றி பெறும்பட்சத்தில், சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி–20' தொடர் போல, "செவன் ஸ்டார்' சாம்பியன்ஸ் லீக் தொடரை நடத்தவும் வாய்ப்பு உள்ளது.

தோனியின் ராசி

இத்தொடருக்கான விளம்பர துாதராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய கேப்டன் தோனியின் ராசியான எண் 7. இதன் அடிப்படையில் எல்லாமே ஏழு மயமாக உள்ளது. இவரது நெருங்கிய நண்பர் அருண் பாண்டேவின் ரிது ஸ்போர்ட்ஸ் நிறுவனமும் சேர்ந்து இத்தொடரை நடத்துகிறது. * அணிகளின் பெயர்கள், யு.ஏ.இ.,யை சேர்ந்த 7 நாடுகளை குறிக்கும் வகையில் உள்ளது.

* ஒவ்வொரு அணியிலும் 7 வீரர்கள் மட்டுமே இடம் பெறுவர்.

* போட்டியில் இரண்டு அணிகளுக்கும் தலா 7 ஓவர்கள் வழங்கப்படும்.

* இந்த செய்தி7ம் தேதியான நேற்று வெளியிடப்பட்டது

பி.சி.சி.ஐ., மறுப்பு

ஏழு ஓவர் கிரிக்கெட் குறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல் வெளியிட்ட அறிக்கையில், " ஐக்கிய அரபு எமிரேட்சில் "7 ஓவர்' கொண்ட கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ., மற்றும் ஐ.சி.சி., இணைந்து நடத்துவதாக வெளியான செய்திகள் உண்மையல்ல. இதுகுறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டிடம், ஐ.சி.சி., விசாரித்தது. அப்படி எந்த தொடரையும் நடத்த, யாருக்கும் அனுமதி தரவில்லை என, ஐக்கிய அரபு போர்டு தெரிவித்தது,' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி  : தினமலர் 

ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம்!!

(இஸ்லாமிய முறையில் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தாள்...

இயந்திரமாகும் இந்த உலக வாழ்கையில்...

உங்கள் பிள்ளைகளோடு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்..)


ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையில் நடந்த ஒரு சிறிய சம்பவம். 

மகன் : அப்பா உங்க கிட்ட ஒரு கேள்வி கேக்கலாமா?

தந்தை: கேளேன்...

மகன் : ஒரு மணி நேரத்திற்கு நீங்கள் எவ்வளவு சம்பாதிகிறீர்கள்?

தந்தை: 100 டாலர் ...

மகன் : அப்படீனா எனக்கு 50 டாலர் தாங்கப்பா!

தந்தைக்கு மிகவும் கோபம் ஏற்பட்டது. ஆனாலும் மறுக்க முடியாமல் 50 டாலரை மகனிடம் கொடுத்தார்.

மகன் சிரித்த முகத்தோடும், சந்தோசமாகவும் அந்த பணத்தை வாங்கி கொண்டான். அப்படியே தனது தலையணைக்கு கீழே கை போட்டு அங்கிருந்த வேறு சில பணத்தை எடுத்தான்.

தந்தை: உன்கிட்ட நிறைய பணம் இருக்குத்தானே, பின் எதுக்காக என்னிடம் கேட்டாய்?

மகன் : முன்பு என்கிட்ட போதுமான பணமில்ல... அதான். ஆனா இப்ப என்கிட்ட 100 டாலர் இருக்கு. உங்க நேரத்துல ஒரு மணி நேரத்த நான் வாங்கி கொள்ளலாமா? நாளைக்கு நேரத்தோட வீட்டுக்கு வாங்க அப்பா. உங்க கூட சேர்ந்து உட்கார்ந்து ஒன்னா சாப்பிடனும்.

தந்தைக்கு மிகவும் கவலையும், கண்ணீரும் வந்தது. அப்படியே ஸ்தம்பித்து போனார். உடனே மகனை தனது நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கண்ணீர் மல்க, தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.


குடும்பத்துக்காக உழைக்கும் நீங்கள் குடும்பங்களின் சந்தோசத்தையும் கவனியுங்கள். சில மணி நேரத்தை உங்கள் குடும்பத்தோடு செலவழியுங்கள். 

நாளை நாம் மரணித்தால் நாம் பணி புரிந்த நிறுவனம் நமக்கு பதிலாக வேறொருவரை பணிக்கு அமர்த்திக் கொள்ளும். ஆனால் நமது குடும்பம் துக்கத்தோடும், துயரத்தோடும் நம்மை எண்ணி எண்ணி வாழுமே!!


From:-Thasbeeh Media & Thanks to : 
Abdul Basith Bukhari.

செவ்வாய், ஜனவரி 7

Internet-connected toothbrush makes CES debut.

Brush smarter. That’s the message from the makers of what is billed as the world’s first Internet-connected toothbrush. 

Unveiled on Sunday at a preview event for the Consumer Electronics Show, the device from French-based start-p Kolibree aims “to reinvent oral care,” according to co-founder Loic Cessot.
“The technology in the industry has not evolved for years,” Cessot told AFP.


“The idea is not to brush stronger, but smarter.”
The Kolibree toothbrush includes a sensor which detects how much tartar is being removed in a brushing. It also records brushing activity so users can maintain a consistent cleaning each time.
The device conveys the information wirelessly to a smartphone app — a particularly useful aid for parents who want to monitor the teeth cleaning efforts of small children, according to Cessot.
“When you use a normal toothbrush you never really know what you’ve cleaned. It might be 30 percent. The only person who really knows is the dentist.”
But the app can tell users if they have missed hard-to-clean areas or are not getting a thorough brushing.
The app, which is open for developers to add on other programs, aims to increase motivation and make the experience more fun, said Cessot.
The self-funded start-up created by Cessot and former Microsoft and Google executive Thomas Serval plans to release the toothbrush worldwide in the third quarter, getting a boost from a crowd sourcing effort.
Orders will be available initially through Kickstarter from $99 to $200, depending on the model and will include a free mobile app.

Courtesy : Khaleej Times. 

எங்கே நடந்தது தவறு?

சிறுகதை:

மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. கீதா ஸ்கூட்டியின் வேகத்தைக் கூட்டினாள். தவசி நகர் திருப்பத்தில் வேகமாக திருப்பவும் சிறு கல் முன் சக்கரத்தை பதம் பார்த்தது. தடாலென்று கீழே வண்டியோடு சாய்ந்தாள்.

எதிர்வீட்டிலிருந்த கமலாம்பாள் ஓடிவந்து அவளைத் தூக்க முயன்றாள். வயது மூப்பில் தளர்ந்த உடலால் இதெல்லாம் சாத்தியமா? நல்லவேளை தெருவில் போன யாரோ வண்டியையும் அவளையும் தூக்கி விட்டனர். கைத்தாங்கலாய் கமலாம்பாள் உள்ளே அழைத்துச் சென்றாள். முகத்தை துடைத்துவிட்டு தண்ணீர் தந்து ஆசுவாசப்படுத்தினாள் சீதா சற்று தெளிவானாள். நல்லவேளை தோளில் தொங்கிய ஹாண்ட்பேக் டேபிள்மேல் வைக்கப்பட்டிருந்தது. எடுத்து செல்லை உசுப்பி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு விசயத்தைச் சொல்லி ஒருமணி நேரம் பர்மிஷன் கேட்டாள்.

பேசி முடித்ததும் கமலாம்பாள் காப்பியை நீட்டினாள் நிமிர்ந்து வாங்கிய போது சுவரில் தெரிந்த போட்டோ அவளை அதிர வைத்தது.

"இது யாரும்மா?" கீதா கேட்டாள்.

"இது எம் பையன் விஷ்ணு. அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்லே வேலை பாத்துண்டிருந்தான். என்ன பொல்லாத காலமோ கம்பெனில கட்டச் சொல்லிக் கொடுத்த ரெண்டு லட்ச ரூபாய பேங்க்ல கட்டினானாம்.. ஆனா அவா கம்பெனிக் கணக்குலே வரவு வர்லேன்னு சஸ்பெண்ட் பண்ணீட்டா. ஒரு வாரமாச்சு பாவம் பைத்தியமா அலையறான்."

"விஷ்ணுவை எனக்கு நல்லாத்தெரியும் அப்படிபட்ட ஆளு இல்லை. எங்கயோ தவறு நடந்திருக்கு. அவர் பணம் கட்டினது எங்க பேங்க்லதான்.. இவ்வளவு சீரியஸாகும்ணு நினைக்கலை நீங்க கவலைப்படாதீங்க. உடனே இந்தப் பிரச்சினையைக் கவனிக்கறேன்."

"எப்படியோ தாயி அந்தக் கடவுள்தான் உன்னை அனுப்பிச்சிருக்கார். நிச்சயம் ஒரு வழி பொறக்கும்."

கீதா கிளம்பினாள்.

பேங்க் மும்முரத்திலிருந்தது. கீதா தன் சீட்டில் அமர்ந்தவுடன் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ்க்கு போன் செய்தாள். கம்பெனி முதலாளிதான் பேசினார்.

பணம் காணாமல் போன தேதியும் தொகையும் கணக்கு எண்ணையும் கேட்டுக் குறித்துக் கொணடாள்.

அடுத்து அதே தொகை, அதே தேதியில் வேறு யாருக்காவது வரவு வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கம்ப்யூட்டரின் பற்களை பதம் பார்த்தாள்.

அடுத்தசில நிமிடங்களில் அது உண்மையைக் கக்கி விட்டது. அம்பாள் இஞ்சினீரிங்ஸ் என்ற கம்பெனிக்கு அதே தொகை அதே தேதியில் வரவு வைக்கப்பட்டிருந்தது. அந்தக் கம்பெனியை அழைத்துக் கேட்டதில் அவர்கள் அந்த தேதியில் வேறு தொகைதான் கட்டப்பட்டிருக்கிறது என்று கூறினார்கள். விஷயம் இதுதான் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கு எண் 1300023 ஆனால் அம்பாள் இஞ்சினியரிங்ஸ் கணக்கு எண் 1300032. பிங்கரிங் மிஸ்டேக். சம்மந்தப்பட்ட அதிகாரியை அழைத்து ட்ரன்ஸ்பர் என்டரி போடச் சொல்லி உத்திரவிட்டாள். பணம் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

மீண்டும் அம்பாள் இண்டஸ்ட்ரீஸ் முதலாளியை அழைத்தாள்.

"சார் உங்க கணக்கில பணம் வரவு வச்சாச்சு. பாவம் சார் விஷ்ணு நல்ல மனுசன் இதில அவரோட தப்பு எதுவுமில்லே ரொம்ப புவர்பேமலி அவர் அம்மாவப் பார்த்தேன். முகத்தில மூக்குத்தி தவிர வேற எதுவுமில்ல இவுங்களா திருடியிருப்பாங்க."

"சாரிம்மா இவ்வளவுதூரம் நீங்களே சொல்லும் போது நா மறுப்பேனா இதோ இப்பவே சஸ்பென்சன் ஆர்டரை கேன்சல் பண்றேன்." என்றார் அவர்.

அடுத்த அரைமணிக்குப் பின் விஷ்ணு நன்றி சொல்ல கீதாவின் அறைக்கு வெளியே காத்திருந்தார்.

நன்றி : கூடல் 

திங்கள், ஜனவரி 6

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் ரஹமத் தெரு மர்ஹும்.ஜனாப். அமானுல்லாஹ் அவர்களின்


மாமியார்,ஜனாப்.கமருதீன் அவர்களின் பாட்டி சஹுரூவான் பீவி இன்று

மாலை வ‌ஃபாத்தானார்..

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

வியாழன், ஜனவரி 2

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
 
நமது ஊர் மெயின் ரோடு  ஜனாப்.அப்துல் கனி அவர்களின் சின்னதா
ஜனாப். முஹம்மது  இப்ராஹிம் அவர்களின்  பேரன் ஆபித் பாஹித்  இன்று காலை வ‌ஃபாத்தானார்..

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.