விமான எரிபொருள் விலை சமீபகாலமாக கடுமையாக உயர்ந்து விட்டது. 40 சதவீதம் அளவுக்கு எரிபொருள் விலை உயர்ந்து விட்டதால் எல்லா விமான நிறுவனங்களும் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்பட 5 விமான நிறுவனங்கள் ஜூலை- செப்டம்பர் மாதங்களில் மட்டுமே ரூ.2500 கோடிக்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளன.
இந்த தொடர் இழப்பால் தனியார் விமான நிறுவனங்கள் திணறியபடி உள்ளன. கிங்பிஷர் நிறுவனம் தனது 400க்கும் மேற்பட்ட விமான சேவையில் சுமார் 200 சேவைகளை நிறுத்தி விட்டது. வங்கிகள் ரூ.400 கோடி கடன் கொடுத்தால்தான் விமான நிறுவனத்தை நடத்த முடியும் என்ற சூழ்நிலைக்கு கிங்பிஷர் நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.
வருவாய் இழப்பை சரி கட்ட கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறு வழி இல்லை என்ற முடிவுக்கு விமான நிறுவனங்கள் வந்துள்ளன. சுமார் 25 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிகிறது. அடுத்த மாதம் (டிசம்பர்) முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது. இதை மத்திய விமான போக்கு வரத்துத்துறை கண் காணித்து வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக