இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, பிப்ரவரி 17

ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவில் பாகிஸ்தானில் மிக உயரமான கட்டிடம்.

கராச்சி, பிப். 17-
துபாயில் உலகிலேயே மிக உயரமான புர்ஜ் கலிபா என்ற கட்டிடம் உள்ளது. அதை மிஞ்சும் வகையில் பாகிஸ்தான், கராச்சியில் ஒரு கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதை பாகிஸ்தானின் கட்டுமான தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கட்டுகிறார்.



இதற்காக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது. 16 ஆயிரம் ஏக்கரில் கட்டப்படும் இந்த கட்டிடத்தில், 1 லட்சத்து 25 ஆயிரம் வீடுகள் கட்டப்பட உள்ளன. இவை தவிர ஓட்டல்கள், வர்த்தக மையங்கள், கல்வித்துறை வளாகங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும். இக்கட்டிடம் கராச்சியில் எங்கு கட்டப்படுகிறது என்ற தகவல் வெளியாகவில்லை. அநேகமாக கராச்சி அருகே 3 முதல் 4 கி.மீட்டர் தொலைவில் அரபிக்கடலில் உள்ள குட்டா தீவில் கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை துபாயில் உள்ள 'புர்ஜ்கலிபா' கட்டிடத்தை கட்டிய 'அபுதாபி குரூப்' நிறுவனம்தான் கட்டுகிறது. அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அதில் தொழில் அதிபர் மாலிக் ரியாஷ் கையெழுத்திட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ''இக்கட்டிடம் கட்டியதும் அது துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவின் சாதனையை முறியடிக்கும். உலகிலேயே மிக உயரமான கட்டிடம் என்ற பெருமை பெறும். இதன் மூலம் 25 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். பல துறைகளில் முதலீடு வாய்ப்பும் அதிகரிக்கும். புதிய பாகிஸ்தான் மற்றும் புதிய கராச்சியை உருவாக்க வேண்டும் என்பதே எனது கனவு என்றும் அவர் கூறினார்.

நன்றி :மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக