துபாய் : துபாய் ஈமான் அமைப்பு திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி நிர்வாகக் குழுவினருக்கு வரவேற்பு நிகழ்ச்சியினை டிசம்பர் 25ம் தேதி மாலை லேண்ட்மார்க் ஹோட்டல் கிராண்டில் வெகு சிறப்புற நடத்தியது. ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி தலைமை வகித்தார். அலுவலக மேலாளர் திண்டுக்கல் ஜமால் மைதீன் இறைவசனங்களை ஓதினார். அடமங்குடி அப்துல் ரஹ்மான் இறையருட்பா பாடினார். குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி தலைமையுரை நிகழ்த்தினார். கல்விக்குழுச் செயலாளர் ஹிதாயத்துல்லா வரவேற்புரை நிகழ்த்தினார். துணைப் பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் முனைவர் ஏ.கே. காஜா நஜீமுதீன் சாஹிப், துணைச் செயலாளர் எம்.ஜே. ஜமால் முஹம்மது சாஹிப், முதல்வர் முனைவர் ஆர். காதர் முஹைதீன் சாஹிப், ஜமால் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் இயக்குநர் முனைவர் கே. அப்துஸ் ஸமது, சுயநிதிப்பிரிவு இயக்குநர் அப்துல் காதர் நிஹால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முனைவர் பட்டம் பெற்ற தாளாளருக்கும், கல்லூரிக்கும் ஈமான் அமைப்பின் நினைவுப் பரிசினை ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும துணைப் பொது மேலாளர் அல்ஹாஜ் ஹமீது கான் வழங்கினார். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் முனைவர் ஏ.கே. காஜா நஜீமுதீன் சாஹிப் ஏற்புரை வழங்கினார். மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் அஹமது முஹைதீன், முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், சாதிக் பாட்சா, முஹைதீன், முஸ்தபா, சாகுல், சர்புதீன், ஹபிபுல்லா, அப்துல் ரசாக், முபாரக் அலி உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்
நன்றி : தினமலர் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக