இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், டிசம்பர் 20

உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம்.

அஸ்ஸலாமு அலைக்கும்..
 Hats Off Iman Uae Kaithe Millath Peravai
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையின் உதவியால் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட தந்தையை சந்தித்த மகன் அவரது கரங்களை வருடி வாஞ்சையுடன் வரவேற்ற காட்சி சென்னை விமான நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
இதன் விபரம் வருமாறு,
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜகோபால் (73). 1976ம் ஆண்டு துபாய்க்கு வேலை தேடி சென்றார். இவரது மனைவியும், மூன்று மகன்களும் திருநெல்வேலியிலேயே இருந்தனர். துபாயில் கஷ்டப்பட்டு வேலை பார்த்த ராஜகோபால் பல ஆண்டுகளுக்குப் பிறகு 1984ல் திருநெல்வேலிக்கு வந்தார். ஒரு சில மாதங்கள் குடும்பத்தினருடன் இருந்துவிட்டு மீண்டும் துபாய்க்கு சென்றுவிட்டார். அதன் பிறகு ஊர் திரும்பவில்லை. துபாயில் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துவிட்டார். இதனால் முதல் மனைவி மற்றும் மகன்களுடன் தொடர்பு இல்லாமல் போனது. எப்போதாவது பணம் மட்டும் அனுப்புவார். 
இந்நிலையில் இரண்டாவது மனைவியுடனான தொடர்பும் இல்லாமல் போனது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இருதய பாதிப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரைப் பற்றிய விபரங்கள் எதுவும் கிடைக்காததால் மருத்துவமனை நிர்வாகத்தினர் இந்திய தூதரகத்ததின் உதவியை நாடினர். எனினும் அவரது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. 
இந்திய தூதரக அதிகாரிகள் ஈமான் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்து ராஜகோபாலை அவரது குடும்பத்தினருடன் சேர்ப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். ஈமான் பொதுச் செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, ஈமான் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் ஆகியோர் மருத்துவமனை சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் அவரைப் பற்றிய விபரங்களை கேட்டுக்கொண்டு புகைப்படத்துடன் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியிட்டனர். 
இதனைப் பார்த்த முதல் மனைவி தனது மூத்த மகன் சுந்தர்ராஜனிடன் தெரிவித்து தந்தையை கொண்டுவர ஏற்பாடு செய்திட கேட்டுக் கொண்டார். சுந்தர்ராஜன் துபாய் ஈமான் அமைப்பினரை தொடர்பு கொண்டு தனது தந்தையினை தாயகம் அழைத்து வர ஏற்பாடு செய்திடுமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி இந்திய தூதரகத்தின் முழு ஒத்துழைப்புடன் கடந்த 16.12.2012 அன்று மாலை ஏர் இந்தியா விமானத்தில் துபாயில் இருந்து புறப்பட்டு 17.12.2012 அன்று காலை அவரது மகன் சுந்தர்ராஜனிடம் அமீரக காயிதே மில்லத் பேரவை பொதுச்செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, முதுவை ஹிதாயத் ஆகியோர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் ராஜகோபாலை ஒப்படைத்தனர். தந்தையை பெற்றுக் கொண்ட சுந்தர்ராஜன் மிகவும் நெகிழ்ச்சியுடன் இப்பணியில் மிகவும் ஒத்துழைப்பு நல்கிய துபாய் இந்திய தூதரகம், ஈமான் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையினருக்கும், ஊடகங்களுக்கும் தனது குடும்பத்தினரின் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு விடைபெற்றார். 
இந்நிகழ்வில் 'நகைச்சுவை பேரரசு' தேவகோட்டை ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்
.
ஜனாப்.முஹமது தாஹா அவர்களையும் மற்றும் முதுகளத்தூர் ஹிதாயத் அவர்களையும்  பாராட்டி மகிழ்கிறது திருப்பனந்தாள் ஜமாத்தார்கள் மற்றும் நண்பர்கள்..
உங்கள் சேவை தொடர வாழ்த்துகிறோம். 
நன்றி : தினமலர் , முதுகளத்தூர்.காம் & thatstamil.com

புதன், டிசம்பர் 19

வரலாற்றில் இன்று.



  • 1154- இங்கிலாந்தின் இரண்டாம் ஹென்றி முடிசூடினான்.
    1606 - ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
    1871 - யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் (ordination) வழங்கப்பட்டன.
    1916 - முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ஜேர்மனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
    1932 - பிபிசி எனப்படும் பிரிட்டிஷ் ஒலிபரப்புக் கழகம் முதன் முதலில் வெளிநாடு ஒன்றுக்கு ஒலிபரப்பத் தொடங்கியது. Empire Service என்ற அந்தச் சேவையைப் பெற்ற நாடு ஆஸ்த்திரேலியா.
    1941 - அடொல்ஃப் ஹிட்லர் ஜேர்மனிய இராணுவத் தலைவர் ஆனார்.
    1961 - போர்த்துகீச குடியேற்ற நாடான டாமன் டையூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
    1963 - சன்சிபார் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்று சுல்தான் ஹமூட் பின் முகமது தலைமையில் முடியாட்சியைப் பெற்றது.
    1972 - சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
    1983 - உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
    1984 - ஹொங்கொங்கின் ஆட்சியை ஜூலை 1, 1997 இல் மக்கள் சீனக் குடியரசிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டெங் க்ஸியாவோபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டது.
    1986 - சோவியத் எதிர்ப்பாளி அந்திரேய் சாகரொவ் வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
    1997 - ஆங்கிலத் திரையுலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய Titanic திரைப்படம் முதன் முதலில் திரையிடப்பட்டது.
    2000 - யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டன

தமிழக KFC ஹலால் இல்லையாம்..தெரியுமா உங்களுக்கு!?!

கல்வி மற்றும் தொழில் நிமித்தமாக நம்மில் பலர் வெளியூர்களில் வசிப்பதுண்டு. குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் அதிகம் வசித்துவருகின்றனர். தாமாகவே சமைத்துக்கொள்வதென்பது நம்ம ஊரு நாக்கு ருசிக்கு ஒத்துவருமோ இல்லையோ ஆனால் வேலை/படிப்பு போக நமக்கு கிடைக்கும் எஞ்சிய நேரம்,காலத்தின்படி சமைக்க ஒத்துவருவதில்லை.முக்கியமாக திருமணம் ஆன/ஆகாத பிரம்மச்சாரிகளுக்கு இது பொருந்தும்.



சென்னை போன்ற நகரங்களில் வார விடுமுறை என்றால் ஒன்று போர்வை போர்த்திக்கொண்டு நாள் முழுதும் தூங்குவதுண்டு அல்லது இரு சக்கரங்களில் ஒரு சக்கரம் மட்டும் தரையை தொட்டவாறு கடற்கை பக்கம் இருக்கும் சிட்டி சென்டருக்கோ, எக்ஸ்பிரஸ் அவனியூவிற்கோ, ஸ்பென்சர் பிளாசா போன்ற அங்காடிகளுக்கு நண்பர்கள் அல்லது குடும்பத்தாருடன் செல்வதுண்டு. அதிக மக்கள் மாலை நேரத்தில் இங்கு செல்வதால் இரவு உணவை நாலு மாடி ஏறி இறங்கின களைப்பில் கோழிக்கால்களை தேடி கால்கள் KFC போன்ற துரித உணவகம் பக்கம் பறக்க பறக்க செல்லும். ஹலால் என்ற பச்சை (பொய்) எழுத்தில் எழுதி தாயத்து தகடு போல் ஒரு ஃபத்வாவை ஒரு ஓரத்தில் ஃபிரேம் மாட்டி வைத்து ஹலால் என்று நிரூபிருத்திருப்பார்கள்.

இதைக்கண்டு இத்தனைநாள் நாம் ஏமார்ந்து போகிருக்கின்றோம் என்பதை அறிந்துக்கொள்ள கீழே உள்ள உரையாடலை கேட்டு பயன்பெறுங்கள். முடிந்தவரை பிறருக்கும் பரப்புங்கள்.



இதேபோல் மேலும் எத்தனை நிறுவனங்கள் நம்மை ஏமாற்றுகின்றதென்று தெரியவில்லை. இதனை வைத்து பார்க்கும்பொழுது சுகுணா கோழியை வாங்குவதிலும் நாம் ஒரு கண்ணு வைத்திருக்கனும் போலிருக்கு .

கோழியை விற்க ஈமானையே விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனைக்குரிய செய்திதான்..

ஞாயிறு, டிசம்பர் 16

வரலாற்றில் இன்று.


1431 - இங்கிலாந்தின் ஆறாம் ஹென்றி பிரான்ஸ் மன்னனாக பாரிசில் முடிசூடினான்.
1497 - வாஸ்கொடகாமா முன்னர் பர்தலோமியூ டயஸ் சென்றடைய முடியாத தென்னாபிரிக்காவின் அட்லாண்டிக் கரையோரத்தில் உள்ள நன்னம்பிக்கை முனையை சுற்றி வந்தார்.
1598 - கொரிய, ஜப்பானியக் கடற்படைகளுக்கிடையே இடம்பெற்ற சமரில் கொரியா வெற்றி பெற்றது.
1653 - சேர் ஒலிவர் குரொம்வெல் இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, அயர்லாந்து நாடுகள் அடங்கிய பொதுநலவாயத்தின் தலைவரானார்.
1707 - ஜப்பானின் ஃபூஜி மலை கடைசித் தடவையாக வெடித்தது.
1773 - அமெரிக்கப் புரட்சி: பாஸ்டன் தேநீர் கொண்டாட்டம் - அமெரிக்கர்கள் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனியின் கப்பல்களில் ஏறி தேநீர் பெட்டிகளை பாஸ்டன் துறைமுகத்தில் எறிந்தனர்.
1920 - மிக மோசமான நில நடுக்கங்களுள் ஒன்று சீனாவின் கான்ஸீ மாநிலத்தைத் தாக்கியது, ரிக்டர் அளவுகோளில் எட்டாக பதிவான இயற்கைப் பேரிடரில் சுமார் 200 ஆயிரம் பேர் மடிந்தனர்.
1925 - இலங்கை வானொலியின் வானொலி சேவை கொழும்பில் ஆரம்பம்.
1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் சரவாக்கீன் மிரி நகரைக் கைப்பற்றினர்.
1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் சரணடைந்து போர் முடிவுக்கு வந்தது.
1971 - பாஹ்ரேன் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
1991 - கசக்ஸ்தான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது
2000 - ஜூபிடர் கோளைச் சுற்றும் Ganymede என்ற நிலாவில் ஐஸ் மேற்பரப்பின் கீழ் திரவ உப்புநீர்க்கடல் இருப்பதற்கான தடயங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்தன

நிலாவில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா திட்டம்.

விண்வெளியில் காய்கறித் தோட்டம் அமைக்க சீனா முடிவு செய்துள்ளது. இதன் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொள்ளும் வீரர்கள் இனி உணவுக்காக திண்டாட தேவையிருக்காது என்று வெற்றிகரமான ஆய்வுக்கூட சோதனைக்கு பின்னர், ஒரு சீன உயர் அதிகாரி கூறியுள்ளார்.

சீனா விஞ்ஞானிகள் வருங்காலத்தில், நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்தில்லோ காய்கறித்தோட்டம் அமைக்க உள்ளனர். இதற்காக ஒரு மூடிய அமைப்பில் மக்கள் மற்றும் தாவரங்களுக்கு இடையேயான ஒரு டைனமிக் சமச்சீர் ஆக்சிஜன் நுட்பம், கார்பன் டை ஆக்சைடு, நீர் மீது கவனம் செலுத்தி நடந்து வருவதாக டெங் யிபிங் என்ற சீன விண்வெளி வீரர் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் துணை இயக்குனர் கூறினார்.

இச்சோதனையில், நான்கு வகையான காய்கறிகள் வளர்க்கப்பட்டது. அவை, மனிதர்கள் வெளியிடும் கரியமிலத்தை எடுத்து கொண்டு, அந்த அறையில் வாழும் இரண்டு பேருக்கு ஆக்சிஜன் வழங்கியது. அவ்வாறே அச்செடிகள் தொடர்ந்து வளர்ந்ததாகவும், பின்னர் அதை அவர்கள் உணவுக்கு காய்கறிகளாக கூட பயன்படுத்தும் வாய்ப்பும் இருந்ததாக டெங் கூறினார்.

டெங்கின் கூற்று படி, இது தொடர்பான சோதனையின் போது ஒரு 300 கன மீட்டர் மூடிய அறையில் இரண்டு பங்கேற்பாளர்களுக்கு காற்று, தண்ணீர் மற்றும் உணவு நிலையான விநியோகம் கிடைத்ததாக உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இவ்வகையில் முதன் முதலாக நடந்த சோதனை இது தான் என்றும், இது அந்நாட்டின் விண்வெளி திட்டத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்தது என்று டெங் கூறினார். கட்டுப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் வாழ்க்கை ஆதரவு அமைப்பு (CELSS) எனப்படும் இந்த அறை போன்ற அமைப்பு 2011-இல் கட்டப்பட்டது.

இது சீன விண்வெளி வீரர்கள் வாழ்க்கை ஆதரவு அமைப்புகளில், மூன்றாவது தலைமுறை மாதிரியாக திகழ்கிறது. வருங்காலத்தில், இத்திட்டம் நிலவிலோ அல்லது செவ்வாய் கிரகத்தில்லோ அமல்படுத்தபடும் என தெரிகிறது. சீனர்கள் மட்டுமல்லாது, இச்சோதனைகளில், ஜெர்மனி நாட்டு விஞ்ஞானிகளும் இனைந்து பங்கேற்றனர். CELSS தொழில்நுட்பத்தின் அறிமுகம், தாவரங்கள் மற்றும் பாசிகளின் உதவியுடன் விண்வெளியில் காற்று, தண்ணீர் மற்றும் உணவின் நிலையான விநியோகம் கிடைக்க வழிவகை செய்கிறது.

இப்போதுள்ள தொழில்நுட்பங்கள் படி, 6 மாதங்களுக்கு மேல் விண்வெளியில் தாங்க கூடிய உணவு பொருட்களை உருவாக்குவதில் மிகுந்த சிரமங்கள் இருந்தன. இக்காரணத்தினால் தான், விண்வெளியில் நீண்ட கால ஆராய்ச்சிகளை விண்வெளி வீரர்களால் மேற்கொள்ள முடியாமல் இருந்தது. இந்த CELSS-ன் கண்டுபிடிப்பு மனிதகுலத்திற்கு ஒரு பெரிய வரமாக மாறக்கூடும். இந்த தொழில்நுட்பம் சரியாக இயங்க துவங்கினால், வருடக்கணக்கில் நீளும் விண்வெளி பயணங்களை கூட நமது விண்வெளி வீரர்கள் மேற்கொள்ள முடியும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

செவ்வாய், டிசம்பர் 4

அமீரகத்தின் 41 ஆம் தேசிய தினம்..

துபை ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா அமீரகத்தின் 41 ஆம் தேசிய தினமான 02 டிசம்பர் 2012 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை ஷார்ஜா ரயான் ஸ்டார் இண்டர்னேஷனல் ஸ்கூலில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

அமீரகத்தின் 41 ஆம் தேசிய தினமான 02 டிசம்பர் 2012, திருப்பனந்தாள் மக்கள் கோலாகல கொண்டாட்டம்...








திங்கள், டிசம்பர் 3

துபாயில் கனமழை..

துபாய் : துபாய் மற்றும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும்  30.11.2012 வெள்ளிக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. எனினும் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் வெளியில் சென்று களிக்க திட்டமிட்டவர்களுக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. மிக நீண்ட நாட்களுக்குப் பின்னர் துபாயில் கனமழை பெய்து வருவது மக்களுக்கு மகிழ்வை அளித்து வருகிறது. 


புதன், நவம்பர் 28

இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பர்தா அணிந்து உரையாற்றிய முதல் பெண் உறுப்பினர்.

இங்கிலாந்தில் இளைஞர்கள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் மற்றும் மக்களின் கருத்துக்களை பாராளுமன்றத்தில் பிரதிபலிக்கும் வகையில் இளைஞர் பாராளுமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக 11 வயது முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டு, பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அவற்றை இங்கிலாந்து எம்.பி.க்கள் கவனித்து நடவடிக்கை எடுப்பார்கள்.


அந்த வகையில், மேற்கு லண்டனில் உள்ள வோக்கிங்காம் பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுமையா கரிம் என்ற 16 வயத மாணவி, இங்கிலாந்து இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்றியது அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது. காரணம், தலை மற்றும் கழுத்தை மறைக்கும் வகையிலான இஸ்லாமியர்களின் பாரம்பரிய உடையான ஹிஜாப்பை (பர்தா) அவர் அணிந்திருந்ததுதான்.

இதன்மூலம் பிரிட்டன் எம்.பி.க்கள் முன்னிலையில், ஹிஜாப் அணிந்து இளைஞர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் நபர் என்ற பெருமையை கரிம் பெற்றிருப்பதாக கருதப்படுகிறது. ஹிஜாப் அணிந்து வந்தது தனது சொந்த தேர்வு என்று கரிம் கூறுகிறார்.

சீனாவில் உலகின் மிக நீளமான தொங்கு பாலம் !!

உலகிலேயே மிக நீளமான, உயரமான தொங்கு பாலம் சீனாவில் தான் உள்ளது சீனாவின் ஹூனான் மாகாணத்தில் அன்ஹியாட் நகரில் மிகவும் உயரமான மலைத்தொடர்கள் உள்ளன. இங்குள்ள இரு மலைத்தொடர்களையும் இணைக்கும் வகையில் தொங்கு பாலம் கட்ட கடந்த 2007ம் ஆண்டு அக்டோபர் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்கின.


மொத்தம் 1,102 அடி நீளம் உள்ள இந்த தொங்கு பாலம், 3,858 அடி உயரமும் கொண்ட இரு மலைத
் தொடர்களுக்கிடையே பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.பணிகள்முற்றிலும் முடிவடைந்து விட்டதால், போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இப்பாலம் தான் உலகி‌லேயே மிகவும் நீளமானதும், உயரமானதும் ஆகும்.

78 அடி அகலம் கொண்ட இப்பாலத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனம், கார், கனரக வாகனங்கள் என பல்வேறு வாகனங்கள் செல்வதற்கென தனிப்பாதைகள் மற்றும் பாதசாரிகள் நடக்க தனிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.மணிக்கு 50 கி.மீ வேகத்தில் தான் இப்பாலத்தின் மீது வாகனங்கள் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

திங்கள், நவம்பர் 26

உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலை கட்டும் துபாய்.

துபாய்: உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மாலையும், லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட பெரிய பூங்காவையும் கட்டப்போவதாக துபாய் அரசு அறிவித்துள்ளது.


ஏற்கனவே எக்கச்சக்க மால்கள் உள்ள துபாயில் விரைவில் உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டப்படும் என்று மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார். துபாய் நகரில் முகமது பின் ராஷித் சிட்டியை உருவாக்கவிருக்கின்றனர். மேலும் புதிய குடியிருப்புகளும் கட்டப்படவிருக்கின்றன.

இது தவிர லண்டனில் உள்ள ஹைட் பூங்காவை விட 30 சதவீதம் பெரிய பூங்காவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படும் மாலுக்கு ஆண்டுக்கு 80 மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள துபாய் மால் உள்ளிட்ட மால்கள், ஹோட்டல்களுக்கு இந்த ஆண்டு 62 மில்லியன் மக்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

துபாய் சுற்றுலாத்துறை ஆண்டுக்கு 13 சதவீத வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் கடந்த ஆண்டு அங்குள்ள ஹோட்டல்களின் வருவாய் 22 சதவீதம் அதிகரித்துள்ளது. துபாயின் வளர்ச்சிக்கு புதிய வசதிகள் ஏற்படுத்துவது அவசியம் என்று மன்னர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிறு, நவம்பர் 25

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்.

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம் கட்டப்படுகிறது. தற்போது உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலீபா என்ற கட்டிடம் துபாயில் உள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் ஆகும். இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் சீனா சாங்ஷா நகரில் இதை 
விட மிக உயரமான கட்டிடத்தை கட்டுகிறது. இது 838 மீட்டர் உயரம் அதாவது 2,749 அடி உயரம் கொண்டதாக இருக்கும். 

சீனாவில் 220 அடுக்கு மாடிகளுடன் உலகிலேயே மிக உயரமான கட்டிடம்
220 அடுக்கு மாடிகளை கொண்ட இக்கட்டிடம் முழுவதும் ஏர்கண்டிசன் (குளு குளு வசதி) செய்யப்பட உள்ளது. துபாயில் உள்ள புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்ட 5 ஆண்டுகள் ஆனது. ஆனால் இக்கட்டிடம் 90 நாட்களில் கட்டி முடிக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி தொடக்கத்தில் கட்ட தொடங்கி மார்ச் மாதம் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 5 அடுக்கு மாடிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. புர்ஜ் கலீபா கட்டிடத்தை கட்டிய கட்டுமான நிறுவனமே இதை கட்டி தனது சாதனையை முறியடிக்கிறது.

இதில், அதே கட்டுமான கலைஞர்களும், என்ஜினீயர்களும் ஈடுபட உள்ளனர். ஏற்கனவே உலகில் உள்ள மிக உயரமான 20கட்டிடங்களில் 9 கட்டிடங்கள் சீனாவில் உள்ளன.

வரலாற்றில் இன்று !

1758 - பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர்.
1795 - சுதந்திரப் போலந்தின் கடைசி மன்னன் ஸ்டனிஸ்லாஸ் ஆகஸ்ட் பொனியாட்டோவ்ஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டான்.
1839 - இந்தியாவில் பலத்த சூறாவளி ஏற்பட்டது. ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றாக சேதமடைந்தது. 30,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1867 - அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார்.
1884 - Evaporated Milk செய்வதற்கான காப்புரிமத்தைப் பெற்றார் அமெரிக்கரான மெயின் பெர்க்


Indian Flag

1905 - டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான்.
1936 - ஜப்பான், ஜேர்மனி ஆகியன சோவியத் ஒன்றியம் தம் மீது படையெடுத்தால் அதனை கூட்டாக எதிர்கொள்ள பேர்லின் நகரில் ஒப்பந்தம் செய்து கொண்டன.
1948 - இளையர்களுக்கான NCC எனப்படும் தேசிய மாணவர் படை தொடங்கப்பட்டது.
1950 - மக்கள் சீனக் குடியரசு ஐநா படைகளை எதிர்க்க கொரியப் போரில் ஈடுபட்டது.
1952 - அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது.
1973 - கிரேக்கத் தலைவர் ஜோர்ஜ் பாப்படபவுலொஸ் இராணுவப் புரட்சி ஒன்றில் பதவி இழந்தார்.
1975 - சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1981 - ரொடீசியாவிலிருந்து மும்பாய்க்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடத்தப்பட்டு தென்னாபிரிக்காவின் டர்பன் நகருக்குச் செலுத்தப்பட்டது.
1990 - போலந்தில் முதன் முதலாக அதிபர் தேர்தல் நடந்தது
1992 - செக்கொசிலவாக்கியாவின் நாடாளுமன்றம் நாட்டை செக் குடியரசு, சிலவாக்கியா என இரண்டாக ஜனவரி 1, 1993 இலிருந்து பிரிக்க முடிவெடுத்தது.

வியாழன், நவம்பர் 22

பரசூட்டில் அலுவலகம் செல்லும் வினோத மனிதன்!

வீதிகளில் வகை வகையான வாகனங்கள் செல்கையில் பொது போக்குவரத்து பஸ்களும் வீதிகளில் பயணிக்கையில் சீனாவை சேரந்த ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்து நெறிசலை தவிர்த்துக்கொள்ளவும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்காகவும் சீனர் ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றார்.



சீனரான செங் டெக்ஸியா என்பவரே இத்தகைய விபரீத போக்குவரத்தை மார்க்கத்தை கடைபிடித்து வருகிறார். போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர் அலுவலகத்திற்கு செல்வதற்காக தினமும் 3 மணித்தியாலங்களை வீதியிலேயே செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நேரம் அநியாயமாக செலவாவதை தடுப்பதற்கும் அலுவலகத்திற்கு இலகுவில் செல்வதற்கான வழிமுறையாக பரசூட் மார்க்கத்தை கடைப்பிடித்துள்ளதுடன் பரசூட்டில் பறப்பதற்கான பயிற்சியையும் எடுத்துகொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, தொழில்புரியும் நான் நகரின் பல்வேறு முனைகளுக்கும் பயணிக்கின்றேன். இதனால், பல மணித்தியாலங்களை போக்குவரத்து நெறிசலின்போது வீணாக செலவிட நேரிடுகின்றது. வாகன நெறிசல் மிக்க சாலையின் மேலே என்னால் இப்போது இலகுவாக பயணிக்க முடிகின்றது. பரசூட் மூலம் அலுவலகம் செல்வதற்கு சில நிமிடங்களே எடுக்கின்றன. இங்கு போக்குவரத்து நெறிசல் அதிகமாக காணபடுகின்றமையினால் என்னைப் போல பலரும்; இந்த போக்குவரத்து மார்க்கத்தையே கடைபிடித்து வருகின்றனர் என்றார்.

செவ்வாய், நவம்பர் 20

உஷார்... இண்டர்நெட்வாசிகளின் விவரங்களை கோருவதில் இந்தியாவுக்கு 2-வது இடமாம்!

சென்னை: இணையத்தில் உலாவரும் தனிநபர்களைப் பற்றிய தகவல்களைக் கோருவதில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பதாக கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் 
இணைய பயன்பாட்டாளர்கள் 3467 பேர் பற்றிய தகவல்களைக் கோரி 2319 வேண்டுகோள்களை இந்தியா விடுத்திருக்கிறது. அமெரிக்காவோ இதுபோல் 7969 வேண்டுகோளை விடுத்திருக்கிறது.


அமெரிக்கா, இந்தியாவுக்கு அடுத்து பிரேசில் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த நாடு இண்டர்நெட்வாசிகள் பற்றி 1566 வேண்டுகோளை கொடுத்திருக்கிறது. மொத்தமாக இண்டர்நெட்வாசிகள் பற்றிய 20,938 வேண்டுகோள்கள் கூகுளுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. பொதுவாக ஜிமெயில் அக்கவுண்ட், சாட்டிங் விவரங்கள், ஆர்குட் விவரங்களைப் பற்றியே அதிகம் கேட்கப்பட்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆண்டுக்கு ஆண்டு இதுபோன்ற தகவல்களைக் கோரும் வேண்டுகோள்கள் அதிகரித்தே வருகிறது என்கிறது கூகுள் வட்டாரம்.

நீதிமன்ற உத்தரவுகள் மூலமும் இத்தகைய தகவல்களைக் கோருவது இந்தியாவில் அதிகரித்தே வருகிறது. இணைய தளங்கள் மூலமாக நீதிமன்றங்களுக்கு தகவல்களைத் தருவதும் அதிகரித்தே வருகிறது. நடப்பாண்டில் இதுபோல் 596தகவல்கள் நீதிமன்றத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது 20 நீதிமன்ற உத்தரவுகள் மூலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. ஆனால் 2010 ஆம் ஆண்டு 125 விவரங்கள் இணையதளம் மூலம் நீதிமன்றங்களுக்குக் கொடுக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப உஷாராக இருக்கிறதா நினைக்கிற இண்டர்நெட்வாசிகளே! எச்சரிக்கை!

ஞாயிறு, நவம்பர் 18

ஐக்கிய அரபு அமீரகத்தில் பொது மன்னிப்பு அறிவிப்பு !

சட்டவிரோதமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருக்கும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களும் விசாவை புதுப்பித்து சட்டப்படி தங்குவது, அல்லது அபராதம், சிறைத்தண்டனை இல்லாமல் சொந்த நாடுகளுக்கு திரும்பும் வகையில் பொது மன்னிப்பை ஐக்கிய அரபு அமீரக அரசு மீண்டும் அறிவித்துள்ளது.



டிசம்பர் 4-ஆம் தேதி முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை பொது மன்னிப்பின் காலாவதியாகும்.

இக்காலக்கட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் அனைத்து தொழிலாளர்களும் வசிப்பிட, குடியேற்ற துறையுடன் தொடர்புக்கொண்டு சட்டப்பூர்வமான ஆவணங்களை பெறவோ அல்லது அவுட் பாஸைப் பெற்று சொந்த நாடுகளுக்கு திரும்பவோ செய்யலாம். இத்தகவலை அஸிஸ்டெண்ட் அண்டர் செகரட்டரி மேஜர் ஜெனரல் நாஸர் அல் அவாதி மின்ஹலி தெரிவித்துள்ளார்.

சனி, நவம்பர் 17

இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள்? அப்போ இதைப் படிங்க..

சென்னை: இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவர்கள் தங்கள் வங்கிக் கணக்கை எப்படி பத்திரமாக பாதுகாப்பது என்பதை தெரிந்திருக்க வேண்டும்.

வங்கிகளில் கணக்கு வைத்திருப்போருக்கு அதை எப்படி பத்திரமாக வைப்பது என்பதும் தெரிந்திருக்க வேண்டும். இன்றைய நவீன உலகில் பணம் எடுக்க, வேறு கணக்கிற்கு அனுப்ப வங்கிக்கு போக பலருக்கு நேரமில்லை. அதனால் அருகில் உள்ள ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கிறார்கள், இன்டர்நெட் பேங்கிங் மூலம் பண பரிவர்த்தனை செய்கிறார்கள். தற்போது பலர் போன் பேங்கிங் செய்கின்றனர். அதாவது இன்டர்நெட் வசிதியுள்ள செல்போனில் பண பரிவர்த்தனை செய்கின்றனர்.

இன்டர்நெட் பேங்கிங், போன் பேங்கிங் செய்பவரா நீங்கள். அப்படி என்றால் உங்கள் வங்கிக் கணக்கை எப்படி பாதுகாப்பது என்று பார்ப்போம்.

1. யாராவது உங்களுக்கு போன் செய்து நாங்கள் வங்கியில் இருந்து அழைக்கிறோம் என்று கூறினால் உடனே அவர்கள் கேட்கும் தகவலைக் கொடுத்துவிடாதீர்கள். மாறாக நீங்களே வங்கிக்கு போன் செய்யுங்கள்

2. ஒன்றுக்கும் மேற்பட்ட ஏ.டி.எம். கார்டு வைத்திருந்தால் அனைத்திற்கும் ஒரே பின் நம்பரை வைக்காதீர்கள்.

3. உங்கள் வங்கிக் கணக்கு பாஸ்வேர்டை கம்ப்யூட்டரில் சேவ் பண்ண வேண்டாம்.

4. போன் பேங்கிங் செய்பவர்கள் போனுக்கு செக்யூரிட்டி லாக் போடுங்கள்.

5. வங்கியைத் தொடர்பு கொண்டு நீங்கள் பேசும்போது அதை பிறர் கேட்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

6. தேதி அல்லது எண்களை பின் நம்பராக வைக்க வேண்டாம்.

7. இன்டர்நெட் சென்டருக்கு சென்று ஆன்லைனில் பண பரிவர்த்தனை செய்தால் அதை யாராவது பார்க்கிறார்களா என்று கவனிக்கவும். பரிவர்த்தனை முடிந்த பிறகு வங்கிக் கணக்கை லாக் அவுட் செய்ய மறக்க வேண்டாம்.

8. கம்ப்யூட்டர் மற்றும் செல்போனில் ஆன்ட்டி வைரஸை அப்டேட் செய்யவும்.

செவ்வாய், நவம்பர் 13

சல்மான் குர்ஷித்துக்கு ஐக்கிய அரபு மந்திரி அழைப்பு.

புதுடெல்லி, நவ.13-

இந்திய வெளியுறவுத் துறை மந்திரியாக கடந்த வாரம் பதவியேற்ற சல்மான் குர்ஷித்துக்கு, ஐக்கிய அரபு வெளியுறவுத்துறை மந்திரி, ஷேக் அப்துல்லா பின் ஸயெத், நேற்று தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.


இந்த உரையாடலின் போது, இந்தியா-ஐக்கிய அரபு இடையே ஏற்கெனவே வலிமையாக உள்ள உறவுகளை, மேலும் பலப்படுத்த இரு நாட்டு மந்திரிகளும் ஒப்புக் கொண்டனர்.

தங்கள் நாட்டுக்கு வருகை தரும்படி சல்மான் குர்ஷித்துக்கு,ஷேக் அப்துல்லா பின் ஸயெத் அழைப்பும் விடுத்தார்.

ஞாயிறு, நவம்பர் 11

உங்கள் விழிப்புணர்வுக்காக!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.


அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.

"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.

அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.

உங்கள் விழிப்புணர்வுக்காக!

புதன், நவம்பர் 7

உங்களால் இந்த சிறுவனிடம் சவால்விட முடியுமா?

உக்ரைனைச் சேர்ந்த Andriy Kostash என்ற 7 வயதுச் சிறுவன் உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக விளங்கும் புஸ்-அப் (Push-Ups)- பினை சுமார் 4,000 தடவைகள் தொடர்ச்சியாக மேற்கொண்டு அசத்தியுள்ளார்.

இந்தச் சிறுவன் இத்தகைய உடற்பயிற்சியினை நிறைவேற்ற 2 மணி 29 நிமிடங்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





பாஸ் வைத்திருக்கும் மாணவர்களை பார்த்தவுடன் நிற்காமல் பறக்கும் அரசு பஸ்.

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பகுதியில் தமிழக அரசின் இலவச பஸ் பாஸ் வைத்திருக்கும் மாணவ, மாணவிகளை பார்த்தவுடன் அரசு பஸ்சை நிறுத்தாமல் சென்று விடுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதுதவிர மேலும் சில அரசு பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் செஞ்சி அகரம், பனப்பாக்கம், பேரண்டூர், பாலவாக்கம், சூளைமேனி மற்றும் பல பகுதிகளில் இருந்து 1200க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் அரசு பஸ்களை நம்பி உள்ளனர். மாணவர்களுக்கு தமிழக அரசு, இலவச பஸ் பாஸ் வழங்கி உள்ளது. 



இந்த மாணவர்களை பார்த்தவுடன் டிரைவர், கண்டக்டர் அரசு பஸ்சை நிறுத்துவது கிடையாது. இதனால் மாணவர்கள் தங்கள் பகுதி வழியாக செல்லும் தனியார் பால் வேன், டிராக்டர் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் தொங்கிக்கொண்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்று படித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்களும் மாணவர்களும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இன்று காலை பால் வேனில் சென்ற மாணவர்கள் கூறுகையில், ‘‘தாராட்சியில் இருந்து படிக்க செல்கிறோம். எங்கள் ஊருக்கு வரும் அரசு பஸ்கள் எங்களை ஏற்றாமல் வந்துவிட்டது. காசு கொடுத்தால்தான் ஆட்டோவில் ஏற்றி வருவார்கள். இதனால் பால்வேனில் வந்தோம்’’ என்றனர்.

செவ்வாய், நவம்பர் 6

ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா..

அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )
                ஈமான் அமைப்பின் 37 ஆம் ஆண்டு விழா இன்ஷா அல்லாஹ் 02.12.2012
வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 41 ஆவது தேசிய தினத்தன்று ஷார்ஜா ரயான் ஸ்டார் இண்டர்னேஷன் ஸ்கூலில் நடைபெற இருக்கிறது.
 

முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே உணவு மற்றும் போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.

28.11.2012 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முன்பதிவு செய்யாமல் வருகை தந்து ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பிக்கஇருப்பதாக பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி தெரிவித்துள்ளார்.

பேருந்துகள் தேரா சுற்றுலா பேருந்துகள் புறப்படும் இடத்திலிருந்தும், அஸ்கான் டி பிளாக்கில் இருந்தும் காலை 8.00 மணிக்கு புறப்படும்.
விழா சிறப்புடன் நடைபெற அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முன் ப‌திவு செய்யும் இட‌ங்க‌ள்

துபாய் :

தேரா / தமிழ் பஜார் : வி. க‌ள‌த்தூர் சாகுல் ஹ‌மீது : 050 883 48 49

டி பிளாக் : காய‌ல் ஈஸா : 055 40 63 711

அல் கூஸ் : திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன் : 050 355 08 78 / 055 800 79 09


சோனாப்பூர் : சென்னை தமீம் அன்சாரி 050 2841 878
 

அஜ்மான் : ம‌துக்கூர் ஹிதாய‌த்துல்லாஹ் : 050 77 52 737
 

ம‌ற்றும்
 

முதுவை ஹிதாய‌த் : 056 684 71 20 / 050 51 96 433
கீழை ஹ‌மீது யாசின் : 050 475 30 52..

 விவரங்களை தெரிந்து கொள்ள www.imandubai.com யை பார்க்கவும்...

ஞாயிறு, நவம்பர் 4

ஐந்து வயது சிறுவனின் அபரீத திறமை..


தைரியம் என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாததொன்று. அந்த வகையில் ஐந்து வயது சிறுவன் பலரின் புருவங்களை உயரச் செய்துள்ளான். இன்றும் நாம் வளர்ந்து விட்டோம் அதில் எத்தனை பேர் துணிவாக வாகனத்தை ஓட முயற்சிகிறோம்.

ஆனால் சீனாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் front-end loader என்ற வாகனதை எவ்வளவு லாபகமாக கையாள்கிறான் என பாருங்கள். இது ஒட்டுமொத்த சிறுவர்களும் தைரியத்தையும், நம்பிக்கையையும் தரும் என்ற நம்பிக்கையில் இந்த காணொளியை இணைந்துள்ளோம்.

சனி, நவம்பர் 3

டிசம்பர் 1 முதல் அடையாள அட்டை இல்லாமல் ரயிலில் பயணம் செய்ய முடியாது!!

சென்னை: டிசம்பர் 1ம் தேதி முதல் ரயிலின் அனைத்து வகுப்புகளிலும் பயணம் செய்ய அடையாள அட்டை அவசியம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


ரயிலில் பயணம் செய்ய ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட்டுகள் தவறாக 
விற்பனை செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இந்த முறைகேட்டை தடுக்கும் வகையில் தட்கல் டிக்கெட் மூலம் பயணம் செய்பவர்களும், குளிர்சாதன வகுப்பு பெட்டியில் பயணம் செய்பவர்களும் ஏதாவது ஒரு அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பர் 1ம் தேதி முதல் 2ம் வகுப்பு தூங்கும் வசதி, 2ம் வகுப்பு உட்காரும் வசதி, முதல் வகுப்பு, 3 அடுக்கு நடுத்தர வகுப்பு ஆகிய பிரிவினரும் முன்பதிவு செய்யும் போது அடையாள அட்டை எண்ணை குறிப்பிட வேண்டும். அந்த அடையாள அட்டையின் ஒரிஜினலை பயணத்தின் போது காட்ட வேண்டும்.

முன்பதிவு செய்திருந்தாலும் இனி அடையாள அட்டை இல்லாமல் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அடையாள அட்டை அனைத்து பிரிவுகளுக்கும் 
கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



செவ்வாய், ஆகஸ்ட் 21

துபாய் ஈத் பெருநாள் - நமது ஊர் நண்பர்கள்

துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் மக்கள் திரண்டனர்...



துபையில் ஈத் பெருநாள் திருப்பனந்தாள் மக்கள்  கோலாகல கொண்டாட்டம்...




நிகழ்வில் TPLJI - UAE வின் பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், ஷார்ஜாஹ்,அஜ்மான்,அபுதாபி  நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  நிகழ்வில் கலந்துகொண்டனர் .
கூட்டம் முடிந்தபின் குளிர்பானம் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.

சனி, ஆகஸ்ட் 18

இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்,


அனைவருக்கும் இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்..






May Allah Bless You and fill your Life with Peace,Joy and Prosperity in this World and the here after!!!..

Wish You Happy EID - UL - FITHAR.... 

ஞாயிறு, ஆகஸ்ட் 12

State Bank of India - Jobs.


State Bank of India - Clerk (7740 posts)


State Bank of India
Central Recruitment & Promotion Department, Mumbai

Advt No.CRPD/ABCL/2012-13/01
Advt date 25.07.2012
Last date of online regn. 13.08.2012
Last date for fee online 13.08.2012
Last date for fee in branches 17.08.2012
Last date for online application Edit 15.08.2012
Last date for Printout 05.09.2012
Date of exam 07.10.2012 & 14.10.2012

Post:

  • Clerk - 7740 Posts - Pay 7200 - 19300 - HSC (10+2) / 12th std -  age 28 yrs
Associates Banks :
  • State Bank of Bikaner and Jaipur
  • State Bank of Hyderabad
  • State Bank of Mysore
  • State Bank of Patiala
  • State Bank of Travancore

Notification English http://www.sbi.co.in/webfiles/uploads/files/1343129241717_SBI_ABCL_ADVT_ENGLISH.pdf
Notification Hindi http://www.sbi.co.in/webfiles/uploads/files/1343129241717_SBI_ABCL_ADVT_ENGLISH.pdf
Apply Online http://ibpsreg.sifyitest.com/sbiclkjul12/

புதன், ஆகஸ்ட் 1

துபாய் ஈமான் அமைப்பின் நிர்வாகிக‌ளுக்குப் பாராட்டு.

துபாய் : துபாய் ஈமான் அமைப்பு வ‌ருட‌ந்தோறும் ர‌ம‌லான் மாத‌த்தில் தின‌மும் 3000 க்கும் மேற்ப‌ட்ட‌ நோன்பாளிக‌ளுக்கு த‌மிழ‌க‌த்து நோன்புக் க‌ஞ்சியினை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து. இப்ப‌ணியினை மேற்கொண்டு வ‌ரும் ஈமான் நிர்வாகிக‌ளுக்கு பாராட்டு நிக‌ழ்ச்சி ந‌டைபெற்றது.

இந்நிக‌ழ்வில் த‌மிழ‌க‌த்திலிருந்து வ‌ருகை புரிந்த‌ சென்னை உய‌ர்நீதிம‌ன்ற வ‌ழ‌க்க‌றிஞ‌ர் கோவை ந‌ந்த‌குமார் பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் லியாக்க‌த் அலிக்கு ஏல‌க்காய் மாலையினை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அத‌னைத் தொட‌ர்ந்து துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவுக்கு பொன்னாடை அணிவித்தார்.



Photo Gallery
இந்நிக‌ழ்வில் ஈடிஏ அஸ்கான் துணைப் பொது மேலாள‌ர் அஹ‌ம‌து முஹைதீன், ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டு மேலாள‌ர் சைய‌து அபுதாஹிர், ஈமான் நிர்வாகிக‌ள் முதுவை ஹிதாய‌த், காய‌ல் யஹ்யா முஹ்யித்தீன், கீழை ஹ‌மீது யாசின், கும்ப‌கோண‌ம் சாதிக், வி.க‌ள‌த்தூர் ஷ‌ர்புதீன், வி.க‌ள‌த்தூர் சாகுல் ஹ‌மீது, திண்டுக்க‌ல் ஜ‌மால் முஹ்யித்தீன், கோவை இல்யாஸ், ப‌டேஷா ப‌ஷீர், ம‌துக்கூர் நூருல் அமீன், ம‌ண‌மேல்குடி அம்ஜ‌த் கான், இஸ்மாயில் ஹாஜியார் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

வியாழன், ஜூலை 26

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் பரகத் தெரு ஜனாப்.ரசாக் மற்றும் முஜிப்  அவர்களின் தகப்பனார்  ஜனாப்.அப்துல் கபூர்  சவுதி அரேபியாவில் இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

புதன், ஜூலை 25

2008, 2009, 2010-ம் ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு சிறப்பு சலுகை.

சென்னை, ஜுலை.25-

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் மகேசன் காசிராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் பேரில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடந்த தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து 2008, 2009 மற்றும் 2010 ஆகிய ஆண்டுகளில் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவினை புதுப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு முறை புதுப்பித்து கொள்ள சிறப்பு புதுப்பித்தல் சலுகையை தமிழக அரசு வழங்கியுள்ளது. 


இச்சலுகையை பெற விரும்பும் மனுதாரர்கள் அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாகவோ தங்கள் பதிவினைப் புதுப்பித்துக்கொள்ளலாம். 18.10.2012-க்குப்பின் பெறப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.

1.01.2008-க்கு முன் புதுப்பிக்க தவறியவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேற்குறித்த காலக்கட்டத்தில் தங்களது பதிவினை புதுப்பிக்க தவறியவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமாக 18.10.2012-க்குள் தங்களது பதிவினை புதுப்பித்துக்கொள்ளலாம்.

இணையதளம் மூலம் பதிவினை புதுப்பிக்க இயலாதவர்கள் சம்பந்தப்பட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு வேலைவாய்ப்பு அடையாள அட்டையின் நகலுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமோ மனு செய்துகொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

சனி, ஜூலை 21

ரமலான் மாத நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 3,800 டன் அரிசி-ஜெ. உத்தரவு.

சென்னை: ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க, தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 3,800 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.



இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

சிறுபான்மை மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள முதல்வர் ஜெயலலிதா, இஸ்லாமிய மக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்குவதற்கு தேவையான மொத்த அனுமதியை வழங்க தனது முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 9.11.2001 அன்று உத்தரவிட்டார். அதன்படி பள்ளிவாசல்களுக்கு அரிசிக்கான மொத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய மக்களின் கோரிக்கையை கனிவுடன் ஏற்று, இந்த ஆண்டும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்கள் சிரமமின்றி அரிசி பெறுவதற்கு ஏதுவாக மொத்த அனுமதி வழங்க முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

ஆவணங்களை உரிய முறையில் ஆய்வு செய்து பள்ளிவாசல்களுக்குத் தேவையான அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட கலெக்டர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் பயன் அடைவதுடன், 3800 மெட்ரிக் டன்கள் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், ஜூலை 19

திரும‌றை வ‌ந்த‌ தேன்மாத‌ம் வ‌ருகிற‌து...

ர‌ம‌லான் வ‌ருகிற‌து !
ந‌ல‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிறது !


ஈமானில் நாமெல்லாம்
எத்தனை மார்க்கென்று
தீர்மான‌ம் செய்ய
திருநோன்பு வ‌ருகிறது


அருளாளன் அல்லாஹ்வின்
அன்பள்ளி வ‌ருகிறது !
திரும‌றை வ‌ந்த‌
தேன்மாத‌ம் வ‌ருகிறது !


த‌க்வாவை கொஞ்சம்
த‌ட்டிடவே வ‌ருகிறது !
ஹக்கன‌வ‌ன் க‌னிவையும்
அறிவிக்க வ‌ருகிறது !


அருமை நாயகம் (ஸல்)
அறிவித்த‌ நல் அம‌லை
அருமையாய் நாம் ஏற்க
அழைப்பாக வ‌ருகிற‌து !


பத்திய மாத‌மென்று
பறைசாற்றி வ‌ருகிற‌து !
உத்த‌ம ஸஹாபாக்கள்
உவ‌ந்த‌ மாத‌ம் வ‌ருகிற‌து !


ப‌சியின் ருசியறிய
பாங்கோடு வ‌ருகிற‌து ! க‌ல்பில்
க‌சியும் ஈர‌த்தைக்
காட்டிட‌வும் வ‌ருகிற‌து !


கஸ்தூரி வாச‌ம்
க‌ம‌க‌ம‌க்க‌ வ‌ருகிற‌து !
கைக‌ளை ஈகையால்
அல‌ங்கரிக்க‌ வ‌ருகிற‌து !

ஏழை வீதிக‌ளும்
புன்ன‌கைக்க‌ வ‌ருகிற‌து
எல்லோர் ம‌ன‌ங்க‌ளுக்கும்
சுக‌ம் சேர்க்க‌ வ‌ருகிற‌து !


க‌லிமாவில் நாவெல்லாம்
க‌லந்திட‌ வ‌ருகிற‌து !
தொழுகை த‌வ‌றாதேயென‌
தூது சொல்லி வ‌ருகிற‌து !


லைல‌த்துல் க‌த்ரென்னும்
ர‌ம்மிய‌ இர‌வுத‌னை
தொழுகையால் அல‌ங்க‌ரிக்க‌
சோப‌ன‌மாய் வ‌ருகிற‌து !


அன்று ப‌த்ருப் போரில்
அண்ண‌லார்க்கு வெற்றியினை
த‌ந்து ப‌ரிச‌ளித்த‌
த‌னிமாத‌ம் வ‌ருகிற‌து !


நோன்பின் மாண்பு சொல்லும்
நூர்மாத‌ம் வ‌ருகிற‌து !
மாண்பில் நாம் ம‌கிழ‌ இபாத‌த்
ம‌ண‌ம‌ள்ளி வ‌ருகிற‌து !


ர‌மலான் வ‌ருகிற‌து
ந‌ல‌ம் கொண்டு வ‌ருகிற‌து !
க‌ம‌ழும் புக‌ழ் நோன்பைக்
கைகோர்த்து வ‌ருகிற‌து !


பொற்கிழி க‌விஞ‌ர் மு.ச‌ண்முக‌மாக இருந்த போது எழுதியவர்


இன்று

பொற்கிழிக் கவிஞர்



மு. ஹிதாயத்துல்லா


இளையான்குடி


நர்கிஸ்
செப்டம்பர் 2008 மாத ரமலான் சிறப்பிதழில்
வெளியான கவிதை.

திங்கள், ஜூலை 16

108 ஆம்புலன்சுக்கு ஆட்கள் தேர்வு.

சென்னை: 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கான வேலைவாய்ப்பு முகாம் சென்னையில் நேற்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு சுகாதார திட்டம் மற்றும் ஜி.வி.கே. இஎம்ஆர்ஐ நிறுவனங்கள் இணைந்து 108 ஆம்புலன்ஸ் சேவையை அளித்து வருகின்றன. தமிழகத்தில் மொத்தம் 470 ஆம்புலன்ஸ்கள் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தற்போது 108 ஆம்புலன்ஸ் சேவைக்காக டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆட்சேர்ப்பு முகாம் சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா காந்தி தாய், சேய் நல மருத்துவமனையில் உள்ள 108 ன் தலைமையிடத்தில் நேற்று தொடங்கியது. 


முகாமை ஜி.வி.கே இஎம்ஆர்ஐ நிறுவன மண்டல மேலாளர் பிரபுதாஸ் தொடங்கி வைத்தார். நேற்று டிரைவர் பணியிடத்துக்கு மொத்தம் 40 பேர் நேர்முகத்தேர்வுக்கு வந்தனர். இவர்களில் தகுதியான 4 பேருக்கு உடனடி பணியாணை வழங்கப்பட்டது. மருத்துவ உத வியாளர் பணியிடத்துக்கு பெண்கள் உட்பட மொத்தம் 10 பேர் வந்தனர். அவர்கள் அனைவருமே தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு முறையான பயிற்சியும், அதை தொடர்ந்து 108 ல் பணியும் வழங்கப்படும்.
 
மொத்தம் 500 காலியிடங்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. ஆனால் மழையால் நேற்றைய முகாமில் குறைந்த அளவு நபர்களே வந்து கலந்து கொண்டனர். எனவே முகாம் வரும் சில நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சனி, ஜூலை 14

1,870 VAO பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு.

தமிழகத்தில் காலியாகவுள்ள 1,870 கிராம நிர்வாக அலுவலர் (VAO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் திங்கள்கிழமை வெளியிட்டது. இத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ம் தேதி கடைசி நாளாகும். செப்டம்பர் 30-ம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் அவ்வப்போது காலியாகி வருகின்றன. கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.க்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், காலியாக உள்ள மேலும் 1,870 இடங்களுக்கு எழுத்துத் தேர்வின் மூலமாக ஆள்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடங்கியுள்ளது.

விண்ணப்பிக்க கடைசித் தேதி:

எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேர்வாணையத்தின் இணையதளத்தை (http://tnpsc.gov.in/) மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
ஏற்கெனவே நிரந்தரப் பதிவு எண் வைத்திருப்பவர்கள் அதையே பயன்படுத்தி வி.ஏ.ஓ. தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அனுப்புவதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 10 ஆகும்.
வங்கி அல்லது அஞ்சலகங்கள் மூலம் கட்டணத்தைச் செலுத்த ஆகஸ்ட் 14-ம் தேதி கடைசி நாளாகும்.
செப்டம்பர் மாதம் 30-ம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 வரை தேர்வு நடைபெறும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 21 ஆகும்.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் (அருந்ததியர்), பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்புனர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) மற்றும் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் 40 வயது வரை தேர்வு எழுதலாம்.
பாடத் திட்டம்:

பொது அறிவுடன் தமிழ் அல்லது ஆங்கில மொழியில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 
பொது அறிவு பகுதியில் இருந்து 100 வினாக்களும், பொதுத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 வினாக்களும் கேட்கப்படும்.
தேர்வுக்குத் தகுதி பெற குறைந்தபட்ச மதிப்பெண்கள் 90 ஆகும்.
தேர்வுக் கட்டணமாக ரூ.125 செலுத்த வேண்டும்.விவரங்களுக்கு...:

விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் விவரங்கள் தேவையெனில் தேர்வாணைய அலுவலகத்தை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ (044-2829 7591 மற்றும் 2829 7584), கட்டணமில்லாத சேவை எண்ணிலோ (1800 425 1002) தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், ஜூலை 12

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்...


நமது ஊர் பரகத் தெரு ஜனாப்.நபீல் அவர்களின் தகப்பனார் மற்றும் சிராஜுதீன்அவர்களின் தம்பி ஜனாப்.அப்துல் முத்தலீப்(சேட்) இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

ஞாயிறு, ஜூலை 8

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் ரஹ்மத் தெரு ஜனாப்.ஷாஜஹான் மற்றும் அன்சாரி அவர்களின் தகப்பனார்  ஜனாப்.இஷாக் இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

வியாழன், ஜூலை 5

நமது ஊர் ஜனாப் (K.S.V)M.J.பஷீர் அவர்களின் இல்ல நிக்காஹ் அழைப்பிதழ்..

நமது ஊர் ஜனாப் (K.S.V)M.J.பஷீர் அவர்களின் இல்ல நிக்காஹ் அழைப்பிதழ்..




மணமக்களை வாழ்த்தும் துவா.

திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய - U.A.E யின்  மணமக்களுக்கு எங்களின் மனம்மார்ந்த வாழ்த்துக்கள்..



புதன், ஜூலை 4

எளிய மருத்துவ குறிப்புகள்.

எளிய மருத்துவ குறிப்புகள்

• முட்டைக்கோஸ், முள்ளங்கி, கோவைக்காய், பாகற்காய், வல்லாரைக்கீரை, காரட், எலுமிச்சை பழம் முதலியன ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

• கருவாடு, அதிக உப்பு ஊறுகாய, அப்பளம் போன்றவற்றை எல்லா வயதுகாரர்களும் தவிர்ப்பது நல்லது.

• காலையிலும், இரவிலும் அத்திப்பழத்துடன் பேரீச்சை சேர்த்து உண்டால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைக்க அத்திப்பழம் உதவுகிறது. உடம்பில் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றும்.

• முளை நரம்புகளை வலுப்படுத்தி ஞாபக சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது வால்நட்

• ரத்த உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் 'கிரீன் டீ' ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுவதையும் தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. வாய்துர்நாற்றத்தைப் போக்குகிறது. பருக்கள் வராமலும் காக்கும். ஞாபக சக்தியைப் பெருக்கும்.

• சாத்துக்குடி ஆரஞ்சு தோல் நோயையும், உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்தும்.

• துளசி, தோல் நீக்கிய இஞ்சி சாப்பிட்டால் சளித்தொல்லை சரியாகும்.

• வாழைப்பழம் சாப்பிட்டு வர பித்தம் குறையும்.

• ஆப்பிள் நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.

• தக்காளி ரத்தத்தை விருத்தியாக்கும்.

நன்றி: மாலை மலர்...