இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், நவம்பர் 21

பெரிய கீ பட்டன்களுடன் முதியவர்களுக்கான ஸ்பெஷல் மொபைல்!


மொபைலும் கையுமாக இருக்கிறீர்களே என்ற பேச்சுக்களை இதுவரை இளைஞர்கள் கேட்க வேண்டி இருந்தது. ஆனால், இனி முதியவர்களும் அந்த பேச்சுக்களை கேட்க வேண்டி இருக்கும்.
Emporia RL 1Mobile
முதியோர்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஆர்எல்-1 என்ற புதிய மொபைலை உருவாக்கியிருக்கிறது எம்போரியா நிறுவனம்.
இந்த மொபைலின் தனித்துவமே, முதியோர்களும் இந்த ஆர்எல்-1 மொபைலை சுலபமாக பயன்படுத்தலாம் என்பது தான்.
இதில் உள்ள பட்டன்கள் முதியவர்களுக்கு ஏற்றதாக பெரிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதோடு ஒரு பட்டனுக்கும் மற்றொரு பட்டடனுக்கும் இடையில் இடைவெளியும் இருக்கிறது.
இதனால் எந்த விதமான சிரமமும் இல்லாமல் மொபைல் பட்டன்களை எளிதாக அழுத்தலாம்.
டைப் செய்யும் எழுத்துக்களின் அளவை திரையில் பெரிதாகவும், சிறிதாகவும் அட்ஜெஸ்ட் செய்யலாம்.
கண்களில் குறைபாடு இருந்தால்கூட இந்த மொபைல எளிதாக பயன்படுத்த வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
எனவே, இந்த மொபைலை பொறுத்த வரையில், எழுத்துககளை சிரமபட்டு பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த ஆர்எல்-1 மொபைல் 1.8 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும்.
நீடித்து உழைக்கும் பேட்டரி இதில் உள்ளது. அது மட்டும் அல்லாது கார் சார்ஜர் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
பெரிய கீப்பேடையும் இது கொண்டுள்ளதால் முதியவர்களுக்கு வசதியாக இருக்கும்.
முதியவர்கள் மட்டுமல்ல, பெரிய கீப்பேட் கொண்ட மொபைலை விரும்பும் இளைஞர்களும் கூட இந்த மொபைலை தேர்வு செய்யலாம்.
அனைவருக்கும் ஏற்ற வகையில் இந்த மொபைலின் விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக