இந்த வலைப்பதிவில் தேடு

புதன், நவம்பர் 23

'நெசவாளர்கள் தோழன்' சென்னை பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் விருது.

சென்னை: நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் பொது மக்கள் பயன் பெறும் வகையில் சிறப்பாக சேவை செய்தமைக்காக சென்னை பல்கலைக்கழகத்திற்கு மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
Madras University
இது குறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை சார்பில் 42வது நாட்டு நலப்பணி திட்ட நிறுவன நாள் விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் சிறப்பாக செயலாற்றிய பல்கலைக்கழகங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

நாட்டு நலப்பணித் திட்டங்கள் மூலம் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றிய சென்னை பல்கலைக்கழகத்திற்கு முதல் பரிசு மற்றும் ரூ.2 லட்சத்துக்கான காசோலையையும் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவாசகம் முன்னிலையில் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கினைப்பாளர் என்.ராஜா உசைனிடம் வழங்கினார்.

சென்னை பல்கலைக்கழகம் சார்பில் 'கைத்தறிக்கு கை கொடுப்போம்' என்ற திட்டத்தின் மூலம் ரூ.3.8 கோடி மதிப்புள்ள கைத்தறி துணிகளை விற்று 6 லட்சம் நெசவாளர் குடும்பங்களுக்கு உதவியதற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக