சிறந்த வேலைவாய்ப்பு தரும் படிப்புகள்
* கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறையில் கம்ப்யூட்டர் தொடர்பான செயல்முறை மற்றும் கோட்பாடுகள், அவற்றின் பயன்கள் குறித்து கற்றுத் தரப்படுகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பல துணைப் பிரிவுகள் உள்ளன.
கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், கம்ப்யூட்டேஷனல் பிராப்ளம்ஸ், புரோகிராமிங், குறிப்பிட்ட பிரச்னைகளுக்கு குறிப்பிட்ட சாப்ட்வேரில் அளிக்கப்படும் தீர்வுகள், மனிதர் மற்றும் கம்ப்யூட்டர் தொடர்புகள், அல்காரிதம், டேட்டா அமைப்பு, கம்ப்யூட்டர் ஆர்க்கிடெக்சர், சாப்ட்வேர் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் நெட்வொர்க், மைக்ரோபிராசஸர் என்று ஏராளமான பிரிவுகள் உள்ளன.
கம்ப்யூட்டர் துறையில் பயிலும் மாணவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் உள்ளன. இத்துறையில் சராசரி சம்பளம் பிற துறைகளின் சம்பளத்தைவிட அதிகம். இதனால் கடும் போட்டி காணப்படுகிறது.
*சைட்டோ டெக்னாலஜி இது மருத்துவத்துறை சார்ந்த படிப்பு. மனித செல்களை ஆராய்ந்து நோய்க்கான காரணத்தை கூறுவது தான் சைட்டோ டெக்னாலஜிஸ்டின் வேலை. உயிரியல், வேதியியல், மனித உடற்கூறியியல் குறித்து சைட்டோ டெக்னாலஜியில் கற்றுத்தரப்படுகிறது.
கேன்சர் செல்கள் அல்லது நோய்கிருமிகளால் பாதிக்கப்பட்ட செல்களை ஆராயும் சைட்டோ டெக்னாலஜிஸ்ட்கள், சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு உதவுகின்றனர். தர மேம்பாடு, ஆய்வக நிர்வாகம் போன்ற துறைகளிலும் இவர்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது. பொறுப்புகள் அதிகமுள்ள துறையை விரும்புவோர் சைட்டோ டெக்னாலஜி படிக்கலாம். வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
* கெமிக்கல் இன்ஜினியரிங் வேதியியல், பொறியியலுடன் கணித அறிவும் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்புக்கு அவசியம். பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி மற்றும் பராமரிப்பு பொறுப்புகளை கெமிக்கல் இன்ஜினியர்களுக்கு வழங்குகின்றனர். டிடர்ஜென்ட், எரிபொருள், பிளாஸ்டிக், மருந்துப்பொருட்கள் தொடர்பான ஆராய்ச்சியில் இவர்களது பங்களிப்பு அதிகம். செலவை குறைத்து உற்பத்தியை அதிகரிப்பது, தரக்கட்டுப்பாடு போன்ற வற்றையும் கெமிக்கல் இன்ஜினியர்கள் கவனிக்கிறார்கள்.
வேதியியல் துறையில் உள்ள அனைத்து பெரிய நிறுவனங்களிலும் கெமிக்கல் இன்ஜினியர்கள் தேவைப்படுகிறார்கள். மெட்டீரியல் சயின்ஸ், உணவு உற்பத்தி, சுற்றுச்சூழல் ஆராய்ச்சி, நிர்வாகம், விற்பனை துறைகளை இவர்களால் கையாள முடியும். பயோ டெக்னாலஜி, பெட்ரோலிய நிறுவனங்கள், சேவை நிறுவனங்களிலும் கெமிக்கல் இன்ஜினியர்களுக்கு வாய்ப்புகள் உள்ள
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக