இந்த வலைப்பதிவில் தேடு

புதன், அக்டோபர் 16

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்க​ள்..

 துபாய் ஈத் பெருநாள் - நமது ஊர் நண்பர்கள்
 
அனைவருக்கும் தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்..
துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் மக்கள் திரண்டனர்...
 
 
 
 
 
துபையில் ஈத் பெருநாள் திருப்பனந்தாள் மக்கள்  கோலாகல கொண்டாட்டம்...

 
 
நிகழ்வில் TPLJI - UAE வின் தலைவர் ,பொது செயலாளர்,பொருளாளர்,இணைபொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், ஷார்ஜாஹ்,அஜ்மான்,அபுதாபி  நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  நிகழ்வில் கலந்துகொண்டனர் .

சனி, செப்டம்பர் 21

துபாயில் உலகிலேயே உயரமான ‘புர்ஜ் கஃலிபா’ கட்டிடத்தின் கட்டுமானப் பணி தொடங்கியது (செப்.21, 2004)

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் அமைந்துள்ள வானளாவிய கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 2004-ம் ஆண்டு இதே தேதியில் ஆரம்பிக்கப்பட்டன. இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4-ஆம் தேதி இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 


2684 அடி உயரம் கொண்ட இந்த கட்டிடத்தில் 160 மாடிகள் அமைந்துள்ளன. இதுவே உலகின் உயரமான கட்டிடமும் ஆகும். இக்கட்டிடத்தின் உரிமை ‘இமார்’ என்ற சர்வதேச ரியல் எஸ்டேட் நிறுவனத்தைச் சார்ந்தது. இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசி நிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பட்டது. அப்போது, துபை வேர்ல்டன் கடன் சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல் அவுட் செய்ததன் நன்றிக்கடனாக ‘புர்ஜ் கலிஃபா’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


நன்றி : மாலைமலர் 
http://www.maalaimalar.com/2013/09/20211033/dubai-burj-khalifa-constructio.html

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் மதீனா  தெரு ஜனாப்.ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் சகோதரி 

ஜெமிலா பீவி அவர்கள் நேற்று மாலை 6.30 மணியளவில். வ‌ஃபாத்தானார்..

ஜனாஸா திருலோக்கில் காலை 11.00 மணியளவில் அடக்கம் செய்யப்படும். 

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

ஞாயிறு, செப்டம்பர் 8

7வது அத்தியாயத்தின் முதல் கோடீஸ்வரர் தாஜ் முகம்மது ரங்ரீஸ்!

மும்பை: அமிதாப் பச்சன் நடத்தி வரும் 7வது கோன் பனேகா குரோர்பதி
 நிகழ்ச்சியின் முதல் கோடீஸ்வரர் என்ற பெருமையை உதய்ப்பூரைச் 
சேர்ந்த வரலாற்று ஆசிரியர் தாஜ் முகம்மது ரங்ரீஸ் பெற்றுள்ளார். 2013 
கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் அவர் சிறப்பாக வெற்றி பெற்று ரூ. 1 
கோடிப் பரிசைத் தட்டிச் சென்றுள்ளார். பரிசை வென்ற பின்னர் அவர் சொன்ன வார்த்தை - என்னால் நம்பவே முடியவில்லை என்பதே. ஒரு கோடியை வென்று தரும் கேள்வியை அமிதாப் பச்சன் கேட்டபோது அரங்கமே படு நிசப்தமாக காணப்பட்டது. ஆனால் ரங்ரீஸ் சூப்பராக பதிலை சரியாக சொல்லி அத்தனை பேரையும் உற்சாகக் கடலில் ஆழ்த்தினார்.

கோன் பனேகா குரோர்பதி -7வது அத்தியாயத்தின் முதல் கோடீஸ்வரர் தாஜ் முகம்மது ரங்ரீஸ்!

உதய்ப்பூரில் உள்ள லேக்ஸ் பதேகர் பள்ளியில் வரலாற்று ஆசிரியராக இருக்கிறார் ரங்ரீஸ். இவருக்கு 7 வயதில் மகள் உள்ளார். 
இவருக்கு பாதிப் பார்வை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தான் வென்றுள்ள பணத்தை வைத்து தனது மகளுக்கு மீண்டும் பார்வை முழுமையாக திரும்புதவற்கான சிகிச்சைகளை செய்யப் போவதாக கூறியுள்ளார் ரங்ரீஸ். 
மேலும் ஒரு வீடு வாங்க விரும்புகிறேன். வசதியில்லாத 3 பெண் குழந்தைகளுக்கு இலவச கல்வி உதவி செய்யப் போகிறேன். இரண்டு ஆதரவற்ற பெண்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கப் போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 15ம் தேதி ரங்ரீஸ் கலந்து கொண்ட நிகழ்ச்சி சோனி டிவியில் 
ஒளிபரப்பாகவுள்ளது.


வியாழன், ஆகஸ்ட் 29

பிளஸ் டூ முடித்தவர்களுக்கு தமிழக அரசின் இலவச பயிற்சி வகுப்பு.


Free training is going to conduct by TN Govt effectively from 5th sep 2013


1.Hardware and Networking

2.Accounting with Tally

3.Web designing


Eligibility: +2 pass (Age: 18-45)

Last date for applying 3rd sep 2013

Fore more details and application visit www.editn.in


 

ஞாயிறு, ஆகஸ்ட் 25

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் மதீனா  தெரு ஜனாப். ஜலால் மற்றும் ஜனாப்.முஹம்மது ரியாஸ்

இவர்களின்  தகப்பனார் ஜனாப்.அப்துல் முனாப்  அவர்கள் இன்று காலை  வ‌ஃபாத்தானார்..

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 11

இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்! முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!

சென்னை: திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசைக் கல்லூரியை தொடங்கியுள்ளார். இதை தொழிலதிபர் முகேஷ் அம்பானி நேற்று திறந்து வைத்தார்.

இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!  முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!

சென்னை அரும்பாக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் கே.எம். இசை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியை ரிலையன்ஸ் நிறுவன பொது மேலாளர் முகேஷ் அம்பானி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இசைக் கல்லூரியை துவக்கினார் ஏ.ஆர். ரஹ்மான்!  முகேஷ் அம்பானி திறந்து வைப்பு!!இந்நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானியும் பங்கேற்றார். இசையில் டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புகளை வழங்க உள்ளது இக் கல்லூரி என்றார் ஏ.ஆர். ரஹ்மான்.

More details : http://tamil.oneindia.in/movies/news/2013/08/ar-rahman-opens-new-vistas-with-music-college-180979.html
.

வெள்ளி, ஆகஸ்ட் 9

துபாய் ஈத் பெருநாள் - நமது ஊர் நண்பர்கள்

துபாய் ஈத் பெருநாள் - நமது ஊர் நண்பர்கள்
துபாய் தமிழ் பஜாரில் நமது ஊர் மக்கள் திரண்டனர்...


 
 
துபையில் ஈத் பெருநாள் திருப்பனந்தாள் மக்கள்  கோலாகல கொண்டாட்டம்...




 
நிகழ்வில் TPLJI - UAE வின் பொது செயலாளர்,பொருளாளர்,இணைபொருளாளர்,ஊடகத்துறை செயலாளர், ஷார்ஜாஹ்,அஜ்மான்,அபுதாபி  நண்பர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர்  நிகழ்வில் கலந்துகொண்டனர் .
 

திங்கள், ஆகஸ்ட் 5

செவ்வாய், ஜூன் 4

ஹாங்காங்கில் புதிய சரித்திரத்தை துவங்கும் எலக்ட்ரிக் பஸ்.

ஹாங்காங்கை சேர்ந்த சிஎல்பி மின் உற்பத்தி நிறுவனம் தனது பணியாளர்களின் போக்குவரத்துக்காக புதிய எலக்ட்ரிக் பஸ்சை வாங்கியிருக்கிறது. ஹாங்காங் நகரில் வலம் வரப் போகும் முதல் எலக்ட்ரிக் பஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு உகந்த அம்சங்கள் கொண்ட இந்த பஸ் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும், பிற நிறுவனங்களுக்கும் இந்த பஸ்சை சோதனை செய்து கொள்ள அனுமதிக்க இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பஸ்சின் கூடுதல் அம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

ஞாயிறு, ஏப்ரல் 7

பிரமாண்ட நீர்நிலை பொழுதுப்போக்கு பூங்காவில் பெண்களுக்கு மட்டும் தனி அனுமதி நேரம்.

வளைகுடா நாடுகளில் ஒன்றான அபுதாபியில் 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பார்க்' என்ற பெயரில் பிரமாண்டமான நீர்சார்ந்த பொழுதுப் போக்கு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பலகோடி டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பொழுதுப் போக்கு பூங்காவிற்குள் கண்ணைக் கவரும் நீச்சல் குளங்கள், வணிக வளாகம், வீடியோ கேம்ஸ், உணவகம் என நவீன வசதிகள் அனைத்தும் சுற்றுலா வருபவர்களின் சிந்தையை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

பெண்களுடன் ஆண்களும் சேர்ந்து ஒரே நேரத்தில் இங்கு உல்லாசமாக பொழுதை கழித்து வருகின்றனர். இருப்பினும், இஸ்லாமிய மத கோட்பாடுகளின் படி, ஆண்கள் குளிக்கும் இடத்தில் தாங்களும் சேர்ந்து 
குளிப்பதை அபுதாபியில் வாழும் முஸ்லிம் பெண்கள் விரும்பவில்லை. 


பெண்கள் மட்டும் பொழுதை உல்லாசமாக கழிக்கும் வகையில் இந்த பொழுதுப் போக்கு பூங்காவில் தனிநேரம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இந்த கோரிக்கைகளை பரிசீலத்த பொழுதுப் போக்கு பூங்காவின் நிர்வாகிகள், ஏப்ரல் 18ம் தேதியிலிருந்து, வியாழன் தோறும் இரவு 8 மணியிலிருந்து நள்ளிரவு வரை பெண்கள் மட்டும் இங்கு வருவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

அவ்வேளைகளில், ஆண்கள் உள்ளே நுழைய தடை விதிக்கப்படும். 8 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மட்டும் வயதுக்கான சான்றிதழை காண்பித்து, உறவினர்களுடன் கேளிக்கையில் பங்கேற்கலாம் என 'யாஸ் வாட்டர் வேர்ல்ட் பூங்கா'வின் பொது மேலாளர் மைக் ஓஸ்வால்ட் தெரிவித்துள்ளார்.

நன்றி : மாலை மலர் 

வரலாற்றில் இன்று.

உலக நலவாழ்வு நாள்

1521 - பெர்டினென்ட் மகலன் பிலிப்பீன்சின் சேபு தீவை அடைந்தார்.
1541 - பிரான்சிஸ் சேவியர் போர்த்துக்கீச இந்தியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு லிஸ்பன் நகரில் இருந்து புறப்பட்டார்.
1795 - பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது.
1827 - ஆங்கிலேய வேதியியலாளர் ஜோன் வோக்கர் தான் கண்டுபிடித்த தீக்குச்சியை விற்பனைக்கு விட்டார்.
1906 - வேசுவியஸ் மலை தீக்கக்கியதில் நேப்பில்சில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1906 - ஸ்பெயின், மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் மொரோக்கோ வந்தது.
1927 - முதலாவது தொலை தூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் டிசி, நியூயோர்க் நகரம் ஆகியவற்றிற்கிடையில் இடம்பெற்றது.
1928 - வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார்.
1933- ஜெர்மனியிலிருந்து அரசுப் பணிச் சட்டம் என்ற ஒரு சட்டத்தை நிறைவேற்றி ஹிட்லர் அனைத்து யூதர்களையும் அரசு பணிகளிலிருந்து நீக்கினார்.
1939 - இரண்டாம் உலகப் போர்: இத்தாலி அல்பேனியாவை முற்றுகையிட்டது.
1942 - இரண்டாம் உலகப் போர்: ஆட்மிரால்ட்டி தீவுகளை ஜப்பான் கைப்பற்றியது.
1943 - யூதப் படுகொலைகள்: உக்ரேனில் டெரெபோவ்லியா என்ற இடத்தில் நாசிகள் 1,100 யூதர்களை அரை நிர்வாணமாக்கி நகர வீதிவழியே அழைத்துச் சென்று பின்னர் அவர்களைச் சுட்டுக் கொன்று புதைத்தனர்.
1945 - இரண்டாம் உலகப் போர்: உலகின் மிகப்பெரும் போர்க்கப்பலான ஜப்பானின் யமாட்டோ ஓக்கினாவா அருகில் தென்கோ நடவடிக்கையின் போது அமெரிக்கப் கடற்படையினரால் மூழ்கடிக்கப்பட்டது.
1946 - பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது.
1947 - மோட்டார் வாகன உலகின் மன்னன் என்று போற்றப்படும் Henry Ford மரணம் அடைந்தார்.
1948 - உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது.

1948 - சீனாவில் ஷங்காயில் பௌத்தமத தலம் ஒன்று எரிந்ததில் 20 புத்த குருக்கள் கொல்லப்பட்டனர்.
1963 - யூகோஸ்லாவியா சோசலிசக் குடியரசாகியது. மார்ஷல் டீட்டோ அதிபரானார்.
1964 - ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது.
1978 - யாழ்ப்பாணத்தில் இலங்கையின் காவல் துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை உட்பட பல காவல் துறையினர் போராளிகளால் கொல்லப்பட்டனர்.
1978 - நியூத்திரன் குண்டு தயாரிக்கும் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா கைவிட்டது.
1983 - ஸ்ரோரி மஸ்கிரேவ், டொன் பீட்டர்சன் இருவரும் மீள் விண்ணோடத்தில் இருந்து விண்ணில் நடந்த முதல் வீரர்களானார்கள்.
1992 - ஸ்ருப்ஸ்கா குடியரசு விடுதலையை அறிவித்தது.
1994 - ருவாண்டாவின் கிகாலியில் டூட்சி இனத்தவர்களை அழிக்கும் படலம் ஆரம்பமானது.
2001 - மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது.
2003 - அமெரிக்கப் படைகள் பக்தாத் நகரைக் கைப்பற்றினர். சதாம் உசேனின் அரசு இரு நாட்களின் பின்னர் வீழ்ந்தது.

ஞாயிறு, மார்ச் 31

கிவி பழத்தின் மருத்துவ பயன்கள்.

கிவியின் நன்மைகள் கிவி பழத்தில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதனை ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிட்டு வந்தால், மூச்சுக்கோளாறான ஆஸ்துமா நீங்கும்.

மேலும் ஏப்ரல் 2004ல் நடந்த ஆய்வின் படி, வாரத்திற்கு 5 முதல் 7 பழங்கள் சாப்பிடும் குழந்தைகளின் மூச்சுக்கோளாறு பிரச்சனை குறைவாக சாப்பிடுபவர்களை விட 44% குறைந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிவி மாதிரி வாழைப்பழங்களில் பொட்டாசியம் அதிகம் இருக்கிறது. ஆனால் வாழைப்பழங்களை ஒப்பிடுகையில் கிவி பழத்தில் கலோரியின் அளவு குறைவு. கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் சோடியத்தின் அளவு குறைகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் சோடியத்தின் அளவு குறைவதால் இதய நோய் வராமல் தடுக்கிறது. 

அனைவருக்கும் தெரியும் வைட்டமின் ஈ அதிகமாக இருக்கும் உணவில் கொழுப்பும் அதிகமாக இருக்கும். ஆனால் கிவி பழத்தில் வைட்டமின் ஈ அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளது. இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாவதால் ஆரோக்கியமான இதயத்தையும் தருகிறது.

போலிக் ஆஸிட் கிவி பழத்தில் அதிகமாக, இருப்பதால் கர்பிணிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனென்றால் குழந்தைகளுக்குச் செல்லும் நரம்புக்குழலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுப்பதோடு, கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்களையும் தருகிறது.

மேலும் இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு சிறந்ததோடு மட்டுமல்லாமல் இதய நோய் வராமலும் தடுக்கிறது. டயட் மேற்கொள்வதற்கு சிறந்ததாகவும் உள்ளது. ஏனென்றால் இதில் இரும்புச்சத்து இருப்பதால் பசியையும், செரிமானத் தன்மையையும் அதிகரிக்கும்.

மேலும் இரும்புச்சத்து கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இதய நோய் மற்றும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைப்பதோடு, உடலுக்கு சிறந்த பழமாகும். கிவி பழத்தில் ஜிங்க் இருப்பதால் 
தோல், முடி, பல் மற்றும் நகங்களுக்கு சிறந்தது.

நன்றி : மாலைமலர் .

வியாழன், மார்ச் 28

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் அல் ஜாமியா தெரு ஜனாப்.முஹம்மது ரபீக் மற்றும் ஜனாப்.நஜீர் அஹமது  
இவர்களின்  தகப்பனார் ஜனாப்.அப்துல் ரஹிம்  அவர்கள் இன்று காலை  வ‌ஃபாத்தானார்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்."

அன்னார‌து ம‌ஃபிர‌த்துக்காக‌ துஆச் செய்திட‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.