இந்த வலைப்பதிவில் தேடு
வியாழன், மே 31
புதன், மே 30
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் நடுத் தெரு ஜனாப்.அஸ்கர் அலியின் தகப்பனார் ஜனாப்.பஷீர் அஹமது அவர்கள் மலேசியாவில் காலமானார்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் நடுத் தெரு ஜனாப்.பாசித் அவர்களின் தகப்பனார் மற்றும் முஹம்மது அலி (ஏட்டு ) அவர்களின் மச்சான் ஜனாப்.ரஹ்மத்துல்லாஹ் இவர் இன்று காலமானார்.
"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.
ஞாயிறு, மே 27
ஜனாப் சதகதுல்லாஹ் அவர்களின் மகள் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார்.
நமது ஊர் ஜனாப் சதகதுல்லாஹ் அவர்களின் மகள் S . ஆசிகா பர்வீன் திருப்பனந்தாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 2011-12ம் கல்வியாண்டில் ப்ளஸ் 2 வகுப்பில் மாவட்ட அளவில் கணக்கு பதிவியல் (ACCOUNTANCY ) 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளார். இப்பாடத்தில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். 1050 மதிப்பெண் பெற்று திருப்பனந்தாள் அரசினர் மேல்நிலைப்பள்ளியிலேயே முதலிடத்தை பெற்றார் .
இப்பள்ளி வரலாற்றில் இதுவே அதிக மதிப்பெண் ஆகும் .
அரசினர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்று தன் பெற்றோரையும் ஊர் மக்களையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

சனி, மே 26
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கல்வி கடன்! ! !
|
சனி, மே 12
உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையமாக மாறப்போகிறது சென்னை சென்ட்ரல்.
புதுடில்லி :"சென்னை சென்ட்ரல் உட்பட, 84 ரயில் நிலையங்கள், உலகத் தரம் வாய்ந்த ரயில் நிலையங்களாக, நடப்பு நிதியாண்டில் மாற்றப்படும்' என, ராஜ்யசபாவில் மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் பரத்சிங் சோலங்கி கூறினார்.
ராஜ்யசபாவில் நேற்று எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், அவர் கூறியதாவது:
தரம் உயர்வு:நாட்டில் உள்ள ரயில் நிலையங்களில், 266 ரயில் நிலையங்கள், 2011-12ம் ஆண்டில், கண்டறியப்பட்டு, அவற்றை உலகத் தரத்திற்கு உயர்த்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 73 ரயில் நிலையங்கள், ஆதர்ஷ் திட்டத்தின் கீழ், தரம் உயர்த்தப்படுகின்றன. அடுத்த கட்டமாக நடப்பு நிதியாண்டில், 84 ரயில் நிலையங்கள், தரம் உயர்த்தப்பட உள்ளன. புதுடில்லி, மும்பை சத்ரபதி சிவாஜி முனையம், மும்பை மற்றும் பாட்னா ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான மாஸ்டர் பிளானும், சாத்தியக் கூறு அறிக்கைகளும் தயாராகியுள்ளன.
நிறுவனங்கள் தேர்வு:இதன் அடுத்த கட்டமாக, சென்னை சென்ட்ரல், செகந்திராபாத், ஆனந்த் விகார், சண்டிகார், பிஜ்வாசன், போர்பந்தர், சூரத், ஆமதாபாத், சீல்டா போன்ற ரயில் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பான பணிகளுக்காக ஆலோசனைகளை வழங்குவதற்காக, நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதர ரயில் நிலையங்களில், இதுதொடர்பான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை மண்டல ரயில்வேக்கள் மேற்கொண்டுள்ளன.
நகரும் படிக்கட்டு:பயணிகள் அதிகமாக பயன்படுத்தும் ரயில் நிலையங்களில், நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். தற்போது நூறு நகரும் படிக்கட்டுக்கள் அமைக்க ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 221 நகரும் படிக்கட்டுக்களை பல்வேறு ரயில் நிலையங்களில் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மட்டும், 50 நகரும் படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். மீதமுள்ளவை அடுத்து வரும் ஆண்டுகளில் அமைக்கப்படும்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)