இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, ஜனவரி 27

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நாளை முதல் மீண்டும் பஸ் போக்குவரத்து.

இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு நாளை முதல் மீண்டும் பஸ் போக்குவரத்தும் வர்த்தகமும் தொடங்குகிறது.


கடந்த 8-ந்தேதி காஷ்மீர் மாநிலத்தில் இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த 2 இந்திய வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் தலை துண்டித்து கொலை செய்தது. இதனால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டு இரு நாட்டு வீரர்களும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து இந்தியாவிக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பஸ் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் மத்திய அரசு தடை செய்தது. இதனால் இரு நாட்டு எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் அவதிப்பட்டனர்.

தற்போது எல்லையில் அமைதி நிலவுகிறது. கடந்த 10 நாட்களாக எந்த துப்பாக்கி சண்டையும் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மீண்டும் பஸ் போக்குவரத்தையும், வர்த்தகத்தையும் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நாளை முதல் கட்டமாக காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லை வழியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு பஸ் விடப்படுகிறது. பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் வந்த 100 பயணிகள் திடீர் என்று பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் காஷ்மீரில் தவிக்கிறார்கள். அவர்கள் நாளை செல்லும் பஸ்சில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

இதேபோல் எல்லைப் பகுதியில் நடைபெற்று வந்த வர்த்தகமும் நாளை முதல் மீண்டும் தொடங்குகிறது.

இதற்கிடையே நேற்று குடியரசு தினத்தையொட்டி காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள். பதிலுக்கு பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.

இருநாட்டு ராணுவ அதிகாரிகளிடையேயான வழக்கமான கொடி அணி வகுப்பு கூட்டமும் பூஞ்ச் பகுதியில் நடந்தது.

நன்றி : மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக