இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், மார்ச் 7

கிரெடிட் கார்டில் நானோ கார் வாங்கலாம் 5 வங்கிகளுடன் ஒப்பந்தம்.

மும்பை : உலகின் மிகவும் விலை குறைந்த டாடா நானோ காரை கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் கவர்ச்சிகரமான புதிய திட்டத்தை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி தகுதியான வாடிக்கையாளர்கள் முழு தொகையையும் வட்டி இல்லாமல், ஒரு லட்சத்துக்கு ரூ.8,333 வீதம், 12 சரிவிகித தவணைகளில் திரும்பச் செலுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் ரஞ்ஜித் யாதவ் கூறுகையில்,சிக்கல் இல்லாமல் விரைவாக கார் வாங்க இந்த திட்டம் வழி ஏற்படுத்தும். வட்டியில்லாமல் 12 சரிவிகித தவணைகளில் செலுத்தும் முறையால் எளிதாக பணத்தை திரும்ப செலுத்த முடியும்Õ என்றார். இப்புதிய திட்டத்துக்காக ஆக்ரூ.ஸ், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ, கோட்டக் மஹிந்திரா, ஸ்டாண்டர்டு சார்டர்டு ஆகிய வங்கிகளுடன் டாடா நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. மொத்தம் 26 நகரங்களில் 75 டீலர்கள் மூலம் இந்த திட்டத்தின் கீழ் நானோ கார்களை வாங்க முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக