ஏர் இந்தியா நிறுவனத்தில் எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க நவ.17 கடைசி நாள்
ஏர் இந்தியா சென்னை நிறுவனத்தில் எழுத்தர் பணிகள் (சிவில்), எழுத்தர் பணிகள் (எலக்ட்ரிகல்) ஆகிய பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இப்பதவிகளுக்கு ஒப்பந்த ஊதியமாக மாதத்துக்கு ரூ.12,500 வழங்கப்படும். 18 வயதிலிருந்து 58 வயது வரையுள்ள 3 ஆண்டு டிப்ளமோ (சிவில் இன்ஜினியரிங்) படித்து கட்டட கட்டுமானம் மற்றும் பழுது பார்த்தல் போன்ற துறையில் 5 ஆண்டு அனுபவம் அல்லது சிவில் இன்ஜினியரிங் பட்டப்படிப்பு படித்து 2 ஆண்டு அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப நவ.17 கடைசி தேதியாகும். முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் General Manager (Personnel), Air India Ltd, Airlines Houses, Meenambakkam, Chennai-600027 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் கேப்டன் சீ.விஜயகுமார் (ஓய்வு) தெரிவித்தார்.
மாதிரி விண்ணப்ப படிவம் மற்றும் விவரம் வேண்டுவோர் சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரர் நல அலுவலகத்தை வேலை நாள்களில் அணுகலாம் என்றும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக