இந்த வலைப்பதிவில் தேடு

புதன், மார்ச் 6

சென்னை பல்கலையில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ.வில் சேர நுழைவு தேர்வு எழுதவேண்டும்.

சென்னை : எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் சேர விரும்புவோர், அண்ணா பல்கலை கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்று சென்னை பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. சென்னை பல்கலை கழக மேலாண்மை கல்வியியல் துறை, கணினி அறிவியல் துறை மூலம் நடத்தப்படும் எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. வரும் ஏப்ரல் 6ம் தேதி அண்ணா பல்கலை கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இதற்கான சேர்க்கை நடக்கும்.

சென்னை பல்கலை கழக முதுநிலை படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாகும். எம்.பி.ஏ மற்றும் எம்.சி.ஏ படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் அண்ணா பல்கலை கழகம் நடத்தும் பொது நுழைவுத் தேர்வை எழுதி அதன் மதிப்பெண் பட்டியலை சமர்ப்பித்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பரிசீலிக்கப்படும்.

எனவே மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்புவோர் பொது நுழைவுத் தேர்வுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து விவரங்களுக்கு அண்ணா பல்கலைக் கழகம் கடந்த 4ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை பார்க்கவும். அல்லது அண்ணா பல்கலை கழக இணைய தளத்தை பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக