குடியரசு தினவிழா, சிறப்பு விருந்தினராக, இந்தியா வந்துள்ள பூடான் மன்னர், ஜிக்மி நாம்கியால் வாங்சுக் மற்றும் அவர் மனைவி ஜஸ்டின் பெமா ஆகியோரை வரவேற்கும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி.
குடியரசுதின விழா கொண்டாட்டம் : தேசியக்கொடியை ஏற்றினார் பிரணாப்.

சென்னை: நாட்டின் 64வது குடியரது தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர் ரோசய்யா தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்றுள்ளார். விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் தேசியக்கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதனையடுத்து முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டார். இந்திய ராணுவத்தின் படை வலிமையை பறை சாற்றும் வகையில் பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

வீரதீர செயல்களை புரிந்தோருக்கான அண்ணா பதக்கத்தை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். மேலும் கோட்டை அமீத் மத நல்லிணக்கத்திற்கான பதக்கம் அயூப்கானுக்கு வழங்கப்பட்டது. காவல்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டது. குடியரசுதினத்தையொட்டி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக