ஆவணியாபுரம் பள்ளியில் தேசிய கல்வி உரிமை நாள்
கும்பகோணம் அருகேயுள்ள ஆவணியாபுரம் கிரசண்ட் மேல்நிலைப் பள்ளியில் இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மெüலானா அபுல்கலாம் ஆசாத் பிறந்த நாள் தேசிய கல்வி உரிமை நாளாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் அ. சாகுல்ஹமீது தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் முனைவர் மு. செல்வசேகரன் முன்னிலை வகித்தார்.
விழாவில் மெüலானா அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மன்மோகன் சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபல் ஆகியோர் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறும் விதத்தில் அனுப்பிய கடிதங்களை மாணவிகள் வாசித்தனர்.
தொடர்ந்து, அனைத்து மாணவ, மாணவிகளும் மெüலான அபுல்கலாம் ஆசாத்தின் பிறந்த நாளை தேசிய கல்வி உரிமை நாளாகக் கருதி கல்வியில் சிறந்து விளங்குவது என உறுதி ஏற்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக