இந்த வலைப்பதிவில் தேடு

புதன், பிப்ரவரி 27

2015ல் லேப்டாப் இப்படித்தான் இருக்குமாம் !!


லேப்டாப் எல்லோராலும் பயன்படுத்தப்படும் மிக எளிய சாதனம். எளிதில் கிடைக்கிறது. இவ்வளவு ஏன், அரசாங்கமே இலவசமாக தருகிறதே!

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில்தான் லேப்டாப் என்ற சாதனமே கிடைக்கப்பெற்றது! அதே தொழில்நுட்ப வளர்ச்சியானது லேப்டாப் என்ற சாதனத்திற்கும் நிகழ்ந்தததன் விளைவே, அதன் வேகம், செயல்திறன்,வடிவமைப்பு, அளவுகள் மற்றும் தரம், எல்லாமே!

படிப்படியாய் வளர்ச்சிப்பாதையில் வேகமாய் முன்னேருமிந்த லேப்டாப்பானது வருகிற 2015ம் ஆண்டில் எப்படியிருக்கும்?. லேப்டாப் 2015ல் இப்படித்தான் இருக்கும் என நாங்கள் வெளியிட்டுள்ள படங்கள் கீழே!


நன்றி  : thatstamil.com

திங்கள், பிப்ரவரி 25

Required J2EE Trainee at Chennai.

  • Role: Software Engineer / Programmer
  • எக்ஸ்பீரியன்ஸ்: 0 To 2 Years
  • Job Type: Full Time
  • ஜாப் லொகேஷன்: சென்னை
  • Basic/UG qualification: Any Graduate
  • PG Qualification: Post Graduation Not Required
  • கீ ஸ்கில்ஸ்: Good Knowledge In Java And Teaching Skill
  • அனுப்பியவர்: ப்லேஸ்மெஂட் கந்ஸல்டெஂட்
  • நிறுவனத்தின் பெயர்: Sana Placement Services
  • வெப்சைட்: http://www.sanaconsultants.com
  • காண்டாக்ட் பெர்சன்: P.Vinodh

Apply to this job


விளக்கம்
Required J2EE Trainee at Chennai

Qualification: Any Degree
Experience: 1-3 Years
Salary: Negotiable
Location: Chennai
Key skill: Good Knowledge in Java and Teaching Skill
For More Details Contact:
Sana Placement Services
P. Vinodh
9629559591, 9791435671

sanaplacement@gmail.com
http://www.sanaconsultants.com
Courtesy : Thatstamil.com

புதன், பிப்ரவரி 20

மார்ச் 2-5 வரை வேலூரில் விமான படைக்கு ஆட்கள் தேர்வு.

வேலூர்: இந்திய விமானப் படைக்கான ஆட்கள் தேர்வு மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை வேலூரில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக இந்திய விமானப் படையில் உள்ள குரூப் 10 (டெக்னிக்கல்) பிரிவுக்கு ஆட்கள் தேர்வு வேலூர் ஊரீஸ் கல்லூரி வளாகத்தில் வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 1-1-1992ம் ஆண்டுக்கும் 

31-3-1996ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.


மேலும் இவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதம், பௌதீகம் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களை www.indianairforce.nic.in முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி : தினகரன்

திங்கள், பிப்ரவரி 18

அல் அய்னுக்கு சுற்றுலா சென்ற துபாய் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள்..

துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ அங்க‌த்தின‌ர்க‌ள் அமீர‌க‌த்தின் பூங்கா ந‌க‌ர‌ம் 
என்ற‌ழைக்க‌ப்ப‌டும் அல் அய்ன் ந‌க‌ருக்கு சுற்றுலா பிப்ரவரி 15ம் தேதி சென்று வ‌ந்த‌ன‌ர்.
dts members excursion al ain
 துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ அங்க‌த்தின‌ர்க‌ள் காலை 8.30 ம‌ணிக்கு துபாயில் இருந்து மூன்று பேருந்துக‌ளில் புற‌ப்ப‌ட்டுச் சென்ற‌ன‌ர். பேருந்து ப‌ய‌ண‌த்தின் போது பேருந்திலேயே ப‌ல‌ரும் த‌ங்க‌ள‌து த‌னித்திற‌மைக‌ளை பாட‌ல்க‌ள் மூல‌ம் வெளிப்ப‌டுத்தின‌ர். அல் அய்ன் ந‌க‌ரில் உள்ள ஹிலி பூங்காவில் ம‌திய‌ உண‌வு ம‌ற்றும் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டிருந்த‌து. 

முன்ன‌தாக‌ ஜெப‌ல் ஹ‌பித் ப‌குதியில் சுடுத‌ண்ணீர் ஊற்று ம‌ற்றும் அங்குள்ள‌ பூங்காவினைப் பார்த்த‌ன‌ர். 

ஹிலி பூங்காவில் ஆண்க‌ள் ஏ ம‌ற்றும் பி அணிக‌ளாக‌ பிரிக்க‌ப்ப‌ட்டு கிரிக்கெட் போட்டி ந‌டைபெற்ற‌து. ஏ அணி கோப்பையினை வென்ற‌து
.

18 வ‌ய‌து முத‌ல் 60 வ‌ய‌துடையோர் வ‌ய‌து வித்தியாச‌மின்றி கிரிக்கெட் போட்டியில் ப‌ங்கேற்ற‌து குறிப்பிட‌த்த‌க்க‌து. பெண்க‌ளுக்காக‌ பாட்டுக்கு பாட்டு உள்ளிட்ட‌ ப‌ல்வேறு போட்டிக‌ள் ந‌டைபெற்ற‌ன‌. சிறுவ‌ர்க‌ளுக்கான‌ ஓட்ட‌ப்போட்டி, பாட்டுக்கு பாட்டு ந‌டைபெற்ற‌து. அத‌னைத் தொட‌ர்ந்து க‌ல‌ந்துரையாட‌ல் நிக‌ழ்ச்சியில் இவ்வாண்டு ந‌டைபெற‌ இருக்கும் ப‌ல்வேறு நிக‌ழ்ச்சிக‌ள் குறித்து விவாதிக்க‌ப்ப‌ட்ட‌து.
அல் அய்ன் த‌மிழ்க் குடும்ப‌ நிர்வாகிக‌ள் ந‌ர‌சிம்ம‌ன் ம‌ற்றும் பாலாஜி ஆகியோர் சிற‌ப்பு விருந்தின‌ர்க‌ளாக‌ ப‌ங்கேற்று துபாய் த‌மிழ்ச் சங்க‌த்தின் அல் அய்ன் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி வெற்றிக‌ர‌மாக‌ ந‌டைபெறுவ‌த‌ற்கு உறுதுணையாக‌ இருந்த‌ன‌ர். மாலை 6 ம‌ணிக்கு அல் அய்ன் சுற்றுப்ப‌ய‌ண‌த்தை வெற்றிக‌ர‌மாக‌ முடித்து விட்டு ம‌கிழ்வுட‌ன் துபாய் திரும்பின‌ர். நிக‌ழ்விற்கான‌ ஏற்பாடுக‌ளை துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ர் ஜெக‌நாத‌ன், பொருளாள‌ர் கீதா கிருஷ்ண‌ன், துணைப் பொருளாள‌ர் சுந்த‌ர், பொழுதுபோக்குத்துறை செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, க‌மிட்டி உறுப்பின‌ர்க‌ள் பிர‌ச‌ன்னா, விஜ‌ய‌ராக‌வ‌ன், விஜ‌யேந்திர‌ன் உள்ளிட்ட‌ குழுவின‌ர் ஏற்பாடு செய்திருந்த‌ன‌ர்.

- நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்.

நன்றி : தினமலர் & thatstamil. Com

ஞாயிறு, பிப்ரவரி 17

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்.

கராச்சி, பிப். 17-
துபாயில் உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா என்ற கட்டிடம் உள்ளது. அதை மிஞ்சும் வகையில் பாகிஸ்தான், கராச்சியில் ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதை பாகிஸ்தானின் கட்டுமான தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கட்டுகிறார்.



இதற்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 16 ஆயிரம் ஏக்கரில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில், 1 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவை தவிர ஓட்டல்கள், வர்த்தக மையங்கள், கல்வித்துறை வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். இக்கட்டிடம் கராச்சியில் எங்கு கட்டப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. அநேகமாக கராச்சி அருகே 3 முதல் 4 கி.மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் உள்ள குட்டா தீவில் கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை துபாயில் உள்ள 'புர்ஜ்கலிபா' கட்டிடத்தை கட்டிய 'அபுதாபி குரூப்' நிறுவனம்தான் கட்டுகிறது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''இக்கட்டிடம் கட்டியதும் அது துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவின் சாதனையை முறியடிக்கும். உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமை பெறும். இதன் மூலம் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். பல துறைகளில் முதலீடு வாய்ப்பும் அதிகரிக்கும். புதிய பாகிஸ்தான் மற்றும் புதிய கராச்சியை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்றும் அவர் கூறினார்.

நன்றி :மாலைமலர்

சனி, பிப்ரவரி 16

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

முட்டக்குடியை சேர்ந்த‌ ஜனாப்.தாஜுதீன் அவர்களின் தம்பி ஜனாப்.அல்லா பிச்சை அவர்களின் மகன்
ஜனாப்.ஜபருல்லாஹ் வியாழன்  (14.02.2013) அன்று வ‌ஃபாத்தானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.


வியாழன், பிப்ரவரி 14

வரலாற்றில் இன்று..


  • கி.பி. 498 - செயிண்ட் வேலன்டைன் தினம்.காதலர் தினம்
  • 1790 - வீரபாண்டிய கட்டபொம்மன் பாஞ்சாலங்குறிச்சி மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.
  • 1924 - ஐபிஎம் (IBM) நிறுவனம் அமைக்கப்பட்டது.
  • 1946 - பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தில் எனியாக் - ENIAC என்ற கணினி பல மணி நேரம் பிடிக்க கூடிய கணக்குகளை சில விநாடிகளில் செய்து முடித்தது.
  • 1961 - 103வது தனிமம் லோரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
  • 1987 - யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
  • 1989 - இந்தியாவின் போபால் நகரில் 1984 ல் பெரும் உயிரிழப்பை ஏற்படுத்திய Union Carbide நச்சுக் கசிவு வழக்கில் இந்திய அரசுக்கு 470 மில்லியன் டாலர் இழப்பீடு தர ஒப்புக் கொண்டது Union Carbide நிறுவனம்.
  • 1989 - சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ருஹொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.
  • 1990 - பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
  • 1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.

செவ்வாய், பிப்ரவரி 12

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் பள்ளிவாசல் தெரு மர்ஹூம் ஜனாப் .ஆடிடர் தாஜுதீன் 
அவர்களின் மாமனார் திருவாடுதுறை ஜனாப்.அப்துல் சலாம் அவர்கள் இன்று காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

ஞாயிறு, பிப்ரவரி 10

போன் ரீசாஜ் கார்ட்களை நகத்தால் சுரண்ட வேண்டாம் ஆபத்து!

பெதுவாக நாம் போன் ரீசாஜ் கார்ட்களை வாங்கினதும் அவற்றின் இரகசிய இலக்கத்தை அறிய நகங்களால் சுரண்டுகின்றோம். இதனை கட்டாயம் தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது தோல் புற்றுநோயை ஏற்ப்படுத்தும். ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தும் நோய் கிருமிகள் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.


எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம்.

ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு ( silver nitro oxide ) மூலம் முலாம் 
( coating) செய்யப்படுகிறது. இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது.

புதன், பிப்ரவரி 6

'ஸ்கைப்'(SKYPE) அலுவலகம் இவ்ளோ அழகா?

ஸ்கைப் நிறுவனம் தான் வீடியோ காலிங் முறையை மிகவும் 
எளிமையாக்கியது. வேலைக்காக வெவ்வேறு நாடுகளில் உள்ளவர்களும் தங்கள் குடும்பத்தாருடன் நேரடியாக பேசும்வசதியை ஏற்படித்தியது. இன்டர்நெட் இணைப்பு மட்டுமே இருப்பின், இலவசமாகவே வீடியோ சாட் செய்யலாம் என்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்ததே!



ஆகஸ்ட் 2003ல் வெளியிடப்பட்ட இந்த அப்ளிகேசன் தற்பொழுது பெருவாரியான பயனாளர்களை கொண்டுள்ளது. என் ஃபேஸ்புக்கில் நாம் பயன்படுத்தும் வீடியோ சாட் வசதியும் ஸ்கைப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது என்பதே குறிப்பிடத்தக்கது.



VoIP என்ற தொழில்நுட்பத்தின் மூலமாகத்தான் நாம் அனைவரும் வீடியோ சாட் செய்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது.



இப்படி பல்வேறு சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ள ஸ்கைப் நிறுவனத்தின் அலுவலகத்தை பார்க்கவேண்டாமா? நீங்கள் பார்க்கவேண்டும் என்பதற்காகவே நாங்கள் தருகிறோம் படங்களை.

இதன் அலுவலகத்தின் ஒவ்வொரு அங்குலமும் செதுக்கப்பட்டுள்ளது என்பதை பின்வரும் படங்களை பார்த்தாலே உங்களுக்கும் புரியும்.

செவ்வாய், பிப்ரவரி 5

துபாயில் த‌மிழ‌க‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ருக்கு வ‌ர‌வேற்பு.

துபாய் : துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் த‌மிழ‌க‌த்தின் பிர‌ப‌ல‌ வ‌ழ‌க்க‌றிஞ‌ரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான எழில் க‌ரோலினுக்கு 31.01.2013 வியாழ‌க்கிழ‌மை மாலை மெட்ராஸ் வெஜிடேரிய‌ன் உண‌வ‌க‌த்தில் உற்சாக‌ வ‌ர‌வேற்பு அளிக்க‌ப்ப‌ட்ட‌து.


துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ துணைத் த‌லைவ‌ர் குத்தால‌ம் ஏ லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் சிற‌ப்பு ம‌ல‌ர் வ‌ழ‌ங்கி கௌர‌விக்க‌ப்ப‌ட்டார். முத்த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சார்பில் அத‌ன் த‌லைவ‌ர் மோக‌ன் பொன்னாடை அணிவித்தார்.


ஏற்புரை நிக‌ழ்த்திய‌ எழில் க‌ரோலின் த‌ன‌து ஏற்புரையில் ஒடுக்க‌ப்பட்ட‌ ம‌க்க‌ளின் உய‌ர்வுக்காக‌ த‌மிழ‌க‌த்தில் மேற்கொள்ள‌ப்ப‌ட்டு வ‌ரும் நிக‌ழ்வுக‌ளை விவ‌ரித்தார். அமீர‌க‌த்தில் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் மேற்கொண்டு வ‌ரும் ச‌மூக‌ ந‌ல‌ப் ப‌ணிக‌ள் குறித்து கேட்ட‌றிந்தார்.

எழில் க‌ரோலின் முன்னாள் ம‌த்திய‌ அமைச்ச‌ர் த‌லித் எழில்ம‌லையின் ம‌களாவார். த‌லித் பெண்க‌ள் வ‌ழ‌க்க‌றிஞ‌ர் ச‌ங்க‌ த‌லைவ‌ராக‌வும், பெண்க‌ள் விழிப்புண‌ர்வு அமைப்பின் த‌லைவ‌ராக‌வும், த‌லித் பெண்க‌ள் தேசிய‌ அமைப்பின் பொதுச்செய‌லாள‌ராக‌வும் இருந்து வ‌ருகிறார்.

நிக‌ழ்வில் துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் பொழுதுபோக்குத்துறை செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, தெய்ரா டிராவ‌ல் மேலாள‌ர் காஜா முஹைதீன், காஜா, முதுவை ஹிதாய‌த் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

நன்றி : தினமலர் & முதுகளத்தூர்.காம்

திங்கள், பிப்ரவரி 4

உங்களுடைய இந்த ஆவணங்கள் தொலைந்தால் எப்படித் திரும்பப் பெறுவது?

இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்துவிட்டு நண்பர்களுடன் பகிரவும்.

1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின் நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்டவேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000 ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம் அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள் தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய் பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும். இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போன விவரங்கள் கேள்வி பதில் வடிவில் கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி)

யாரை அணுகுவது..?
பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ், கட்டணம் செலுத்திய ரசீது.

எவ்வளவு கட்டணம்?
உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:
விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:
காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார். தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு!
யாரை அணுகுவது..?
கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது
ஏதாவது ஒரு அடையாள அட்டை

எவ்வளவு கட்டணம்?
புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:
சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தரவேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்!
யாரை அணுகுவது?
மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.

எவ்வளவு கட்டணம்?
கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:
விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:
காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம் FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்பமனு கொடுக்கவேண்டும்.

5.பான் கார்டு!

யாரை அணுகுவது?
பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச் சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள்.

எவ்வளவு கட்டணம்?
அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய். கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:
பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில் தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல் அல்லது ஃபோலியோ எண்.

எவ்வளவு கட்டணம்?
தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால், பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:
முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம் எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில் புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு
முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்!
யாரை அணுகுவது..?
பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20ரூபாய்.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும். இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!
யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.100.

கால வரையறை:
வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:
டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல் தெரிவித்து, அதன் மூலம் மோசடியான பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா!

யாரை அணுகுவது..?
வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?
ரூ.20.

கால வரையறை:
ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:
முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும். இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்!

யாரை அணுகுவது..?
மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:
இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40 நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக காலம் எடுக்கும்.

நடைமுறை:
பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல் துறையில் புகார் அளித்து கண்டுபிடிக்கப்படவில்லை என்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக் ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்ட
பிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து
பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?
நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:
15 வேலை நாட்கள்.

நடைமுறை:
தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக் கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ருட‌ன் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி.

துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ருட‌ன் 
ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 31.01.2013 அன்று மாலை க‌ராச்சி த‌ர்பார் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். த‌ன‌து த‌லைமையுரையில் தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ர‌ப்பானியா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் ஷ‌ம்சுதீன் உல‌வி அவ‌ர்க‌ள் மேற்கொண்டு வ‌ரும் மார்க்க‌ப் ப‌ணிக‌ளுக்கு பாராட்டு தெரிவித்தார்.


தாயக‌த்திலிருந்து ஈமான் அமைப்பின் மீலாது விழா சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ராக‌ வ‌ருகை புரிந்துள்ள‌ தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ர‌ப்பானியா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் மௌல‌வி அல்ஹாஜ் ஷ‌ம்சுதீன் உல‌வியுட‌ன் ச‌ந்திப்பு ந‌டைபெற்ற‌து. ஏற்புரை நிக‌ழ்த்திய மௌல‌வி ஷ‌ம்சுதீன் உல‌வி அமீர‌க‌த்தில் த‌மிழ‌க‌ முஸ்லிம்களின் த‌னிப்பெரும் அமைப்பாக‌ விள‌ங்கி வ‌ரும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்ப்பாட்டுப் ப‌ணிக‌ள் அள‌ப்ப‌ரிய‌து. ச‌மூக‌ ந‌ல்லிண‌க்க‌த்தில் ஈமான் அமைப்பின் செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்புக்குரிய‌து. இந்த‌ எளிய‌வ‌னை மீலாது விழா சிற‌ப்புப் பேச்சாள‌ராக‌ அழைத்து கௌர‌வ‌ப்ப‌டுத்திய‌மைக்கு பெரிதும் ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார். நிக‌ழ்வில் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை ம‌ற்றும் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், விழாக்குழு செய‌லாள‌ர் கீழை ஹ‌மீது யாசின், விழாக்குழு இணைச்செய‌லாள‌ர்க‌ள் அட‌ம‌ங்குடி அப்துல் ர‌ஹ்மான், முஹைதீன் அப்துல் காத‌ர், அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் ஜ‌மால் முஹைதீன், ந‌ல‌க்குழு ஒருங்கிணைப்பாள‌ர் ஃபைஜுர் ர‌ஹ்மான், செய‌ற்குழு உறுப்பின‌ர் முபார‌க் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

நன்றி : Thatstamil.com மற்றும் முதுகளத்தூர்.com

வெள்ளி, பிப்ரவரி 1

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.


அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் ரஹ்மத்  தெரு (ஜனாப் .K.S.V அவர்களின் மகள் )ஜனாப்.நூர் அலி அவர்களின் துணைவியார்  மற்றும் ஹசன்  அவர்களின் தாயார் ஜன்னத் கனி  இன்று  காலமானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.