இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், பிப்ரவரி 4

துபாயில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ருட‌ன் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி.

துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் த‌மிழ‌க‌ மார்க்க‌ அறிஞ‌ருட‌ன் 
ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 31.01.2013 அன்று மாலை க‌ராச்சி த‌ர்பார் உண‌வ‌க‌த்தில் ந‌டைபெற்ற‌து. நிக‌ழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் பொதுச் செய‌லாள‌ர் குத்தால‌ம் அல்ஹாஜ் ஏ. லியாக்க‌த் அலி த‌லைமை வ‌கித்தார். த‌ன‌து த‌லைமையுரையில் தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ர‌ப்பானியா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் ஷ‌ம்சுதீன் உல‌வி அவ‌ர்க‌ள் மேற்கொண்டு வ‌ரும் மார்க்க‌ப் ப‌ணிக‌ளுக்கு பாராட்டு தெரிவித்தார்.


தாயக‌த்திலிருந்து ஈமான் அமைப்பின் மீலாது விழா சிற‌ப்புச் சொற்பொழிவாள‌ராக‌ வ‌ருகை புரிந்துள்ள‌ தென்காசி ஜாமிஆ அல்தாபுர் ர‌ப்பானியா அர‌பிக் க‌ல்லூரியின் முத‌ல்வ‌ர் மௌல‌வி அல்ஹாஜ் ஷ‌ம்சுதீன் உல‌வியுட‌ன் ச‌ந்திப்பு ந‌டைபெற்ற‌து. ஏற்புரை நிக‌ழ்த்திய மௌல‌வி ஷ‌ம்சுதீன் உல‌வி அமீர‌க‌த்தில் த‌மிழ‌க‌ முஸ்லிம்களின் த‌னிப்பெரும் அமைப்பாக‌ விள‌ங்கி வ‌ரும் ஈமான் அமைப்பு மேற்கொண்டு வ‌ரும் க‌ல்வி ம‌ற்றும் ச‌முதாய‌ மேம்ப்பாட்டுப் ப‌ணிக‌ள் அள‌ப்ப‌ரிய‌து. ச‌மூக‌ ந‌ல்லிண‌க்க‌த்தில் ஈமான் அமைப்பின் செய‌ல்பாடுக‌ள் சிற‌ப்புக்குரிய‌து. இந்த‌ எளிய‌வ‌னை மீலாது விழா சிற‌ப்புப் பேச்சாள‌ராக‌ அழைத்து கௌர‌வ‌ப்ப‌டுத்திய‌மைக்கு பெரிதும் ந‌ன்றி தெரிவித்துக் கொண்டார். நிக‌ழ்வில் துணைப் பொதுச்செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா, ஊட‌க‌த்துறை ம‌ற்றும் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முதுவை ஹிதாய‌த், விழாக்குழு செய‌லாள‌ர் கீழை ஹ‌மீது யாசின், விழாக்குழு இணைச்செய‌லாள‌ர்க‌ள் அட‌ம‌ங்குடி அப்துல் ர‌ஹ்மான், முஹைதீன் அப்துல் காத‌ர், அலுவ‌ல‌க‌ மேலாள‌ர் ஜ‌மால் முஹைதீன், ந‌ல‌க்குழு ஒருங்கிணைப்பாள‌ர் ஃபைஜுர் ர‌ஹ்மான், செய‌ற்குழு உறுப்பின‌ர் முபார‌க் உள்ளிட்டோர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

நன்றி : Thatstamil.com மற்றும் முதுகளத்தூர்.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக