இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, நவம்பர் 18

துபாய் தமிழ்ச் சங்க தலைவிக்கு மகாத்மா காந்தி விருது



துபாய்: துபாய் தொழிலதிபர் மற்றும் சமூக சேவகருக்கு யுனெஸ்கோவின் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. துபாய் ஈடிஏ அஸ்கான் குழும மேலாண்மை இயக்குநர் செய்யது எம்.ஸலாஹுத்தீன் யுனெஸ்கோவின் மௌலானா ஜலாலுதீன் ரூமி விருதினை யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநரும், மொரிஷியஸ் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் வழங்கி கௌரவித்தார். இவ்விருது செய்யது எம்.ஸலாஹுத்தீனின் மனிதநேயப் பணிகளுக்காகவும், 70,000 க்கும் மேற்பட்டோருக்கு தனது நிறுவனத்தில் பணி வழங்கி ஏழ்மையை விரட்ட பாடுபட்டு வருவதற்காகவும் வழங்கப்பட்டது.
துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷுக்கு மகாத்மா காந்தி விருதினை யுனெஸ்கோவின் முன்னாள் இயக்குநரும், மொரிஷியஸ் முன்னாள் கல்வி அமைச்சருமான ஆறுமுகம் பரசுராமன் வழங்கி கௌரவித்தார். இவ்விருது ஜெயந்தி மாலா சுரேஷின் மனித நேயப் பணிகளுக்காகவும், துபாய் தமிழ்ச் சங்கத்தின் மூலம் கலை, கலாச்சாரச் சேவைக்காவும் வழங்கப்பட்டது. இவ்விருது துபாய் தமிழ்ச் சங்க 10ம் ஆண்டு விழாவின் போது ஆயிரக்கணக்கானோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக