தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
1907-ம் ஆண்டு முதல் எழும்பூர் ரெயில் நிலையம் செயல்பட்டு வருகிறது. இட நெருக்கடியை காரணம் காட்டி எழும்பூரில் இருந்து புறப்படும் அனைத்து ரெயில்களையும் தாம்பரத்தில் இருந்து புறப்படும் திட்டத்தை ரெயில்வே துறை தயாரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.
ராயபுரம் ரெயில் நிலையத்தை சென்ட்ரல், எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அடுத்தப்படியாக 3-வது ரெயில் முனையமாக்கினால் பயணிகள் அனைவரும் பயன் அடைவார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு ரெயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் அமைப்பின் சார்பில் 22-ந்தேதி (செவ்வாய்) காலை 10.30 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இருந்து தெற்கு கூவம் சாலை சித்ரா திரையரங்கம் லாங்ஸ் தோட்ட சாலை வழியாக எழும்பூர் பாந்தியன் சாலைக்கு நடை பயணம் நடைபெறும்.
இவ்வாறு விக்கிரமராஜா கூறி உள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக