இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், ஜனவரி 21

துபாயில் இந்து பிணங்களுக்கு இறுதி சடங்கு செய்யும் இஸ்லாமிய அமைப்பு.

கடந்த செப்டம்பர் மாதம் துபாயில் உள்ள ராஷித் மருத்துவமனையில் இந்தியாவைச்சேர்ந்த ஒருவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இவர் யார்? என்பது பற்றிய தகவல்கள் சரிவர தெரியாததால், மருத்துவமனை நிர்வாகம் இந்திய துணை தூதரகத்திடம் தெரிவித்தது.


இதையடுத்து துபாய் ‘ஈமான்’ அமைப்பானது மக்கள் தொடர்பு மற்றும் ஊடக செயலகத்துடன் இணைந்து ஊடகங்களில் இதுபற்றிய செய்தியை வெளியிட்டது. இறந்தவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் விநாயகனேந்தலைச்சேர்ந்த சேகர் தங்கராஜ்(வயது 35) என்பது தெரியவந்தது.

இந்திய துணைத் தூதரகத்தினர் கேட்டுக் கொண்டதற்கினங்க துபை ஈமான் அமைப்பின் துணைச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா மற்றும் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகச் செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் ஊடங்கங்களில் வெளியிட ஏற்பாடு செய்தனர். 24 மணி நேரத்தில் இவரைப் பற்றிய தகவல் கிடைத்து ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் இறுதிச் சடங்கினை துபையில் நடத்துவதற்கு அனுமதிக் கடிதம் குடும்பத்தினர் கொடுத்தன் பேரில் அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.இதையடுத்து அவருடைய குடும்பத்தினரின் அனுமதியுடன் இறுதிச்சடங்கு துபாயில் இந்து சம்பிரதாயப்படி நடத்தப்பட்டு, பின்னர் எரியூட்டப்பட்டது.

இந்திய துணை தூதரகத்தின் உதவியுடனும், எவ்வித செலவும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு சேராமலும் ‘ஈமான்’ அமைப்பு மேற்கொண்டது. மேலும் இறந்த சடலங்களுக்கு தொடர்ந்து ஈமக்காரியம் செய்யும் பணியினை சமூக சேவையாகவே இந்த அமைப்பு செய்து வருகிறது.

சமூக நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக செயல்படுவதாக ‘ஈமான்’ அமைப்பிற்கு இந்திய துணைத்தூதரக கன்சல் ஜெனரல் மோகன் பாராட்டு தெரிவித்தார்.

துபாய் மற்றும் வடக்கு அமீரகங்களான ஷார்ஜா, அஜ்மான், உம்முல் குவைன், ராசல் கைமா மற்றும் ஃபுஜைராவில் தமிழர்களுக்கு எதிர்பாராதவிதமாக ஏற்படும் இதுபோன்ற சம்பவங்களுக்கு ஈமான் அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் ஏ முஹம்மது தாஹாவை 050 467 43 99 எனும் அலைபேசியில் அணுகலாம்.

இமான் அமைப்பிற்கு மனம் மார்ந்த பாராட்டுகளையும் இது போன்று நற்சேவைகள் தொடர வாழ்த்துகிறது திருப்பனந்தாள் ஜமாஅத்.

நன்றி : http://www.maalaimalar.com/2014/01/21030206/Dubai-Islamic-system-of-Hindu.html
              http://mudukulathur.com/?p=23778
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக