வேலூர்: இந்திய விமானப் படைக்கான ஆட்கள் தேர்வு மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை வேலூரில் நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் முதல் முறையாக இந்திய விமானப் படையில் உள்ள குரூப் 10 (டெக்னிக்கல்) பிரிவுக்கு ஆட்கள் தேர்வு வேலூர் ஊரீஸ் கல்லூரி வளாகத்தில் வருகிற மார்ச் மாதம் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 1-1-1992ம் ஆண்டுக்கும்
இதில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் 1-1-1992ம் ஆண்டுக்கும்
31-3-1996ம் ஆண்டுக்கும் இடையில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
மேலும் இவர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதம், பௌதீகம் மற்றும் ஆங்கில பாடங்களில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வு பற்றிய கூடுதல் விவரங்களை www.indianairforce.nic.in முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
நன்றி : தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக