இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, மார்ச் 31

கிவி பழத்தின் மருத்துவ பயன்கள்.

கிவியின் நன்மைகள் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.

மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. 

அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.

போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது.

மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது. டயட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.

மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் 
தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.

நன்றி : மாலைமலர் .

வியாழன், மார்ச் 28

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் அல் ஜாமியா தெரு ஜனாப்.முஹம்மது ரபீக் மற்றும் ஜனாப்.நஜீர் அஹமது  
இவர்களின்  தகப்பனார் ஜனாப்.அப்துல் ரஹிம்  அவர்கள் இன்று காலை  வ‌ஃபாத்தானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.


சனி, மார்ச் 23

உலகின் மிகப்பெரிய டீசல் என்ஜின் இதுதான்.. !!!

அதிக சுமையை கொண்டுசெல்லும் வாகனங்களில் டீசல் எஞ்சினே பொதுவாக காணப்படுகிறது, லொறி, கண்டேனர், பஸ் போன்றவற்றில் காணப்படும் எஞ்சின் சற்று பெரியது...

இதை விட பல்லாயிரம் மடங்கு பெரிய டீசல் என்ஜின்களும் உண்டு, கார்கோ ஷிப் என்று சொல்லப்படும் சரக்கு கப்பல்களில் இத்தகைய இராட்சத எஞ்சின்கள் காணப்படுகின்றன. இவற்றின் நிறை 2,300 தொன்கள் வரையில் காணப்படுவதுடன் 14-cylinder எஞ்சின் அமைப்புடன் 80,080 kW வலுவை பிறப்பிக்க வல்லது.

சுமையேற்றப்பட்ட நிலையில் நீரை கிழித்துக்கொண்டு செல்ல மிகப்பெரியளவு சக்தி தேவைப்படுகிறது, இந்த சக்தியை பிறப்பிக்க ஒரு செக்கனுக்கு 1,660 கலன் டீசல் தேவைப்படுகிறது! 2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Emma Mærsk, என்ற கண்டேனர் கப்பலின் எஞ்சின் RTA96C உலகில் மிகப்பெரிய டீசல் என்ஜினாக காணப்படுகிறது,

இதன் சிறப்பம்சங்கள் சுருக்கமாக ....

Bore: 960 mm

Stroke: 2,500 mm

Displacement: 1,820 liters per cylinder

Mean piston speed: 8.5 meters per second

Engine speed: 22–102 RPM

Torque: 7,603,850 newton metres (5,608,310 lbf·ft) @ 102 rpm

Power: up to 5,720 kW per cylinder, 34,320–80,080 kW (46,680–108,920 BHP) total

Mass of fuel injected per cylinder per cycle: ~160 g (about 6.5 ounces) @ full load Crankshaft

weight: 300 tons









திங்கள், மார்ச் 18

தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட பாணங்கள்.

எச்சரிக்கை தகவல்..!

ஞாயிறன்று ஒரு குடும்பத்தில் சுற்றுலா சென்றனர். கூடவே ஒரு சில தகரத்தில் அடைக்கப்பட்ட குடி பானங்கலுடன். மறுநாள் , இரண்டு குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப்பிரிவில் வைக்கபட்டு சிகிச்சை பயன் அளிக்காது மறுநாள் இறந்து விட்டனர். அதற்க்கான காரணத்தை கண்ட வைத்தியர் இவ்வாறு கூறுகிறார். 



தகர டப்பாக்களில் அடைக்கப்பட்ட பாணங்களை இவர்கள் மாற்று குவளைகள் இல்லாமல் நேரடியாக வாயில் வைத்து குடித்தமேயே காரணம். இந்த தகர டப்பாக்கள் பதுகாப்பு இல்லாத அறைகளில் குவித்து வைக்க படுகின்றமையும் அங்கே எலிகலின் எச்சம் மற்றும் சிறுநீர் இந்த டப்பாகளில் படுகின்றன இதனால் இவ்வராக நேரடியாக நாம் தகர டப்பாவில் வாய் வைத்து குடிக்கும் பொது இந்த விபரிதம் ஏற்படுகின்றது.

இதனை தவிர்க்க நாம் தண்ணீர் கொண்டு அந்த டப்பகளை நன்றாக கழுவி விட்டு வாயில் வைத்து அருந்த வேண்டும் இல்லையேல் வேறு பாத்திரத்தில் இட்டு குடிக்க வேண்டும் (குறிப்பு எலியின் எச்சம் சிறுநீர் என்பன கடின நச்சு தன்மை கொண்டவை) . ஆகவே டின்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை தவிர்ப்பது நல்லது.இந்த செய்தியை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் காயிதே மில்லத் தெரு புலவர் ஜனாப்.P.M.அன்வர் அவர்கள் இன்று காலை  வ‌ஃபாத்தானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

சனி, மார்ச் 16

தமிழக கோர்ட்களில் 88 அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்யூட்டர் காலியிடங்கள்.

தமிழக கோர்ட்களில் காலி யாக உள்ள 88 அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்கியூட்டர் பணியிடங் களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பி.எல். பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 5 ஆண்டுகள் பிராக்டீஸ் அனுபவம் உள்ள வக்கீல்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: 
அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்யூட்டர். மொத்த இடங்கள்: 88. வயது: 1.7.2013 அன்று 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 34க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி: பி.எல். படிப்புடன் பார் கவுன்சில் உறுப்பினராக இருக் க வேண்டும். தமிழ் மொழியில் போதுமான அறிவு இருக்க வேண் டும். கிரிமினல் கோர்ட்களில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வக்கீ லாக பணியாற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ் எல்சி அல்லது 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என முறைப்படி படித்திருக்க வேண்டும். அஞ்சல் வழிக்கல்வியில் நேரடியாக பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்ப கட்டணம்: ரூ.50/ மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.125 / இதை தபால் அலுவலகங்கள் மூலமாகவோ, நெட்பேங் கிங் மூலமாகவோ செலுத்த லாம். பொதுப் பிரிவினர் தவிர மற்றவர்கள் தேர்வுக் கட்ட ணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு பாடத்திட்டம், தேர்வு நடைமுறைகள், மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தடையில்லா சான்றிதழ், சலுகைகள் மற்றும் தேர்வு தொடர்பான தகவல் களுக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு விவரம்:
சட்டம் முதல் தாள் ஏப்.27: காலை 10 மணி முதல் 1 மணி வரை
சட்டம் இரண்டாம் தாள் ஏப்.27: மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
சட்டம் மூன்றாம் தாள் ஏப். 28: காலை 10 மணி முதல் 1 மணி வரை
சட்டம் நான்காம் தாள் ஏப்.28 மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை.
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: மார்ச் 29.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 27

சனி, மார்ச் 9

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித வினாக்கள் அமைப்பில் இந்தாண்டு தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், கணித வினாக்கள் அமைப்பில், இந்தாண்டு தேர்வுத்துறை மாற்றம் செய்துள்ளது


. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு தேர்வு துறை அனுப்பிய சுற்றறிக்கை: கணித வினாத்தாளில் ஒரு மார்க் பகுதியில், 15 வினாக்கள் கேட்கப்படும். இதில், புத்தகத்தில் இடம்பெற்றுள்ள வினாக்களில் இருந்து 10ம், யோசித்து பதில் எழுதுமாறு 5 கேள்விகளும் இருந்தது. இது மாற்றப்பட்டு, 15 வினாக்களும் புத்தகத்தில் உள்ள கேள்விகளே கேட்கப்படும்.கட்டாயம் விடையளிக்கும், 2 மார்க் பகுதியில் 30வது கேள்வியும், 5 மார்க் பகுதியில் 45வது கேள்வியும் மாணவர்கள் கடினமான பகுதியாக நினைக்கும் இயற்கணிதம், எண் தொடர், அளவீடுகள் ( 2, 3, 5 மற்றும் 8வது பாடங்கள்) பகுதியில் இருந்து மட்டும் கேட்கப்பட்டது. ஆனால், இந்தாண்டு 10 பாடங்களிலும் இருந்தும், யோசித்து எழுதாத வகையிலும் கேள்விகள் கேட்கப்படும்.இரண்டு மார்க் மற்றும் 5 மார்க் பகுதியில் தலா 2 கேள்விகள் யோசித்து விடையளிக்கும் வகையில் இருக்கும். இந்தாண்டு முதல் இந்த முறை தவிர்த்து, புத்தகத்தில் இடம் பெற்ற கேள்விகள் இடம் பெறும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்றாண்டு கணித பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு, யோசித்து விடையளிக்கும் எழுதும் வகையில் அதிக வினாக்கள் இடம்பெற்றதே காரணம். இதனால், அவ்வகையான வினாக்களை சில பகுதியில் மாற்றம் செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டு கணிதத்தில் "நூற்றுக்கு நூறு'ஐ மாணவர்கள் அள்ளுவார்கள், என எதிர்பார்க்கலாம்.

வியாழன், மார்ச் 7

கிரெடிட் கார்டில் நானோ கார் வாங்கலாம் 5 வங்கிகளுடன் ஒப்பந்தம்.

மும்பை : உலகின் மிகவும் விலை குறைந்த டாடா நானோ காரை கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் கவர்ச்சிகரமான புதிய திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி தகுதியான வாடிக்கையாளர்கள் முழு தொகையையும் வட்டி இல்லாமல், ஒரு லட்சத்துக்கு ரூ.8,333 வீதம், 12 சரிவிகித தவணைகளில் திரும்பச் செலுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ரஞ்ஜித் யாதவ் கூறுகையில்,சிக்கல் இல்லாமல் விரைவாக கார் வாங்க இந்த திட்டம் வழி ஏற்படுத்தும். வட்டியில்லாமல் 12 சரிவிகித தவணைகளில் செலுத்தும் முறையால் எளிதாக பணத்தை திரும்ப செலுத்த முடியும்Õ என்றார். இப்புதிய திட்டத்துக்காக ஆக்ரூ.ஸ், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா, ஸ்டாண்டர்டு சார்டர்டு ஆகிய வங்கிகளுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மொத்தம் 26 நகரங்களில் 75 டீலர்கள் மூலம் இந்த திட்டத்தின் கீழ் நானோ கார்களை வாங்க முடியும்.

பள்ளிவாசல், தர்கா சீரமைப்புக்கு நிதி கோரி விண்ணப்பிக்கலாம்: தமிழக வக்பு வாரியம் அறிவிப்பு.

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல் மற்றும் தர்கா சீரமைப்புக்கு நிதி கோரி விண்ணப்பிக்கலாம் என வக்பு வாரியம் அரிவித்துள்ளது.


இது குறித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன் உசேன் 
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் போன்ற வக்பு நிறுவனங்களின் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு தமிழக அரசு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது
இத்திட்டத்திற்கு வக்பு நிறுவன மேம்பாட்டு நிதி அளிக்க விரும்புபவர்கள், 

முதன்மை செயல் அலுவலர், 
தமிழ்நாடு வக்பு வாரியம், 
எண்.1. ஜாபர் சிராங் தெரு, 
வள்ளல் சீதக்காதி நகர், 
சென்னை - 600 001.
 என்ற முகவரிக்கு விண்பிக்க வேண்டும். மேலும் பழுதுபார்ப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள நிதி தேவையுள்ள வக்பு நிறுவனங்கள் உரிய திட்ட மதிப்பீடு, வரைபடம், புகைப்படம் போன்ற விவரங்களுடன் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன், மார்ச் 6

தமிழ்நாடு ஹஜ் குழுவுக்கு மார்ச்20-க்​குள் விண்ணப்பிக்​கலாம் தமிழக அரசு அறிவிப்பு.

2013 ஆம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் கீழ் கானும் ஹஜ் கமிட்டியின் இனையதளத்தில் சென்று விண்ணப்பத்தை டவுன்லோடு செய்துகொள்ளவும்.
விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 20/3/2013

http://www.hajcommittee.com/index.php?value=download_fm2013

தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த, ஹஜ் 2013-ல் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்பும் முஸ்லிம்களிடமிருந்து, பல்வேறு நிபந்தனைகளுக்குட்பட்டு விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு வரவேற்கிறது.

ஹஜ் 2013-ற்கான விண்ணப்பப் படிவங்களை சென்னை-34, எண்.13, மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை)யில், ரோஸிடவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து 6-2-2013 முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்கைள www.hajcommittee.com என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மனுதாரர்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 20-3-2013.

வாழ் நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்னும் ஹஜ் கொள்கையினைச் செயற்படுத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதனால் கடந்த காலங்களில் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணம் மேற்கொள்ளாத நபர்கள் மட்டும் ஹஜ் 2013-ல் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட்டின் நகல் / 20-3-2013 அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்ட மற்றும் குறைந்தது 31-03-2014 வரையில் செல்லத்தக்க பாஸ்போர்ட்டை அசலாக விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்புமாறு புனிதப் பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். IFS குறியீடு உள்ள இரத்து செய்யப்பட்ட பூர்த்தி செய்யப்படாத வங்கி காசோலையை கண்டிப்பாக சமர்ப்பிக்க வேண்டும். ஹஜ் 2013 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2013-ற்கான வழிமுறைகள் கையேட்டைப் படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் www.hajcommittee.com –ஐ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.300/- (ரூபாய் முன்னூறு மட்டும்)-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக (யீசடிஉநளளiபே கநந) பாரத ஸ்டேட் வங்கியின் இணைப்பு வங்கி திட்டத்தின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் பவர் ஜோதி கணக்கு எண். 32749477270-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகலை இணைத்து தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 20-3-2013-ற்குள் சமர்ப்பிக்க வேண்டும். சிறப்பு வகைப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் பயணிகள் அவ்வகைக்கான அனைத்து வழிமுறைகளை தவறாமல் பின்பற்றுமாறும் அவ்வகையின் கீழ் பரிசீலிப்பதற்கு ஏதுவாக அனைத்து நிபந்தனைகளை பூர்த்தி செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெளியீடு : இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை, சென்னை-9

சென்னை பல்கலையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ.வில் சேர நுழைவு தேர்வு எழுதவேண்டும்.

சென்னை : எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் சேர விரும்புவோர், அண்ணா பல்கலை கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று சென்னை பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலை கழக மேலாண்மை கல்வியியல் துறை, கணினி அறிவியல் துறை மூலம் நடத்தப்படும் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. வரும் ஏப்ரல் 6ம் தேதி அண்ணா பல்கலை கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இதற்கான சேர்க்கை நடக்கும்.

சென்னை பல்கலை கழக முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வை எழுதி அதன் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பரிசீலிக்கப்படும்.

எனவே மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்புவோர் பொது நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவரங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் கடந்த 4ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை பார்க்கவும். அல்லது அண்ணா பல்கலை கழக இணைய தளத்தை பார்க்கலாம்.

குறைந்த காற்றழுத்த தாழ்வால் டெல்டாவில் பலத்த மழை.

திருச்சி: தென்மேற்கு வங்க கடலில் இலங்கை கடற்கரைக்கு அப்பால் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ள காரணமாக டெல்டாவில் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பலத்த மழையும், மற்ற மாவட்டங்களில் பரவலாக மழையும் பெய்தது. 
திருச்சி, தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிராம்பட்டினம் பகுதியில் அதிகாலை 3 மணி முதல் நாள் முழுவதும் விட்டுவிட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் உப்பள பாத்திகளில் மழைநீர் புகுந்து உற்பத்தி பாதிக்கப்பட்டது. திடீர் மழையால் அறுவடை நிலையில் உள்ள சம்பா பயிர்களுக்கு எந்த பயனுமில்லை. அதேசமயம் ஊடுபயிரான உளுந்து மற்றும் பயறு வகை பயிர்கள், மானாவாரி பயிர்களான நிலக்கடலை, எள், சோளம் போன்றவற்றுக்கு பயன் தரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப் பூண்டி, முத்துப்பேட்டை, நன்னிலம், வலங்கைமான், குடவாசல், நீடாமங்கலம், கோட்டூர் போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. முத்துப்பேட்டையில் அதிகளவாக 66.4 மிமீ மழை பெய்தது.பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக நேற்று காலையில் லேசான தூறல் மழை பெய்தது. குமரி, தூத்துக்குடியிலும் நல்ல மழை பெய்தது.

திங்கள், மார்ச் 4

வரலாற்றில் இன்று..


  • மார்ச்
    4
    1351 - சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.
  • 1519 - ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்சிகோவில் தரையிறங்கினான்.
    1861 - அமெரிக்காவின் 16-வது அதிபராக ஆபிரஹாம் லிங்கன் பொறுப்பேற்றார்.
    1877 - எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.
    1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
    1917 - ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.3

    1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
    1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
    1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
    1975 - சார்லி சாப்ளினுக்கு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தார் எலிசபெத் அரசியார்.
    1980 - றொபேட் முகாபே சிம்பாவேயின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
    1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
    2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
    2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

சனி, மார்ச் 2

TAMIL NADU 12TH STD AND 10TH STD EXAMINATION TIME TABLE MARCH 2013.

அஸ்ஸலாமு அலைக்கும்..

மாணவ , மாணவிகள் அனைவரும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைய வாழ்த்துகிறது திருப்பனந்தாள் ஜமாத்தார்கள் மற்றும் நண்பர்கள்.

Tamil Nadu Board HSC / 12th Time Table and schedule :
Date :-1 March 2013
Subject :- Language Paper-I
Time :- 10:00 To 1:15
Date :- 4 March 2013
Subject :- Language Paper-II
Time :- 10:00 To 1:15
Date :-6 March 2013
Subject :- English Paper- I
Time :- 10:00 To 1:15
Date :-7 March 2013
Subject :- English Paper- II
Time :- 10:00 To 1:15
Date :-11 March 2013
Subject :- Physics And Economics
Time :- 10:00 To 1:15
Date :-14 March 2013
Subject :- Mathematics, Zoology ,Micro Biology ,Nutrition & Dietetics
Time :- 10:00 To 1:15
Date :-15 March 2013
Subject :- Commerce, Home Science ,Geography
Time :- 10:00 To 1:15
Date :-18 March 2013
Subject :- Chemistry, Accountancy
Time :- 10:00 To 1:15
Date :-21 March 2013
Subject :- Biology, History ,Botany ,Business Maths
Time :- 10:00 To 1:15
Date :-25 March 2013
Subject :- Communicative English, Indian Culture ,Computer Science ,Bio-Chemistry ,Advanced Language ,Typewriting Tamil and English (10.00 a.m. to 12.30 p.m)
Time :- 10:00 To 1:15
Date :- 27 March 2013
Subject :- Political Science, Nursing (General Stream) ,Statistics ,THEORY OF VOCATIONAL SUBJECTS
Time :- 10:00 To 1:15
10TH STANDARD PUBLIC EXAM TIME TABLE(TAMILNADU STATE BOARD) - 2013


27-03-2013

(Wednesday)

Tamil First Paper

28-03-2013

(Thursday)

Tamil Second paper

01-04-2013

(Monday)

English First Paper

02-04-2013

(Tuesday)

English Second Paper

05-04-2013

(Friday)

Mathematics

08-04-2013

(Monday)

Science

12-04-2013

(Friday)

Social Science