இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், டிசம்பர் 27

நமது ஊர் அல் மதரசதூர் ரஹ்மானியா அரபி பாடசாலை எதிர்கால அமைப்பு.

நமது ஊர் அல் மதரசதூர் ரஹ்மானியா அரபி பாடசாலை எதிர்கால அமைப்பு.



இன்ஷா அல்லா இதைபோலவே சிறப்பாக கட்டிடப்பணி நடைபெற நாம் அனைவரும் துவா செய்வோம்.

ஞாயிறு, டிசம்பர் 18

திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய - UAE பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

திருப்பனந்தாள் ஊர் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 16 '2011 அன்று கூட்டம் நடைபெற்றது.
நமது ஊர் " அல் - மதரசதூர் ரஹ்மானிய அரபி பாடசாலை " கட்டுமான பணியை பற்றியும் நமது ஊர் மாணவ மாணவியர் கல்வியை பற்றியும் நமது தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது ,அமைப்பாளர் ஜனாப்.முஹம்மது தாஹா பல கருத்துகளையும் ஆலோசனையும் வழகினார்கள்.
நிகழ்வில் TPLJI - UAE வின் அமைப்பாளர்,பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்தபின் தலைவர் ஏற்பாடு செய்த தேநீர் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.

ஞாயிறு, டிசம்பர் 11

நமது ஊர் நாட்டாண்மை அமிரகத்தில் இருந்து தாயகம் திரும்பினார்....

நமது ஊர் நாட்டாண்மை அமிரகத்தில் இருந்து தாயகம் திரும்பினார்..
 திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் துபாய் விமானநிலையத்திற்கு வந்தனர்.


நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களுக்கு நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் நினைவு அன்பளிப்பு வழங்கி கௌரவித்தார். 

தன் குடும்பத்தில் ஒருவர் பயணம் போகுவதை போல் எண்ணி நமது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களை சிறப்பாக வழியனுப்பினர்.
நிகழ்வில் TPLJI - UAE வின் அமைப்பாளர்,பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் நாட்டண்மைக்கு வரவேற்பு..

துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் நாட்டண்மைக்கு வரவேற்பு.
டிசம்பர் 09 2011 ,நமது ஊர் நாட்டண்மைக்கு துபாய் தமிழ் பஜாரில் நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது வரவேற்பு அளித்தார்.


நமது நாட்டாண்மையிடம் நமது அமைப்பின் தலைவர் ஊர் நிலவரதைவும் ஊர் மக்கள் நலனையும் விசாரித்தார்..
நிகழ்வில் TPLJI - UAE வின் பொது செயலாளர்,பொருளாளர்,இணை பொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், ஷார்ஜாஹ்,அஜ்மான் நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இவ்வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்தபின் தேநீர் விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.

புதன், டிசம்பர் 7

நமது ஊர் கூட்டத்தில் ஈமான் அமைப்பின் பொது செயலாளருக்கு நன்றி பாராட்டு விழா.


நமது ஊர் கூட்டத்தில் ஈமான் அமைப்பின் பொது செயலாளருக்கு நன்றி பாராட்டு விழா.
ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி அவர்கள் நமது ஊர்க்காக பல ஆலோசனைகளையும் ,உதவிகளையும் TPLJI - UAE வுடன் இணைத்து பல நற்செயல்களையும் செய்து வருகிறார்.
நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள் ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். 
நிகழ்வில் ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு செயலாளர் A.முஹம்மது தாஹா,உறுப்பினர்கள்,TPLJI-UAE யின் தலைவர், பொது செயலாளர், பொருளாளர் மற்றும் உறுபினர்கள் அனைவர்களும் கலந்துக்கொண்டனர்.

செவ்வாய், டிசம்பர் 6

திருப்பனந்தாள் ஊர் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

திருப்பனந்தாள் ஊர் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
TPLJI - UAE யின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது தலைமையில் டிசம்பர் 2 '2011 முஸ்ரிப்பூங்காவில் ஊர் கூட்டம் நடைபெற்றது.நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்கள் சிறப்புவுரை வழங்கினர்.
நமது ஊர் நாட்டாண்மை ஜனாப்.சர்புதீன் அவர்களுக்கு நமது அமைப்பின் தலைவர் ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். 

இதனை தொடர்ந்து TPLJI - UAE யின் அமைப்பாளர் ஜனாப்.அ.முஹம்மது தாஹா பல ஆலோசனைகளை வழங்கினர்.உறுபினர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு ஊர் நாட்டாண்மை அவர்கள் பதில் அளித்தார்.





TPLJI - UAE யின் செயலாளர்,பொருளாளர் மற்றும் உறுபினர்கள் அனைவர்களும் கலந்துக்கொண்டனர்.

திங்கள், டிசம்பர் 5

ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா கோலாககொண்டாட்டம்..

ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா
 
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் )..
ஈமான் அமைப்பின் 36 ஆம் ஆண்டு விழா 02.12.2011 அன்று கோலாககொண்டாட்டம்.
வெள்ளிக்கிழமை அமீரகத்தின் 40 ஆவது தேசிய தினத்தன்று முஷ்ரிஃப்பூங்காவில் நடைபெற்றது.






ஞாயிறு, டிசம்பர் 4

நமது ஊர் தலைவரின் செய்தி "தினமலர் நாளிதளில்"..

நமது ஊர் தலைவரின் செய்தி "தினமலர் நாளிதளில்"
Dinamalar
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் நவம்பர் 28ம் தேதி அஸ்கான் முதாயக் கூடத்தில் டைபெற்றதுதுவக்கமாக‌ கீழக்கரை மீதுர் ஹ்மான் இறைவங்களை ஓதினார்பொதுச்செயலாளர் குத்தாலம்  லியாக்கத் அலி லைமை தாங்கினார்துணைத்தலைவர் கூத்தல்லூர் அஹது முஹைதீன் முன்னிலை கித்தார்திண்டுக்கல் மால் முஹைதீன் வேற்புரை நிகழ்த்தினார்க்கள் தொடர்பு செயலாளர் திருப்பந்தாள் .முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார்.அமீரத்தின் 40 து தேசிய‌ தினத்தையும்ஈமான் 36 ம் ஆண்டு விழாவினையும் சிறப்புற‌ த்துவது குறித்து விவரித்தார்சிறப்பு அழைப்பாளராக‌ ங்கேற்ற‌ தாயத்திலிருந்து ருகை புரிந்துள்ள‌ திருப்பந்தாள் மாஅத் லைவர் ர்புதீனுக்கு ஈமான் துணைத்தலைவர் அஹது முஹைதீன் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்

நிகழ்வில் ஈமான் நிர்வாகிகள் காயல் ஹ்யா முஹ்யித்தீன்முதுவை ஹிதாயத்கீழை ஹமீது யாசின்டேஷா ஷீர் ற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ங்கேற்றுச் சிறப்பித்தர்.
நமது செய்தியாளர் முதுவை ஹிதாயத்

---நன்றி தினமலர்.

நமது ஊர் தலைவரின் செய்தி "மணிச்சுடரில் செய்திதாளில்"

நமது ஊர் தலைவரின் செய்தி "மணிச்சுடரில் செய்திதாளில்"
 - - நன்றி மணிச்சுடர் .

புதன், நவம்பர் 30

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் காயிதே மில்லத் தெரு ஜனாப்.அப்துல் அலி அவர்களின் தங்கை மற்றும் நூலகதெரு(அக்பர் தெரு) ஷேக் அலாதீன் தாயார் "குப்பும்மா" என்று அழைக்கபடும் இவர் இன்று காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் மறுமைக்காக நாம் அனைவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்வோம்.

செவ்வாய், நவம்பர் 29

நமது ஊர் தலைவருக்கு ஈமான் அமைப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருப்பனந்தாள் ஜமாஅத் தலைவர்.அல்ஹாஜ்.ஜனாப் சர்புதீன்அவர்களுக்கு இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன்( ஈமான் )அமைப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஈமான் துணைத்தலைவர் அவர்கள் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.


நிகழ்வின் போது ஈமான் அமைபின் பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ.லியாக்கத் அலி,ஈமான் மக்கள் தொடர்பு செயலாளர் A.முஹம்மது தாஹா,உறுப்பினர்கள்,TPLJI-UAE வின் பொது செயலாளர் பிர்தௌஸ் மற்றும் ஊடகத்துறை செயலாளர் மு.முபாரக் அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.


அணைக்கரை பாலம் மிக விரைவில் இயங்க போகிறது.

அணைக்கரை பாலம் மிக விரைவில் இயங்க போகிறது.
   நமது தொகுதி MP O.S .மணியன் விரைவில் மாவட்ட ஆச்சியரை சந்தித்து 
 அணைக்கரை பாலத்தை திறக்க இருப்பதாக கூறினார்.
   
REF : சன் நியூஸ்

திங்கள், நவம்பர் 28

ஜனாப்.முஹம்மது ரியாஸ் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் காயிதே மில்லத் தெரு ஜனாப்.முஹம்மது ஆரிப் இவர்களின் மகன் ஜனாப்.முஹம்மது ரியாஸ் (செல்லப்பா) அவருக்கு அழகான ஆண் குழந்தை 23 - 11 - 2011 புதன்கிழமை அன்று மதியம் பிறந்தது என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.

ஞாயிறு, நவம்பர் 27

திருப்பனந்தாள் ஜமாஅத் தலைவர்.அல்ஹாஜ்.சர்புதீன்க்கு அபுதாபியில் வரவேற்பு.

திருப்பனந்தாள் ஜமாஅத் தலைவர்.அல்ஹாஜ்.சர்புதீன் அவர்களுக்கு அபுதாபியில் திருப்பனந்தாள் ஜமாதுல் இஸ்லாமிய U.A.Eவின் அபுதாபிகிளை சார்பில் நமது ஊர் நண்பர் ஹிதயாதுல்லா இல்லத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அபுதாபி செயலாளர் ஜனாப்.தீன் முஹம்மது,ஹிதயாதுல்லா பொருளாளர் ஹாஜா நஜுமுதீன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளித்தனர்.
நிகழ்வின் போது TPLJI - UAE வின் உறுப்பினர்கள் ஜனாப்.முஸ்தபா,ஆசாத் அலி,அக்பர் அலி,நிசார் அலி,பைசல்,மாலிக்,முஹம்மது அலி,ஹபிப்ரஹ்மான்,ஹசன்,H.அனிஸ்,B.அனிஸ் மற்றும் பொது செயலாளர் பிர்தௌஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் TPLJI வின் உதவிகளை நினைவுகூர்ந்தும் பல ஆலோசனைகளையும்,பாராட்டுகளையும் தெரிவித்தார் நமது ஊர் தலைவர் ஜனாப்.சர்புதீன்.

கூட்டம் முடிந்தபின் ஹிதயாதுல்லா ஏற்பாடு செய்திருந்த விருந்துதில் அனைவரும் கலந்துகொண்டனர்.
---நமது செய்தியாளர் மு.முபாரக் அலி.

சனி, நவம்பர் 26

ஒரே இன்னிங்ஸ் சதம் மற்றும் 5 விக்கெட்: சாதனை பட்டியலில் இணைந்தார், அஸ்வின்.


* புதுமாப்பிள்ளையான இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த 25 வயதான அஸ்வின் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி கலக்கி வருகிறார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்த டெஸ்டில் சதம் அடித்ததுடன் (103 ரன்), ஏற்கனவே பந்து வீச்சிலும் முத்திரை பதித்து இருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 156 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் 49 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே இன்னிங்சில் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றிருக்கிறார். அதே சமயம் இந்த சாதனையை இரண்டு இந்தியர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். 1956-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் வினோமன்கட்டும் (184 ரன் மற்றும் 5-196), 1962-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் பாலி உம்ரிகரும் (172 ரன் மற்றும் 5-107) இந்த அரிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
 ஒரே இன்னிங்ஸ் சதம் மற்றும் 5 விக்கெட்: சாதனை பட்டியலில் இணைந்தார், அஸ்வின்
* ஒட்டுமொத்த டெஸ்ட் வரலாற்றில், ஒரே இன்னிங்சில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய 20-வது வீரர் அஸ்வின் ஆவார். இந்த சிறப்பம்சம் இதுவரை 27 முறை நிகழ்த்தப்பட்டுள்ளன. கடைசியாக தென்ஆப்பிரிக்காவின் காலிஸ் 2002-ம் ஆண்டு வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்டில் இந்த சாதனையை படைத்திருந்தார். அவர் 1999-ம் ஆண்டும் இந்த சாதனையை செய்திருந்தார்.
 
* அஸ்வின் பேட்டிங் வரிசையில் 8-வது வீரராக களம் இறங்கி இந்த சதத்தை பதிவு செய்திருக்கிறார். இந்த வரிசையில் இந்திய தரப்பில் இதுவரை 13 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் தரப்பில் 11 சதங்கள் 8-வது வரிசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன.
 
* இந்த டெஸ்டில் இரு அணிகளின் முதல் இன்னிங்சிசை எடுத்துக் கொண்டால், வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் 6 பேரும், இந்திய தரப்பில் 5 பேரும் 50 ரன்களுக்கு மேல் அதாவது மொத்தம் 11 பேர் அரைசதம் விளாசியிருக்கிறார்கள். டெஸ்டின் முதல் இன்னிங்சில் இரு அணி வீரர்களையும் சேர்த்து 11 அரைசதங்கள் அடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு 6 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் தலா 10 அரைசதங்கள் எடுக்கப்பட்டதே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.