இந்த வலைப்பதிவில் தேடு

சனி, மார்ச் 16

தமிழக கோர்ட்களில் 88 அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்யூட்டர் காலியிடங்கள்.

தமிழக கோர்ட்களில் காலி யாக உள்ள 88 அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்கியூட்டர் பணியிடங் களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் பி.எல். பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 5 ஆண்டுகள் பிராக்டீஸ் அனுபவம் உள்ள வக்கீல்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: 
அசிஸ்டென்ட் பப்ளிக் புராசிக்யூட்டர். மொத்த இடங்கள்: 88. வயது: 1.7.2013 அன்று 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 34க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி: பி.எல். படிப்புடன் பார் கவுன்சில் உறுப்பினராக இருக் க வேண்டும். தமிழ் மொழியில் போதுமான அறிவு இருக்க வேண் டும். கிரிமினல் கோர்ட்களில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் வக்கீ லாக பணியாற்றியிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் எஸ்எஸ் எல்சி அல்லது 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு என முறைப்படி படித்திருக்க வேண்டும். அஞ்சல் வழிக்கல்வியில் நேரடியாக பட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

விண்ணப்ப கட்டணம்: ரூ.50/ மற்றும் தேர்வுக் கட்டணம் ரூ.125 / இதை தபால் அலுவலகங்கள் மூலமாகவோ, நெட்பேங் கிங் மூலமாகவோ செலுத்த லாம். பொதுப் பிரிவினர் தவிர மற்றவர்கள் தேர்வுக் கட்ட ணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு பாடத்திட்டம், தேர்வு நடைமுறைகள், மையங்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகள், தடையில்லா சான்றிதழ், சலுகைகள் மற்றும் தேர்வு தொடர்பான தகவல் களுக்கு டிஎன்பிஎஸ்சி இணைய தளமான www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.

ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு விவரம்:
சட்டம் முதல் தாள் ஏப்.27: காலை 10 மணி முதல் 1 மணி வரை
சட்டம் இரண்டாம் தாள் ஏப்.27: மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை
சட்டம் மூன்றாம் தாள் ஏப். 28: காலை 10 மணி முதல் 1 மணி வரை
சட்டம் நான்காம் தாள் ஏப்.28 மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை.
தேர்வுக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: மார்ச் 29.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 27

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக