துபாய் : துபாய் தமிழ்ச் சங்கத்தில் தமிழகத்தின் பிரபல வழக்கறிஞரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவருமான எழில் கரோலினுக்கு 31.01.2013 வியாழக்கிழமை மாலை மெட்ராஸ் வெஜிடேரியன் உணவகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

துபாய் தமிழ்ச் சங்க துணைத் தலைவர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி தலைமை வகித்தார். துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சிறப்பு மலர் வழங்கி கௌரவிக்கப்பட்டார். முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் மோகன் பொன்னாடை அணிவித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய எழில் கரோலின் தனது ஏற்புரையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிகழ்வுகளை விவரித்தார். அமீரகத்தில் துபாய் தமிழ்ச் சங்கம் மேற்கொண்டு வரும் சமூக நலப் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
எழில் கரோலின் முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மகளாவார். தலித் பெண்கள் வழக்கறிஞர் சங்க தலைவராகவும், பெண்கள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவராகவும், தலித் பெண்கள் தேசிய அமைப்பின் பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

நிகழ்வில் துபாய் தமிழ்ச் சங்கத்தின் பொழுதுபோக்குத்துறை செயலாளர் ஏ. முஹம்மது தாஹா, தெய்ரா டிராவல் மேலாளர் காஜா முஹைதீன், காஜா, முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நன்றி : தினமலர் & முதுகளத்தூர்.காம்
நன்றி : தினமலர் & முதுகளத்தூர்.காம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக