தமிழக அரசின் பால் மற்றும் பஸ் கட்டண உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்தும் பரிந்துரையால், அனைத்து தரப்பினரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் எப்போதாவது பால் விலை உயரும், சில மாதம் கழித்து பஸ் கட்டணம் உயரும், ஆண்டுக்கு ஒரு முறை மின்கட்டணம் உயரும். (மத்திய அரசு தன் பங்கிற்கு மாதந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது தனிக்கதை). இப்படித்தான் விலை உயர்வு எட்டி பார்க்கும்.
ஆனால் பால் விலை ஏற்றம், பஸ் கட்டணம் உயர்வு, மின் கட்டணத்தை உயர்த்த பரிந்துரை என "எல்லா இடியும் மக்கள் தலையில் விழுந்த' நேற்றைய நாள், தமிழக மக்களுக்கு ஒரு அதிர்ச்சியான நாள். நிதி நிலையை காரணம் காட்டி, மத்திய அரசு தமிழகத்திற்கு நிதி தராததை குறிப்பிட்டு, முதல்வர் அறிவித்த விலை உயர்வு நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
அதிர்ச்சியில் உறைந்து போன திண்டுக்கல் வாசிகள் சிலரின் குமுறல் இதோ:
ஆர்.செல்வி (குடும்பத் தலைவி, திண்டுக்கல்): கடந்த ஆட்சியில் இலவச "டிவி' வழங்கப்பட்டது. இந்த ஆட்சியில் கிரைண்டர், மிக்சி, மின்விசிறி என, இலவசங்கள் தொடர்கின்றன. எந்த வீட்டில் "டிவி', மிக்சி இல்லை. இவற்றிற்கு செலவிடும் பணத்தை, அரசு ஆக்கப்பூர்வமாக செலவு செய்தால், பால், பஸ், மின்சார கட்டண உயர்வுகளை தவிர்க்கலாம்.
சி.மூர்த்தி (ஆட்டோ டிரைவர், திண்டுக்கல்): பெட்ரோல் விலை உயர்வால் வருமானம் குறைந்துவிட்டது. இந்நிலையில் பால் விலை உயர்வால் அடித்தட்டு மக்களுக்கு பெரும்பாதிப்பு ஏற்படும். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துவரும் நிலையில் பால், பஸ் கட்டண உயர்வால் மக்கள் அவதிப்படுவர்.
எஸ்.ராணி (பூ வியாபாரி, திண்டுக்கல்): பூ விற்றால் தான் பிழைப்பு. குழந்தைகளுக்கு பால் கொடுப்பதை தவிர்க்க முடியாது. விலைவாசி உயர்வால் பூ வியாபாரமும் சரி இல்லை. அரிசி, பருப்பு, காய்கறி விலை உயர்ந்த நிலையில் அத்தியாவசிய பொருளான பால் விலை உயர்வை சமாளிப்பது எப்படி? என, தெரியவில்லை. இந்த ஆட்சியிலும் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
எஸ்.சுபேதார் (பழ வியாபாரி, திண்டுக்கல்): ஏற்கனவே மின்சாரம் எப்போது வரும், போகும் என, தெரியவில்லை. இந்நிலையில் மின்சாரத்திற்கு கட்டண உயர்வு கேலிக்கூத்தானது. கடந்த ஆட்சியில் பஸ் கட்டணம் மறைமுகமாக உயர்த்தப்பட்டது. தற்போதைய உயர்வு, ஏழை மக்களை பாதிக்கும். பஸ் தொழிலை அரசு முழுமையாக தனியாருக்கு கொடுத்துவிட்டால் நஷ்டம் வராது.
ஜெ.சவேரியார் (ஜூஸ் கடை உரிமையாளர், திண்டுக்கல்): பால் அத்தியாவசிய பொருள்; அனைத்து குடும்பத்திலும் பயன்படுத்துகின்றனர். இதன் விலை உயர்வு மேல்மட்டம் முதல் அடித்தட்டு வரை பாதிக்கும். இதற்கு பதிலாக மதுபான விலையை உயர்த்தலாம். அரசுக்கு நேரடி வருமானமாகவும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக