அது கோடை மழையும் இல்லை. பருவமழையும் இல்லை. திடீர் மழை போல கடந்த இரண்டு நாளாக விடாது கொட்டிக் கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடு. மனித நடமாட்டமே முடங்கிப் போனது. யாரும் வெளியில் தலைகாட்டவில்லை. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தாகி விட்டது. நேற்றுவரை விரிசலோடிக்கிடந்த கண்மாய்களில் நீர் வெள்ளமாய் நிறைந்து வழிந்தது.

"இந்தத் தண்ணீரை நம்பி குறுகியகாலப் பயிர்கூடச் செய்யலாம்" என்று தேநீர்க் கடைகளில் முடங்கிக்கிடந்தவர்கள் பேசிப் கொண்டார்கள்.
எதுவுமே அளவோடு இருந்தாலே நல்லது என்பது போல பொதுமக்கள் பேசத் தொடங்கினார்கள். மூன்றாம் நாளும் மழை தொடர்ந்தால் விபரீதமாகும் என்பது புரிந்தது. மாவட்டத்தின் பெரும் பகுதி மழையின் பாதிப்புக்கு ஆளாகியிருந்ததால், காவல் துறையிலிருந்து வருவாய்த் துறைவரை முடுக்கிவிடப்பட்டிருந்தது.
இது போதாதென்று அப்போது சட்டமன்றமும் செயல்பட்டுக் கொண்டிருந்ததால், மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர். அதைத் தொடர்ந்து முதல்வர் ஆணையிட மாவட்ட ஆட்சியரே நேரடியாகக் களத்தில் இறங்கிச் செயல்பட்டார்.
மழைநீர் வடிவதற்கென அமைந்த உப்பாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான இடங்களில் நீர் பரவத் தொடங்கியதால் வருவாய்த்துறையினரின் ஒத்துழைப்போடு பொதுப் பணித்துறையினர் பாதுகாப்புப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வந்தனர்.
வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட மாவட்ட ஆட்சியர் அங்குவந்து சேர்ந்தார். அவரை வரவேற்ற அதிகாரிகள் நிலையை விளக்கிச் சொன்னார்கள். அந்த நேரத்தில் கிராமத்து ஆள் ஒருவர் தலைதெறிக்க ஓடிவந்தார்.
"ஐயா... கும்பிடுறேனுங்க... நான் ஆதனூரிலிருந்து வர்றேங்க. அந்த ஊர்க்கண்மாய் நிரம்பி மறுகால் போகுது. நாங்களும் எவ்வளவோ வெட்டிவிட்டுப் பார்த்தோம். ஆனால், வரத்து நீர் அதிகமிருக்கிறதனாலே தண்ணி எக்கச்சக்கமா வருதுங்க. மழையும் நிக்கிறமாதிரி தெரியலே. உடனடியா....."
"உம்.....சொல்லுங்க.......உடனடியா என்ன செய்யணும்."
"ஐயா.....மூணு இடத்திலே கண்மாய் உடையுறமாதிரி இருக்குங்க. இன்னைக்கு சாயங்காலத்துக்குள்ளே அந்த மூணு இடத்திலேயும் அணை போடலேன்னா நிலமை விபரீதமாயிடும்."
இந்த நேரத்தில் தாசில்தார் குறுக்கிட்டார். "கண்மாய்க்குக் கிழக்கே பத்து கிராமம் இருக்கு. நம்ம எம்.எல்.ஏ. கிராமமும் அதுல ஒண்ணு...."
இதைச் சொன்னதுமே அந்தக் குளிரிலும் ஆட்சியரின் நா வறண்டது. "சரி இப்ப என்ன செய்யலாம் சொல்லுங்க."
"ஐயா.....ஆயிரம் சிமெண்டு சாக்கு வாங்கி எங்கேயாவது மேடான பகுதியிலிருந்து மணலை வெட்டி, சாக்கில் போட்டு உடனே கண்மாய்க்கரையைக் பலப்படுத்தணும்."
"தாசில்தார்....உங்கள் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் யாரு?"
"சார்....நான்தான் சார்.....அங்குசாமி....."
"சரி, மிஸ்டர் அங்குசாமி. நீங்கள் என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது. இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் ஆயிரம் சாக்கு வாங்கி, மணலை அடைத்து கண்மாய்க்கரைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தாகணும்."
அருகே நின்றுகொண்டு இருந்த பொறியாளர் பக்கம் ஆட்சியரின் பார்வை திரும்பியது.
"ஏன் சார்.....உங்கள் இருப்பிலே மணல் சேமிப்பு இருக்கா?"
"ஓரளவு இருக்கு சார். நூறு, நூற்றைம்பது மூட்டை தேறும். பாக்கி மூட்டைக்கு வெளியேதான் பார்க்கணும்." அவரது குரல் கம்மியது. ஆட்சியர் என்ன சொல்வாரோ என்று பயந்தவாறு நின்றதை அவரது முகம் காட்டியது.
"பரவாயில்லை மிஸ்டர் அங்குசாமி. உங்களை நம்பி பொறுப்பை ஒப்படைக்கிறேன். இப்ப மணி மூணு. நான் ஆறு மணிக்குக் கண்மாய்க்கு வருவேன். அதற்குள்ளாக இந்த வேலையை முடிச்சு வையுங்க. நொண்டிச்சாக்குச் சொல்றது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்."
ஆட்சியர் காரில் ஏறி புறப்பட்டார். எல்லாரும் பரபரப்புடன் அங்கிருந்து அகன்றார்கள். சற்றுநேரம் பின்வாங்கியிருந்த மழை திரும்பவும் கொட்டத் தொடங்கியது.
அந்த நேரத்தில் அத்தகைய பெரும் பொறுப்பு தன் மீது விழும் என்று அங்குசாமி எதிர்பார்க்கவில்லை. எனினும் தனது நீண்டகால அனுபவத்தால் நிலையைச் சமாளிக்க முற்பட்டார். ஜீப்பை எடுத்துக்கொண்டு எங்கெல்லாமோ அலைந்தார். அவர் ஊகித்தது சரியாக இருந்தது.
மூன்று நாள் முன்னர் அனுமதி இல்லாமல் ஆற்றில் மணல் அள்ளிச் சென்ற பத்து லாரிகள் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அவரது சிந்தனையில் மின்னலெனப் பளிச்சிட்டது. பத்து வேலை ஆட்களும் சாக்குமாய் அங்குபோய்ச் சேர்ந்தார்.
ஜீப்பைக் கண்டதும் இன்ஸ்பெக்டர் பதறியடித்துக் கொண்டு வந்தார். அவரிடம் ஆட்சியரின் ஆணையை விளக்கினார், அங்குசாமி. அவ்வளவுதான், அரைமணி நேரத்தில் ஆயிரம் மூட்டை மணல் தயாரானது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரிகளிலேயே மூட்டைகளை எடுத்துக்கொண்டு, கண்மாய்க் கரைக்குப் போனார். அடுத்த, அரைமணி நேரத்தில் உடைப்பு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இடங்களில் மணல் மூட்டைகள் நெருக்கமாக அடுக்கப்பட்டன. இனிமேல் உடைப்பெடுக்க வழியில்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் நீண்ட பெரும்மூச்சு விட்டார், அங்குசாமி.
இதற்குள்ளாக அங்குவந்து சேர்ந்த தாசில்தார், சற்று தள்ளி ஜீப் அருகே நின்றவாறு சிகரெட் புகைத்துக்கொண்டு இருந்தார். அவரை நோக்கிச் சென்ற அங்குசாமியின் முகத்தில் களைப்புக் காணப்பட்டது. தாசில்தாரின் காதருகே ஏதோ சொன்னார். சிரித்தவாறு கேட்டுக்கொண்டிருந்த தாசில்தார் உடனே அங்குசாமியை இறுக அணைத்து கைகளைப் பற்றிக் குலுக்கினார்.
"மிஸ்டர் அங்குசாமி, உங்களை என்னால மறக்கவே முடியாது. ஆட்சியர் இன்னும் சற்றுநேரத்தில் இங்கே வருவார். இல்லையென்றால் நானே நேரில் உங்களை அழைத்துச் செல்வேன். பரவாயில்லை. உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்" என்ற அவரது கண்கள் பனித்தன.
அங்குசாமி விம்மிவிட்டார். எல்லாரும் அவரையே கவனிக்கிறார்கள் என்பது தெரிந்ததும் ஒருவாறு சமாளித்து, "சார்....வர்றேன்" என்றவாறு ஜீப்பில் ஏறினார்.
"டிரைவர்........சாரை இறக்கிவிட்டுட்டு வாங்க, நேரமானாலும் பரவாயில்லை......"
அங்குசாமியை ஏற்றிக் கொண்டு ஒருபுறத்தில் ஜீப் மறையவும் மறுபுறம் ஆட்சியரின் கார் வந்து சேர்ந்தது. தாசில்தார் ஓடிச்சென்று வரவேற்றார்.
கண்மாய்க்கரையில் ஏறி நாலாபுறங்களிலும் பார்த்தார் ஆட்சியர். அப்போது மழை தூறிக்கொண்டிருந்தது. ஆனாலும் வானம் இருண்டுபோய் பயமுறுத்திக் கொண்டிருந்தது.
ஆட்சியர் புன்னகையோடு கீழே இறங்கி வந்தார். "பலே! அருமையாச் செய்திட்டீங்க. இனி மழையைக் பற்றிக் கவலையில்லை. எங்கே உங்க ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அங்குசாமி...."
"சார்......." தாசில்தாருக்கு வார்த்தை வரவில்லை.
"சொல்லுங்க, என்ன விசயம்".
"சார் இன்று மாலையோட அவர் ஓய்வுபெற்று விட்டார். நீங்கள் வருவதற்குள் எல்லாத்தையும் செய்து முடிச்சிட்டு ஐந்து மணிக்கு என்னிடம் இருந்து விடைபெற்று போயிட்டார் சார்"
ஆட்சியர் வியப்புடன் நிமிர்ந்தார்.
நன்றி: நிழல்கள் & கூடல்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக