இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், மார்ச் 4

வரலாற்றில் இன்று..


  • மார்ச்
    4
    1351 - சியாமின் மன்னராக ராமாதிபோதி முடி சூடினார்.
  • 1519 - ஹேர்னான் சோர்ட்டேஸ் மெக்சிகோவில் தரையிறங்கினான்.
    1861 - அமெரிக்காவின் 16-வது அதிபராக ஆபிரஹாம் லிங்கன் பொறுப்பேற்றார்.
    1877 - எமிலி பேர்லீனர் மைக்ரோபோனைக் கண்டுபிடித்தார்.
    1882 - பிரித்தானியாவின் முதலாவது மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது.
    1917 - ரஷ்யாவில் பெப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது.3

    1931 - இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்களின் அடிமட்டத்தினர் அனைவரும் உப்பை கட்டுப்பாடு ஏதுமின்றி பயன்படுத்தவும் பிரித்தானியவின் ஆளுநர் எட்வர்ட் வூட் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
    1945 - இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து நாசி ஜெர்மனி மீது போரைத் தொடுத்தது.
    1959 - ஐக்கிய அமெரிக்காவின் பயனியர் 4 உலகின் இரண்டாவது (அமெரிக்காவின் முதலாவது) செயற்கைக் கோள் ஆனது.
    1975 - சார்லி சாப்ளினுக்கு சர் பட்டம் வழங்கிக் கௌரவித்தார் எலிசபெத் அரசியார்.
    1980 - றொபேட் முகாபே சிம்பாவேயின் முதலாவது கருப்பின பிரதமரானார்.
    1994 - கொலம்பியா 16 விண்ணோடம் ஏவப்பட்டது.
    2006 - பயனியர் 10 விண்கலத்துடன் மேற்கொள்ளப்பட்ட கடைசித் தொடர்பு தோல்வியில் முடிந்தது.
    2006 - அசாம் மாநிலத்தின் பெயர் அசோம் என மாற்றப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக